பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி
நவீன குடும்பக் கட்டுப்பாடு முறைகள்
தற்காலிக முறைகள் நிரந்தர முறைகள்
ஹோர்மோன்களைப் பயன்படுத்தும் முறைகள்
ஹோர்மோன்களைப் பயன்படுத்தாத முறைகள்
வாய்மூல மாத்திரைகள் ஊசிமூல மருந்துகள் தோலிற்குக் கீழான பதியம்
கருப்பையுள்ளான சாதனம் (செப்பு) ஆணுறை
பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை ஆண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை
சத்திரசிகிச்சைக்கு பின்னராக வீடு செல்லும் போதான அறிவுறுத்தல்கள்
1. காயத்தினை கவனித்துக்கொள்ளல் - சத்திரசிகிச்சையால் உருவான காயத்தை சுத்தமாகவும், ஈரமில்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். - அறிவுரைக்கு ஏற்றவாறு கட்டுக்களை மாற்றிக்கொள்ளுங்கள். - கிருமித் தொற்றலுக்குரிய அறிகுறிகள் பற்றி அவதானமாக இருங்கள்.
2. மருந்துகள் - அறிவுரைக்கப்பட்டவாறு வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். - நுண்ணுயிர்கொல்லிகள் ஏதேனும் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அவற்றிற்கான அறிவுறுத்தல்களைப் பின்வற்றவும். - வெளியிலிருந்து பரிந்துரைகளின்றி மருந்துகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
3. செயற்பாடுகளுக்குள்ள வரையறைகள் - அறிவுரைக்கப்பட்டவாறு உடலியல் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். - பரிந்துரைக்கப்பட்ட காலத்தில் பாரமான பொருட்களைத் தூக்குவது போன்ற பழுவான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். - பரிந்துரைக்கப்பட்டிருந்தால், ஊன்றுகோல் போன்றவற்றை நடப்பதற்குப் பயன்படுத்தவும்.
4. உணவுப் பழக்கவழக்கங்கள் - தெளிவான திரவங்களில் ஆரம்பித்து, படிப்படியாக சாதாரண உணவு வரை உணவு முறையை மாற்றியமைக்கவும். - வைத்தியர் அனுமதியளிக்கும் வரை அதிகப்படியான உணவையும், காரமான உணவுகளையும் தவிர்க்கவும்.
5. தொடர்ச்சியான சிகிச்சைகள் - அடுத்தடுத்த வைத்திய விஜயங்களை திட்டமிட்டு, திட்டமிட்ட திகதிகளில் தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு வருகை தரவும். - ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், அவற்றை கொண்டு வரவும்.
6. கவனமாக இருக்க வேண்டிய அறிவுரைகள் - 101°F (38.3°C) க்கு மேற்பட்ட காய்ச்சல். - தொடர்ச்சியாக மோசமாகும் வலி. - நேரத்துடன் சரியாகாத குமட்டல் மற்றும் வாந்தி. - சத்திர சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் அசாதாரணமான சிவத்தல் மற்றும் வீக்கம்.
7. ஓய்வெடுத்தலும், குணமடைதலும் - ஓய்விற்கு முக்கியத்துவமளியுங்கள். உடல் குணமடைவதற்கு சந்தர்ப்பமளியுங்கள். - இயலுமான சிறிய செயற்பாடுகளில் ஈடுபடவும். ஆனால் களைப்படைவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
8. உதவிக்குரிய முறைமைகள் - முதல் சில நாட்களில் உங்களுக்கு உதவுவதற்காக ஒருவரை வீட்டில் வைத்திருக்கவும். - உதவி தேவைப்படும் போது நண்பர்கள் அல்லது குடும்பத்தவர்களிடம் உதவியை நாடவும்.
9. அவசரத் தொடர்புகள் - உங்கள் சுகாதார வழங்குனரின் தொடர்பாடல் தகவல்களை எப்போதும் உங்களிடம் வைத்திருக்கவும். - அவசர சிகிச்சையை நாட வேண்டிய சந்தர்ப்பங்கள் (உ-ம்: கடுமையான வலி, மூச்சு விடுவதில் சிரமம்) தொடர்பில் அறிந்து வைத்திருக்கவும்.
10. வாழ்க்கைமுறையை மாற்றியமைத்தல் - குணமடையும் காலத்தில் புகைத்தலை தவிர்த்துக்கொள்ளுங்கள்; மதுபானம் எடுக்கும் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். - போதுமான அளவு நீராகாரத்தை எடுப்பதுடன், நிறைவான உணவை உண்பதால் குணமடைதல் சிறப்பாக நடைபெறும்.
இலகுவான குணமடைதலுக்கு மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.