பயனர்:Dr R Paarivallal/மணல்தொட்டி

வீரத்திருமகன் உதயப்பெருமாள் கவுன்டர் இது ஒரு வரலாற்று சரித்திரம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் கொங்கு நாட்டின் ஓமலூர் தாரமங்கலம் பகுதியில் பிறந்தவர் உதயப்பெருமாள் கவுன்டர் விடுதலைப் போரில் வெள்ளையர்களை எதிர்த்த மாவீரர். இவர் வெள்ளையர் படையில் சேர்ந்து 10 ஆண்டுகளாக துப்பாக்கி சுடுதல், தோட்டா தயாரித்தல் என போருக்கு தயார் ஆனவர். இவரை துப்பாக்கிக்கவுன்டர் என்றே அனைவரும் அன்போடு அழைத்துள்ளனர். இதனை அறிந்த வெள்ளயர்கள் அவரைக் கொல்ல திட்டமிட்டனர். அங்கிருந்து தப்பித்து சிவகங்கையில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியாருடன் சேர்ந்து மாபெரும் போர் நடத்திய ஒரு சரித்திர நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சிவகங்கையில் பெருமழை காரணமாக மறவமங்கலம் கண்மாய் உடைப்பு ஏற்ப்பட்டு மக்கள் திரண்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். மருது சகோதரர்களும் அங்கு வந்து உடைப்பை அடைத்துக்கொண்டு இருந்தனர். இதை அறிந்த உதயப்பெருமாள் கவுன்டர் அங்கு சென்று தன்னையும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உடைப்பு அடைக்கப்பட்டதும், மகிழ்ந்திருந்த பெரியமருது மக்களைப் பார்த்து "யாரேனும் இந்தக் கண்மாயில் நீந்தி இக்கரையில் இருந்து அக்கரை செல்கிறார்களோ அவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும்" என அறிவித்தார். இதைக் கேட்டதும் கவுன்டர் உடனே குதித்து நீந்தி திருப்பியும் வந்தார். அதிசயித்த பெரிய மருது "யார் நீ?" என கேட்டதும், தான் கொங்கு நாட்டை சேர்ந்தவன், தனக்கு துப்பாக்கி சுடுதல் மிகவும் பிடித்த தொழில் எனவும் அறிமுகம் ஆனார். மருது, உதயப்பெருமாளைப் பார்த்து " வானத்தில் பறக்கும் அந்த வல்லூறுவை சுட்டு வீழ்த்துமாறு கூறினார், உதயப்பெருமாள் உடனே சுட்டு வீழ்த்தினார் இதைக் கண்ட மருது உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக்கேட்டார். தனக்கு பரிசு ஏதும் வேண்டாம், தன்னையும் விடுதலைப்போரில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார், மருதுவும் மகிழ்ச்சியோடு படையில் சேர்த்து திருப்பாச்சேத்தி (திருப்பாச்சி) கிராமத்திற்கு அம்பலகாரராக அறிவித்தார்.

07.06.1801ம் ஆண்டு திருப்புவனம் திருப்பாச்சேத்தி வழியாக இராமநாதபுரம் பகுதிக்கு மேஜர் கிரே தலமையிலான வெள்ளையர் படை வருவதை அறிந்த கவுன்டர் நடத்திய போரில் மேஜர் கிரே சுட்டுக்கொள்ளப்பட்டார், தளபதி நாக்கின் ஈட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். இந்த தாக்குதல் குறித்து "தளபதி வெல்ஸ்" தனது நாட்குறிப்பில் குறித்துள்ளார். இந்த போரில் வெற்றி பெற காரணமான கவுன்டருக்கு திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோவிலில் சிலை வைத்துள்ளார் மருது.

இந்தப்போரில் தோல்வியடைந்ததை அறிந்த கர்னல் அக்னியூ தமது படையுடன் கடும்கோபத்துடன் தனது பீரங்கிப் படைகளுடன் காளையார்கோவில் நோக்கி போருக்கு சென்றார். இதில் கவுன்டர் துப்பாக்கியால் சுட்டபோது, அக்னியூ வளர்த்த வெள்ளைக் கரடி தன் உயிரைக்கொடுத்து அக்னியூவைக் காப்பாற்றியது. இதனால் கடும்கோபம் கொன்ட அக்னியூ வெள்ளையருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த உதயப்பெருமாள் கவுன்டரை வீரமரணம் அடையச்செய்தார். கெளரிவல்லபர் பதவிக்கு வந்ததும் உதயப்பெருமாள் கவுன்டர் அவர்களுக்கு காளையார்கோவில் (சொர்ணகாளீஶ்வரர் கோவில் நுழைவு வாயிலில்) சிலை நிறுவியுள்ளார்.

இந்த தகவலில் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் பேராசிரியர் முனைவர். இரா.பாரிவள்ளல், திருப்பாச்சேத்தி அவர்களை அனுகலாம். 09442652093.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr_R_Paarivallal/மணல்தொட்டி&oldid=2040609" இலிருந்து மீள்விக்கப்பட்டது