பயனர்:Everything Atom/மணல்தொட்டி

கருங்கடல்

தொகு
 

கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகத்தில் உள்ள சில கடல்களிற்கு நிறங்களின் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ●கருங்கடல் ●மஞ்சள் கடல் ●செங்கடல் ●வெள்ளை கடல்

இவற்றில் கருங்கடலின் ஆச்சரியங்களை ஆராயலாம்🤔...

கருங்கடல் என்றால் அது கறுப்பாக இருக்குமா? ஆம், உலகிலேயே அதிகளவு ஐதரசன் சல்பைட்டு கலந்த நீர் இந்தக்கடலில் தான் உள்ளது. இதனால் சிலசமயம் இக்கடல் கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் மாரி காலங்களில் கருங்கடலானது அதிக கருமையாக காட்சியளிக்குமாம் இவற்றினால் இக்கடல் கருங்கடல் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி துருக்கி போன்ற சில நாடுகளின் தொகுதியான அனத்தோலியா என்ற பகுதி மக்கள் வடக்கினை கறுப்பு என்றும் தெற்கை வெள்ளை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதிக்கு வடக்கே இந்தக்கடல் இருப்பதாலும் இது கருங்கடல் எனப்படுகிறது.

அதனுடைய கருமை நிறத்திற்கு காரணம் ஐதரசன் சல்பைட்டு என்று சொன்னேன் ஐதரசன் சல்பைட்டு எவ்வாறு கருமைநிறத்தைத் தருகின்றது தெரியுமா?

ஐதரசன் சல்பைட்டிலிருந்து அழுகிய முட்டையின் மணம் வீசும் என்று கற்றிருப்பீர்கள் அதே போல நீர்க்கரைசல் நிலையில் இது கறுப்பு நிற வீழ்படிவினை ஏற்படுத்துகிறது. ஆகவே கருங்கடல் கறுப்பாக இருக்கின்றது. இன்னொரு விடயம் தெரியுமா இந்தக்கடலிலிருந்தும் துர்நாற்றம் வீசுமாம்.

அது சரி, இந்த ஐதரசன் சல்பைட்டு எங்கிருந்து வந்தது? அது Deniper மற்றும் Danube ஆகிய நதிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.(இந்நதிகள் கருங்கடலுடன் சங்கமிக்கின்றன. நதி எங்கே போகிறதோ...🎼)

மேலும் மத்திய தரைக்கடலிலிருந்து வரும் உவர்நீரின் வரத்து காரணமாகவும் சமுத்திரத்துடன் முழுமையாக தொடர்புபடாது இருப்பதாலும் (கருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் சுமார் 2km அகலமுள்ள நீர்பிரதேசம் இணைக்கறது.) இக்கடல் உலகில் அதிகளவு ஐதரசன் சல்பைட்டு கலந்த நீரைக் கொண்ட கடலாக அமைந்துள்ளது.

இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் 👍 Follow & Join Us செய்யுங்கள்.

Telegram Group

Telegram Channel

Twitter

Instagram

nas.io/everything-atom

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Everything_Atom/மணல்தொட்டி&oldid=3607176" இலிருந்து மீள்விக்கப்பட்டது