பயனர்:Ezhilarasi/மணல்தொட்டி

தி ஆர்க்கிடெக்சர் ஆப் எ டெக்கன் சுல்தானேட் (The Architecture of a Deccan Sultanate) என்பது கட்டிடக்கலை மற்றும் கலை வரலாற்றாசிரியர் புஷ்கர் சோஹோனியின் எழுதிய நூலாகும். இது 2018 ஆம் ஆண்டு வெளியானது.இந்த நூலானது கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அகமத்நகரின் நிஜாம் ஷாக்களின் கட்டிடக்கலை மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் குறித்த மிக விரிவாக எழுதப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும்.

சுருக்கம்

தொகு

இந்த நூலானது தக்காண சுல்தானகத்தின் ஒன்றான அகமத்நகர் சுல்தானகத்தின் கட்டிடக்கலை, கலைப் பொருட்கள் அமைந்துள்ள சமூகப் பின்னணியை புதுப்பிக்கவும், கட்டிடக்கலை, ஓவியம், நாணயவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த இராச்சியம் கடந்த காலத்தில் ஆய்வாள்களால் மோசமாக ஆய்வு செய்யப்பட்டிருந்த்து. மேலும் அதன் நினைவுச்சின்னங்கள் அழிவு நிலையில் உள்ளன. புத்தகத்தின் முதன்மை கவனம் நிஜாம் ஷாஹி சுல்தானகத்தின் (1490-1636) கட்டிடக்கலை குறித்தது ஆகும். இது அகமத்நகர் இராச்சியம் என்றும் அழைக்கப்படுகிறது, முகலாயர் வெற்றி கொள்வதற்க்கு முன்னர் தக்காணத்தில் இருந்த மூன்று முக்கிய ஆட்சிகளில் குறைவாக அறியப்பட்டத்து அகமத்நகர் சுல்தானாகமாகும். லாரா பரோடி கூற்றின்படி, "தெற்காசியா மற்றும் இஸ்லாமிய உலகின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை வரலாற்றில் உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளியை இந்த புத்தகம் நிரப்புகிறது."[1]

வரவேற்பு

தொகு

இந்த புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் பிரண்ட்லைன் பத்திரிகை உட்பட பல இதழ்களால் திறனாய்வு செய்யப்பட்டது. அதில் இந்த நூல் "இடைக்கால இந்தியாவின் வரலாற்றுக்கு மிகவும் தேவையான நுணுக்கமான பார்வையை வழங்குகிறது" என்று மேற்கோள் காட்டியது. [2] கட்டிடக்கலை வரலாற்றாசிரியரான ஜார்ஜ் மைக்கேல் இதை "கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு, இடைக்கால இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பற்றிய முழுமையான புரிதலை வழங்குகிறது" என்று குறிப்பிட்டார். [3] அந்த ஆண்டிற்கான தனது வாசிப்பு பட்டியலில் உள்ள புத்தகங்களில் ஒன்றாக இந்த நூல் மனு எஸ் பிள்ளையால் மேற்கோள் குறிப்பிடப்பட்டது. [4] தி முஸ்லிம் வேர்ல்ட் புக் ரிவ்யூவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த நூல் "அற்புதமான ஆய்வுக்கட்டுரை" என்று குறிப்பிட்டது. [5] [6]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ezhilarasi/மணல்தொட்டி&oldid=4093131" இலிருந்து மீள்விக்கப்பட்டது