பயனர்:Esaivani.Ke/மணல்தொட்டி

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ் தீபகப்பக்கத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரமே வல்வெட்டித்துறை ஆகும் .இவ் வல்வெட்டித்துறையானது பாக்கு நீரிணையை அருகாமையில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது . அத்துடன் இங்கு மாபெரும் பட்டப்போட்டி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது .வல்வெட்டித்துறையிலுள்ள உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆண்டுதோறும் வெகு விமர்சையா இடம்பெற்று வருகின்றன .இப் பட்டத்திருவிழாவானது இங்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக வல்வை வாழ்மக்களால் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டியானது ஆண்டுதோறும் நடார்த்தப்பட்ட்து வருகின்றன .இப் பட்ட போட்டியானது 1994 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சன சமூக நிலையத்தால் நடார்த்தப்பட்ட்து வந்தன .பின் நாட்டில் நிலவிய யுத்த நிலைமை காரணமாக இந் நிகழ்வு கைவிடப்பட்டது .தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் மிகவும் பிரமாண்டமாக இப் போட்டியானது நடார்த்தப்பட்ட்து வருகின்றன .

போட்டியில் கண்ணைக்கவரும் விதமாக வினோதமான பட்டங்கள் பறக்கவிட்டிருந்தமை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .சுமார் 67ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டடியில் பங்கேற்று வானில் பறக்கவிடப்பட்டன .இவற்றில் நடுவார்களால் தேர்ந்தெடுக்கப்படும் 20 படங்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Esaivani.Ke/மணல்தொட்டி&oldid=2159958" இலிருந்து மீள்விக்கப்பட்டது