பயனர்:HARIKRISHNAN/மணல்தொட்டி

வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள் தொகு

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஓளவையாரால்போற்றப்படும் திருக்குறள், வாமண அவதாரத்தில் இரண்டடியால் உலகை அளந்த திருமால் போல,இரண்டடிகளால் நாடு, இனம், மதம், மொழி, சமயம் என அனைத்தையும் தாண்டி, உலக மக்களுக்குத்தேவையான அனைத்து நன்நெறிகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. இதனாலேயே,திருக்குறள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் தோன்றியிருந்தாலும் உலக இலக்கியமாக, உலகப்பொதுமறையாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளில் கல்வி குறித்த செய்திகளைஆராய்வது அவசியமானதாகும்.

வள்ளுவரின் கல்விச் சிந்தனைகள் தொகு

கல்வி இல்லா நிலம் களர்நிலம் அதில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள்விளைவதில்லை என்று கூறுவார் பாரதிதாசன். பெற்றோர்கள் கல்வி கற்றிருந்தால்தான் அவர்கள்பிள்ளைகளும் கல்வி கற்பார்கள் என்பது அவரது கொள்கை. வள்ளுவரும் கல்வி பற்றிய செய்திகளைஅரசியல் என்னும் பகுதியில் உரைக்கிறார். காரணம், அரசன் கற்றிருந்தால்தான் அவன் ஆட்சிக்குஉட்பட்ட மக்களும் கல்வி கற்பார்கள், அரசனும் தம் மக்களுக்கு கல்வி அறிவை ஊட்டுவான் என்றநோக்கில் அமைத்துள்ளார். மேலும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்றுஅதிகாரங்களிலும் கல்வி பற்றிய செய்திகளைச் சுட்டிச்செல்கிறார். இவர் இயற்றிய 1330 குறட்பாக்களில்80 குறட்பாக்கள் கல்வி பற்றிய செய்திகளைக் குறித்துச்செல்கின்றன.

கல்வி குறித்து வள்ளுவர் கையாண்ட சொற்களும் குறட்பா எண்களும் தொகு

  1. அறிவினார் 429                                                   
  2. அறிவிலார் 427, 430                                        
  3. அறிவு 355, 358, 396, 422, 423, 424, 425, 426, 684                  
  4. அறிவுடையார் 427, 430                                                                              
  5. அறிவார் 428                                                                                                           
  6. எழுத்து 1, 392                                                                                                         
  7. கசடற 391, 717, 845                                                                                                                  
  8. கல்வி 383, 398, 400, 684, 717, 939                                                       
  9. கல்லா ஓருவன் 405                                                                                      
  10. கல்லா மா 814                                                                                                      
  11. கல்லார் 408, 570                                                                                                 
  12. கல்லாத 397, 845                                                                                                
  13. கல்லாதார் 409                                                                                                     
  14. கல்லாதான் 402, 404                                                                                      
  15. கல்லாதவர் 393, 395, 403, 406, 427, 729                                       
  16. கற்ற 398,724, 727, 730, 823                                                                                                
  17. கற்றறிந்தும் 729                                                                                                 
  18. கற்றறிந்தார் 399, 717                                                                                     
  19. கற்றறிதல் 632                                                                                                      
  20. கற்றது 650                                                                                                                                        
  21. கற்றார் 395, 403, 409, 722, 724
  22. கற்றாருள் 722
  23. கற்றதனால் 2
  24. கற்றிலன் 414
  25. கற்க 391, 725
  26. கற்று 130, 356, 396
  27. கற்றும் 728
  28. கற்றோர் 393
  29. கேள்வி 413, 417, 418, 419
  30. சான்றோன் 69
  31. சொல்லேர் ஊழவர் 872
  32. நூல் 373, 410, 543, 727, 743
  33. நூல் ஈன்றி 401
  34. நூல் நயம் 783
  35. நூல்வல்லான் 683
  36. நூலாருள் 683
  37. நூலோர் 322, 533, 941
  38. நூலொடு 726
  39. நூலோடுடையார் 636
  40. பனுவல் 21
  41. புலவர் 394

