நான் L. DORAI RAJ, தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். L. DORAI RAJ என்பதன் சுருக்கமாக Eldiaar என்று என் நண்பர்கள் அழைப்பதால் LDR என்ற பெயர் நிலைத்துவிட்டது. என்னுடைய முதன்மையான பொதுப் பணிகளில், 'தமிழைத் தூய்மையானதாக' மாற்ற வேண்டும் என்பது ஒரு இன்றியமையாத பணியாகும். இதற்கு மேல், 'அறிவே ஆற்றல்' என்பது என்னுடைய தத்துவம். அறிவு, மேற்கத்திய மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல- நமக்கும் சொந்தமானது ஆகும்; எனவே, நாமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையும், ஒவ்வொரு நிலையிலும் மிக மிகத்துல்லியமாக இருக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையும் எனக்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.