பயனர்:Hamsini Ramiya 2110288/மணல்தொட்டி

ஆத்திசூடி

தொகு

ஆத்திசூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

• ஆசிரியர்: ஔவையார்

• பாடல்கள்: 109

• இலக்கணம்: காப்புச் செய்யுள் -1

திருக்குறள்

தொகு

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.

வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.

சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.

இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.

இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.

அறத்துப்பால்-38 அதிகாரங்கள்

பொருட்பால்-70 அதிகாரங்கள்

காமத்துப்பால்-25 அதிகாரங்கள்

திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளதால், காலத்துக்கும் ஆசிரியரின் அறிவுக்கும் தகுந்தார் போல் இயலை மாற்றி அமைத்துள்ளனர்

திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி

தொகு

ஔவையாரின் ஆத்திசூடி 109 பாடல்களைக் கொண்டுள்ளது மற்றும் திருக்குறள் (அல்லது குறள்) என்பது 133 அத்தியாயங்களாக அமைக்கப்பட்ட 1330 தமிழ் குறள்களின் தொகுப்பாகும்.

திருக்குறள் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.ஆத்திச்சூடி தனிப்பாடல்கள் கொண்டது.

திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. நன்றியுணர்வு, விருந்தோம்பல், தாராள மனப்பான்மை, மனைவியின் நன்மை, கடமை, தொண்டு மற்றும் பலவற்றை எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கியது., இதில் நட்பு, காதல், செக்ஸ் மற்றும் இல்லற வாழ்க்கை பற்றிய அத்தியாயங்களும் அடங்கும்.சங்க காலத்தில் நிலவிய, தமிழ் நிலத்தின் பண்பாட்டு விழுமியங்களை நிரந்தரமாக வரையறுத்த, முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளை இந்த உரை திறம்பட கண்டிக்கிறது.

அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.

ஆத்திச்சூடி என்பது தமிழ் மொழி பண்பாட்டு மற்றும் தார்மீக வளர்ப்பிற்கு அளிக்கும் மிக முக்கியத்துவத்தின் சுருக்கமாகும்.

ஆத்திச்சூடி , ஒரே வரிசையில் எழுத்துக்களில் (உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள்) தொடங்கும் ஒற்றை வரி வசனங்களைக் கொண்ட பாடல்.

ஆத்திச்சூடி தனது பாடல்களில் கருணை, பெருந்தன்மை, பொறுமை, நேர்மை, பொறுப்பு போன்ற அனைத்து விழுமியங்களையும் ஒழுக்கங்களையும் புகுத்துகிறது.

குறிப்பு:

தொகு

1. wikiwand.com https://www.wikiwand.com › ...

2. ytamizh.com https://www.ytamizh.com › ...

திருவள்ளுவரின் திருக்குறள்

3. ta.m.wikipedia.org https://ta.m.wikipedia.org › ...

திருக்குறள் - தமிழ் விக்கிப்பீடியா

4. https://en.m.wikipedia.org › ...