கல்வி குறித்து வள்ளுவர் கையாண்ட தொடர்கள் தொகு

  1. அறிவு அற்றம் காக்கும் கருவி
  2. அறிவுடையார் எல்லாம் உடையர்
  3. ஆற்றின் அவையறிந்து கற்க
  4. இல்லாரை எல்லோரும் எல்லுவர்
  5. உடையார்முன் இல்லார்போல்
  6. உவப்பத் தலைகூடி
  7. எதிரதாக் காக்கும் அறிவு
  8. எனைத்தானும் நல்லவை கேட்க
  9. எழுமையும் ஏமாப் புடைத்து
  10. ஏக்கற்றும் கற்றார்
  11. ஓருமைக்கண் தான்கற்ற கல்வி
  12. கடையரே கல்லாதவர்
  13. கண்ணுடையார் என்போர் கற்றோர்
  14. கல்லாதவரின் கடை என்ப
  15. கல்லாதவர்
  16. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடற
  17. கற்றார் எனப்படு பவர்
  18. கற்றிலன் ஆயினும் கேட்க
  19. கற்க கசடற
  20. கீழ்ப்பிறந்தும் கற்றார்
  21. கேடில் விழுச்செல்வம் கல்வி
  22. சாத்துணையும் கல்லாத வாறு
  23. செல்வத்துள் எல்லாம் தலை
  24. சொல்லேர் உழவர்
  25. தொட்டணைத்தூறும் அறிவு
  26. நவில்தொறும் நூல்நயம் போலும்
  27. நாள்தோறும் நாடுக
  28. மெய்ப்பொருள் காண்பது அறிவு
  29. விலங்கொடு மக்கள் அனையர்

கல்வி குறித்து வள்ளுவர் கையாண்ட குறட்பா எண்கள் தொகு

1, 2, 21, 24, 69, 130, 322, 355, 356, 358, 373, 383, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430, 520, 533, 543, 570, 632, 636, 650, 683, 684, 717, 722, 724, 725, 726, 727, 728, 729, 730, 743, 752, 783, 814, 823, 845, 872, 939, 941, 1110.

கல்வி கற்கும் முறை தொகு

`பிச்சைப் புகினும் கற்கை நன்றே’  எனக் கூறுவார் ஓளவையார். பிச்சை எடுத்தேடும் கல்விகற்க வேண்டும் என்று அர்த்தமல்ல. பிச்சை புகும் நிலையில் கூட கற்றல் நிகழ வேண்டும் என்பதாய்அர்த்தம். `ஊற்றுழி ஊதவியும் ஊறுபொருள் கொடுத்து, பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்றுபுறநானூறு கூறும். இக்கூற்றிற்கினங்க இக்காலத்தில் அரசு பள்ளிக் கூடங்களைவிட தனியார் பள்ளிக்கூடங்களே மிகுதியாக உள்ளன. வள்ளுவர் கல்வி கற்கும் முறையினைக் கூறுகையில், `ஊடையார்முன்ஈல்லார்போல் ஐக்கற்றும் கற்றார்’ என்றார். கற்பவர்கள், பொருள் ஈருப்பவரிடம் கைக்கட்டி பணிவுடன்பொருளைப் பெற்றுச் செல்பவரைப் போல, கல்வி கற்றவரிடத்தில் கற்பவர் பணிந்து கற்க வேண்டும்என்கிறார். இக்குறப்பாவில், ஏக்கற்றும் கற்றார் என்ற தொடர் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது. இது,ஓருதலைக் காமம்போல ஓருதலையாகக் கற்றலை ஊணர்த்தும். அதாவது, ஏகலைவன் தான்ஓருவனாகவே குருநாதர் இல்லாமல் கல்வி கற்றுத் தேர்ந்தான் என்று புராணங்கள் கூறும். அதுபோல,எவருடைய துணையும் இல்லாமல் கற்றலையே  `ஏக்கற்றும்’  என்ற சொல் உணர்த்துகிறது.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதனை,  `மரங்கொல் தச்சன் கைவல்சிறாஅர், மழுவுடைக் காட்டகத் தற்றே, எத்திசைச் செலினும் அத்திசை சோறே’ என்ற புறநானூற்றுப்பாடல் உணர்த்தும். இதில்  மரவேலைகளைச் செய்யக்கூடிய சிறுவன் ஓருவன், பலஆயுதங்களைக்கையில்கொண்டு காட்டகத்திற்குச் சென்றானேயானால், அவன் எத்திசைச் சென்றாலும் அத்திசைக்காட்டு மரங்களைக் கொண்டு பல்வேறு மரச் சாமான்களைச் செய்து பொருள் ஈட்டி உண்பான் எனக்கூறப்படுகிறது. அதைப்போல, கல்வி கற்ற ஓருவன் தான் கற்ற கல்வி கொண்டு எந்த தேசத்திற்குச்சென்றாலும் பிழைத்துக் கொள்ள இயலும். அத்தகைய கல்வியைக் கசடற கற்க என்கிறார்

