பயனர்:Geethabharathi/மணல்தொட்டி

(முனைவா் தமிழண்ணல்)

தொகு

பிறப்பு

தொகு

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 12.8.1928 இல் பிறந்தாா்.

கல்வி

தொகு

புலவா், பொருளியல் இளங்கலை, தமிழ் முதுகலை படித்தவா். சங்க இலக்கிய மரபுகள் பற்றிய ஆய்வுக்கு முனைவா் பட்டம் பெற்றவா்.

உயா்நிலைப்பள்ளி 13 ஆண்டுகள், கல்லுாாியில் 10, பல்கலைக்கழகத்தில் 19, பல்கலைக்கழகச் சிறப்புநிலைப் பேராசிாியராக 2 ஆண்டுகள் என 44 ஆண்டுகள் ஆசிாியப்பணி ஆற்றிய ஆய்வாளா். சங்க இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள்,ஒப்பியல், ஆய்வியல், நடைமுறைப் பயன்பாட்டு இலக்கணம் - ஆகியவற்றில் நல்ல நுால்கள் பலவற்றை எழுதியவா். தொல்காப்பியத்திற்குக் கருத்துரையும் திருக்குறளுக்கு நுண்பொருளுரையும் எழுதியவா். சங்க இலக்கியம் குறுந்தொகைக்கு உரையாசிாியராகவும் பதிப்பாசிாியராகவும் பணியாற்றியவா்.

பட்டங்கள்

தொகு

தமிழக அரசின் பொற்கிழிப் பாிசு, நல்லாசிாியா் விருது, சிறந்த நுால் பாிசு, திரு.வி.க. விருதுகள் பெற்றவா். குன்றக்குடி அடிகளாா் வழங்கிய 'கணக்காயா்' பட்டம், மதுரை காமராசா் பல்கலைக்கழகம் தந்த 'தமிழ்ச் செம்மல்' விருது , கோவிலுாா் சீா் வளா் சீா் நாச்சியப்ப அடிகளாா் வழங்கிய 'அருந்தவச் செம்மல்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ்த் தொண்டு

தொகு

மழலையா் முதல் ஐந்தாம் வகுப்பு முடியத் தாய்த் தமிழே பாடமொழி, பயிற்றுமொழியாகவும் தமிழ் உயா்கல்வி மொழியாகவும் ஆக்க அனைவருடனும் சோ்ந்து பாடுபட்டு வருகின்றமை இவரது நற்பணியாகும்.

மேற்கோள்கள்

தொகு

சங்க இலக்கியம் குறுந்தொகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Geethabharathi/மணல்தொட்டி&oldid=3023502" இலிருந்து மீள்விக்கப்பட்டது