பயனர்:Graphsheet/மணல்தொட்டி
சிதம்பர ரகசியம்
இங்கு தில்லை என்று சைவ சமய அடியார்களால் அன்போடு அழைக்கப்படும் சிதம்பரம் பல ஆச்சர்யங்களை கொண்டது. சிதம்பரத்தில் ஈசன் சிவன் வருவதற்கு முன்னாள் அங்கு பதஞ்சலி முனிவர் ஆசிரமம் அமைத்திருந்தார்.
பதஞ்சலி முனிவரைபற்றி சில வரிகள்
ஒரு நாள் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த விஷ்ணுவின் கணம் அதிகமானதைபற்றி காரணம் கேட்கிறார். அதற்க்கு விஷ்ணு பகவான் " அந்த சிவனின் ஆனந்த தாண்டவத்தை என் மன கண்களால் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன் . அதனால் இந்த கணம் அதிகமானது என்றார். ஆதிசேஷனுக்கு ஆர்வம் தாங்காமல் நானும் அந்த தாண்டவத்தை கண்டு ரசிக்க வேண்டும் என்றார். உடனே விஷ்ணு பகவான் பூலோகத்தில் பிறக்க கடவாய் என்று அருளினார். அவரின் விருப்பப்படி அத்திரிக்கும் அனுசூயைக்கும் மகனாக பிறந்தார். அதற்க்கு முன்னாள் இறைவனிடம் வேண்டுகிறார். இதே உடலோடு பிறக்க வேண்டும் என்று.இறைவனும் அருள்கிறார். அடுத்ததாக பதஞ்சலி முனிவரிடம் இறைவன் ஈசன் தில்லை சிதம்பர ரகசியத்தை சொல்கிறார். இவரும் வியாக்கிரம பாதரும் தில்லையில் ஆசிரமம் கொண்டிருந்தனர். வியாக்கிரம பத்தரை பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.ஆனால் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது இறைவனை பூஜை செய்ய புலிக்கையும் காலும் வேண்டி பெற்றுக்கொண்டதாய் வரலாறு. பதஞ்சலி முனிவர் தான் பெற்ற சிதம்பர ரகசியத்தை தேவலோக சிற்ப்பிக்கு உபதேசிக்கிறார்.அந்த சிதம்பர ரகசியம் கொண்டு கோவில் கட்டப்பட்டது. இங்கு ஓன்றை நினைவில் கொள்ள வேண்டும். பதஞ்சலி ஆதிசேஷனின் அவதாரம்.