கல்வி ஓருவரின் நிலையான, அழிவில்லாத செல்வமாகும். இக்கல்வியைத் திருடர்களால்களவாடிச் செல்ல இயலாது; தீயினால் எரித்துவிட முடியாது; நீரினால் அடித்துச் செல்ல முடியாது;பிறருக்குக் கொடுத்தாலும் மிகுமே அன்றி குறையாது. இத்தகைய கல்வியே கேடில் விழுச்செல்வமாகும்.நாம் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தும் இறக்கின்ற தருணத்தில் எடுத்துச் செல்ல இயலாது. ஆனால்கல்வியினை எடுத்துச் செல்லலாம். இதனை,  `ஓருமைக்கண் தான்கற்ற கல்வி ஓருவற்கு எழுமையும்ஏமாப் புடத்து’ என்னும் குறளால் உணர்த்துவார் வள்ளுவர்.

ஓரு குழந்தை சிறியதாய் இருக்கும் போதே பல சாதனைகளை நிகழ்த்துவதாய் நாம்கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தச் சாதனை, அக்குழந்தை அப்பிறவியில் கற்ற கல்வியினால் செய்வனஅல்ல. முற்பிறப்பில் கற்ற கல்வி இப்பிறப்பில் அதனைச் சாதிக்க வைக்கிறது. இதனையே `எழுமையும்ஏமாப் புடைத்து’ என்னும் தொடர் உணர்த்துகிறது.

கற்றனைத் தூறும் அறிவு தொகு

கல்வியை, தொட்டனைத் தூறும் மணற்கேணி என்கிறார் வள்ளுவர். மணலைத் தோண்டத்தோண்ட நீர் சுரப்பதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு பெருகும் என்பது இதன் பொருள். இதனைமேலோட்டமாகப் பார்த்தால், சாதாரண செய்தியாகத் தோன்றும். சற்று ஆழ்ந்து ஆராய்ந்தோமானால்உண்மைப் புலப்படும். தண்ணீர் ன்பது பூமியில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் பொருளல்ல. அதுஇருக்கும் இடத்தைத் தெரிந்து தோண்டுதல் வேண்டும். அதுபோல, எல்லோருக்கும் எல்லா அறிவும்இருக்குமென்று கூறமுடியாது. அறிவு என்பது வித்தியாசப்படக் கூடிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் உரியதிறமைகள் அவை சார்ந்த நூல்களைக் கற்பதனால் பெருகும். இதனைத்தான் கற்றனைத் தூறும் அறிவுஎன்றார் வள்ளுவர்.

மணலில் நீர் சுரக்கும் என்றாலும் பாலைவனத்தில் நீர் சுரப்பதில்லை. அதுபோல உழவுத்தொழில் செய்பவர் விஞ்ஞான நூல்களைக் கற்பதனாலும் விஞ்ஞானி வேளாண் தொடர்பான நூல்களைக்கற்பதனாலும் யாதொரு பயனுமில்லை. உழவுத் தொழில் செய்பவன் வேளாண் நூல்களையும்விண்வெளி ஆய்வாளன் விஞ்ஞான நூல்களையும் கற்றால்தான், அவன் இயற்கை அறிவோடு நூலறிவும்சேர்ந்து நல்லதொரு பயனைத் தரும்.  அதாவது, ஏற்கனவே இருக்கக்கூடிய அறிவு, அந்த அறிவு சார்ந்தநூல்களைக் கற்பதனால் பெருகும். இதனையே `கற்பதைக் கற்க’ என்னும் தொடர் உணர்த்துகிறது.

மெய்ப்பொருள் காண்பது அறிவு தொகு

எவ்வளவுதான் கற்றவர்களாக இருந்தாலும் மற்றவர்கள் சொல்வனவற்றை அப்படியேஏற்றுக் கொள்வது அறிவுடமை ஆகாது. அவர்கள் சொல்கின்ற சொல்லில் எது உண்மை, எது பொய் என்றுஉய்த்துணர்தல் வேண்டும். அதுவே அறிவுடமையாகும். இதனை `மெய்ப்பொருள் காண்பது அறிவு’என்னும் தொடரால் உணர்த்துவார் வள்ளுவர். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய் என்பது முதுமொழி. ஆனால் இன்று, தீர விசாரிப்பதும் பொய்யாகவேபோய்விடுகிறது. தண்ணீர் குளிரும் என்றாலும்  தீ சுடும் என்றாலும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்என்கிறது உலகாய்தம். அவ்வாறிருக்க மற்றவர்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எதுஉண்மை ன்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும் என்பதை `மெய்ப்பொருள்’  என்னும் சொல்உணர்த்துகிறது. அறிவுடையோன் என்றால் பிறர் கூறுவனவற்றை ஆராய்ந்து அதன் நுண்பொருளைக்கண்டு உணர்தல் வேண்டும். அவ்வாறு காண இயலாதவன் கற்றவனாயினும் `கல்லாதாரின் கடை என்ப’என்பார் வள்ளுவர்.

கண்ணுடையார் என்போர் கற்றோர் தொகு

`எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ இந்த இரண்டையும் கற்றவரையே கண்ணுடையர்என்பார் வள்ளுவர். ஒரு மனிதனுக்கு, அவன் வாழும் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுப்பது கல்வி.அந்தக் கல்வியின் முக்கிய அங்கம் எண்ணும் எழுத்துமாகும். கண்ணின் பயன் யாது? நமக்குமுன்னிருக்கும் பொருளைக் காட்டுவது. அந்தக் கண் வெளிச்சம் இல்லாத இடத்தில் பொருள்களைக்காட்டுமா? காட்டாது. வெளிச்சம் இருந்தால்தான் பொருட்காட்சி தெரியும். காண்பதற்கு வெளிச்சம்எவ்வளவு அவசியமோ, அதேபோல அறிவுக்கு கல்வி அவசியமானதாகும். அந்தக் கல்விக்குஅடிநாதமாக இருப்பது எண்ணும் எழுத்துமாகும். இந்த எண்ணும் எழுத்துமாகிய வெளிச்சம் இல்லைஎன்றால் அறிவாகிய கண் காணா. கல்லாத ஓருவன் மொழித்தெரியாத இடத்திற்குச் சென்றுவிடுகிறான்என்றால் அவன் மீண்டுவருவது எங்ஙனம்? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று திக்குத்தெரியாமல் அள்ளாடுவான். அங்கு கண்ணிருந்தும் பயன் என்ன? கற்றிருந்தாலோ அம்மக்களோடுஉறவாடி தாம் செல்லவேண்டிய இலக்கை அடைய இயலும். ஆகவேதான் கற்றாரைக் `கண்ணுடையார்’என்றும் கல்லாதாரைப் `புண்ணுடையார்’ என்றும் கூறுகிறது வள்ளுவம்.

கற்றதனால் ஆய பயன் தொகு

நூல்களைக் கற்பதனால் அறிவு பெருகும். இந்த அறிவைக்கொண்டு நல்வழியில் நடக்கவேண்டுமென்பதனை, `கற்றபின் நிற்க ஆதற்குத் தக’ என்று கூறுவார். `அறிவு அற்றம் காக்கும் கருவி’துன்பம் வரும் வேளையில் அத்துன்பத்தைப் போக்கவல்லது. அத்தகைய கல்வியை, ஒன்று ஈந்தும்கொளல்வேண்டும்; நாள்தோறும் நாட வேண்டுமென்றெல்லாம் கூறுவார். `மதிநுட்பம் நூலோடுடையார்க்கு’ சூழ்ச்சிகளும் வஞ்சனைகளும் வெற்றிகொள்ள இயலாது. ஆதலினால் கற்க எனக்கூறுவார் வள்ளுவர்.

அறிவுடையார் தொகு

`வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ என்று கற்றாரின்சிறப்புக் கூறப்படுகிறது. ஏனெனின், வில்லை வைத்திருப்பவருடன் போரிட்டு வென்றாலும் வென்றுவிடலாம். ஆனால் செல்லை ஏராக உடைய கற்றவரிடம் பகைகொண்டால் வெற்றிகொள்ள இயலாதுஎன்பதாக உரைப்பார். அறிவுடையார் வேறொன்றும் இல்லாதிருப்பினும் எல்லாம் உடையவரே ஆவர். அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் அறிவுடையோரின்இயல்புகளை விளக்கிச் செல்கிறார்.

கல்லாதவர் தொகு

`விலங்கொடு மக்கள் ஆனையர்’ எனக் கல்லாதவரை `விலங்கு’ என்றும், `களர்நிலம்’ என்றும்கற்றறிந்தோர் சபையில் தாம் கற்றதைச் சொல்லாதவரும், `கற்றார்’ எனினும் கல்லாதவரினும்கடையர்’ என்றும் கூறுவார். கல்வி விளக்கிற்கு ஒப்பானது. அது நாம் செல்லும் திசையெல்லாம் நமக்குவழிகாட்டியாய் விளங்குகிறது. இத்தகைய கல்வியைக் கல்லாதவரைக் `கல்லா மா’ என்றுரைப்பார்.

சாத்துணையும் கல் தொகு

கற்றல் எப்பொழுது நிகழ்கிறது என்ற கேள்வி சிலருக்கு எழுதலுண்டு. ஒரு குழந்தை தன்அன்னை வயிற்றில் இருக்கும் பொழுதே கற்றல் நிகழ்கிறது. மேலும் பிறந்த உடன் படிப்படியாக வளர்ந்துஒவ்வொரு செய்தியாகக் கற்றுத் தேர்கிறது. இக்கற்றல் இறக்குத் தருணத்தில் கூட நிகழ்கிறது.அவ்வாறாயின் எப்போது முடிவடைகிறது? கற்றல் முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. `அறிதொறும்அறியாமைக் கண்டற்றால்’ என்பது போல, ஒருவன் நூல்களைக் கற்குந்தோறும் இன்னும் கற்கவேண்டியவை பல இருக்கின்றனவே என்று ஆராய்ந்து கற்க வேண்டும். எல்லாவற்றையும் கற்றுமுடித்துவிட்டோம் என்று எவரும் சொல்ல ஈயலாது. ’நவில்தோறும் நூல்நயம் போலும்’ என்பது போல,கற்கக் கற்க புதிய புதிய செய்திகள் புலப்படும். ஆகவேதான் `சாத்துணையும் கல்’ என இறக்கும்நாள்வரையில் கூட கற்றல் நிகழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என்று  கூறுவார்.

உவப்பத் தலைகூடி தொகு

அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி அவரவர்கள் தாம் கற்ற கல்வியைப் பண்டமாற்றுமுறையில் கருத்துகளைப் பகிர்ந்து விவாதிப்பதன் மூலம் மொழி வளர்ச்சி அடையும். இதனை, உவப்பத் தலைகூடி’ என்னும் சொல்லால் உணர்த்துவார். தலைகூடி என்பதில் வரும் தலை என்னும்சொல், தலையை உடையவர் என்னும் பொருளில்  ஆகுபெயராகவும்; தலையில் இருக்கும் அறிவுஎன்னும் பொருளில் அன்மொழித் தொகையாகவும் வந்துள்ளது. ஆகுபெயராய் வரும் தலை, புலவர்பெருமக்களின் திரளையும், அன்மொழித் தொகையாய் வரும் தலை அவர்களின் அறிவையும்உணர்த்துகிறது. மழலை நன்கு வளர்ந்து வருவதைக் கண்டு தாய் எவ்வளவு ஆனந்தம் அடைவாளோஅந்த அளவிற்கு மொழிவளர்ச்சி அடைதலைக் கண்டு புலவர்கள் மகிழ்ச்சி அடைவர் என்பதனை `ஊவப்ப’என்னும் சொல் ஊணர்த்துகிறது. புலவர் பெருமக்கள் ஒன்றுகூடி மொழியை வளர்க்க வேண்டும். மொழிவளர்வதைக் கண்டு மகிழ்தல் வேண்டும் என்பதனை  உணர்த்துவதற்காகவே `ஊவப்பத் தலைகூடி’என்னும் தொடரைக் கையாண்டுள்ளார் வள்ளுவர்.

முடிவுரை தொகு

திருவள்ளுவர் என்னும் நினைவுத் தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது. ஏனெனின்,அவர் உலக மக்களுக்காக, உலக மக்கள் நன்னெறி அடைவதற்காகப் பாடல்களை இயற்றிநன்னெறிப்படுத்தியுள்ளார். இவர் இறைவணக்கம் தொடங்கி, ஊடல் வகை ஈறாக 133 அதிகாரங்களில்உலக மக்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒருங்கே சொல்லியிருக்கிறார். பிற செய்திகளைக்காட்டிலும் கல்வியை மிக விரிவாகவே விளக்கியுள்ளார். 1330 குறட்பாக்களுள் 80 குறட்பாக்கள் கல்விபற்றிய செயதிகளை விளக்குகின்றன. அவை, கல்வி, கேள்வி, கல்வியின் நோக்கம், கற்க வேண்டியன,கற்பதனால் வரும் பயன் எனக் கல்வி பற்றி பல நிலைகளில் விளக்கிச் செல்கின்றன.


ஆக்கம்: முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd., M.D.(Acu), இரட்டணை அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - 604306

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:HARIKRISHNAN/மணல்தொட்டி&oldid=2146454" இலிருந்து மீள்விக்கப்பட்டது