பயனர்:Harilemurian/மணல்தொட்டி

ஜசின்தா பட்டிகாம்

தொகு

ஜசிந்தா லாரா மே பட்டிகாம் (மே 10, 1901 - 4 நவம்பர் 1993 [1]) ஒரு கவிஞர் மற்றும் ஜார்ஜ் ஓர்வெல்லின் (எரிக் பிளேர்) சிறுவயது நண்பர் ஆவார் . அவர் 1914 இல் பிளேயரை சந்தித்தார் . இருவரும் கவிதையில் ஆர்வம் பெற்று இருந்தனர் . ஆனால் பிளேர் பர்மாவிற்கு 1922 ல் புறப்பட்டபின் அவருடன் தொடர்பை இழந்துவிட்டார் . பிளேர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி பின்னர் எழுதியிருந்தார். இருவரும் பிளேயரின் வாழ்க்கையின் இருதியில் மீண்டும் தொடர்பு கொண்டிருந்தனர்.

வாழ்கை வரலாறு :

தொகு

பட்டிகாம் பிளைமவுட்டில் ராபர்ட் ஆர்தர் பட்டிகாம் என்வபவருக்கு மகளாய் பிறந்தார் . அவருக்கு ப்ரோஸ்பர் எனும் இளைய சகோதரன் மற்றும் கினிவர் என ஒரு சகோதரியும் இருந்தார்கள் . இவர் பல திறமைகளைக் கொண்டிருந்தார் . அவர் தன் இளமை காலங்களில் பிளேயர் என்பவரை விரும்பினார். ஜசிந்தா பிளேயர்ரை விட இரு வயது பெரியவள் இருப்பினும் , இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி வந்தனர் . ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் பட்டிகாம் கல்வி கற்றார், ஆனால் அவரும் பிளேயரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்குப் போகும் தங்கள் கனவுகளை அடையமுடியவில்லை .சிறு வயதில் பிளேயர் பட்டிகாமிடம் தான் எச்.சி வெல்ஸ் எழுதிய " தி மாடர்ன் உடோப்பியா " எனும் புத்தகத்தைப் போல் ஒரு புத்தகம் எழுத ஆசை படுவதாக தெரிவித்துள்ளார் . பிளேயர் பர்மாவிற்கு சென்ற பின்னர் அந்த ஜோடி தொடர்பை இழந்தது . 1927 ஆம் ஆண்டில், ஜசிந்தாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது , ஆனால் , அக்குழந்தையை அவர் வளர்க்கவில்லை . ஓர்வெல்லின் உடல்நலம் மிகவும் குறைன்தது , ஜனவரி 21, 1950 அதிகாலையில் நுரையீரல் நோயின் காரணமாக அவர் இறந்தார். ஓர்வெல்லின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே , அனிமல் ஃபார்ம் ஆசிரியரான ஜார்ஜ் ஓர்வெல், அவரது குழந்தை பருவ நண்பர் எரிக் பிளேர் என்று பட்டிகாம் உணர்ந்தார். பல ஆண்டுகளாக அவரது சகோதரியுடன் பட்டிகாம் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் இரண்டு வீடுகளையும், இரண்டு மோட்டார் கேரவன்களையும் வடிவமைத்தார், அதற்காக அவர் பரிசுகளையும் வென்றார். அவர் ஒரு கவிதை புத்தகத்தை எழுதினார், மேலும் அவரது கேட் கவிதைகள் 1972 ஆம் ஆண்டில் , எரிக் & அஸ் வெளியான இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டன . சச் சச் வேர் பாய்ஸ் எனும் கதையில் ஓர்வெல் தான் சிறு வயதில் பெற்ற துன்பத்தைப் பற்றி கூறியிருந்தார் , ஆனால் , இதை ஏற்காமல் பட்டிகாம் ஓர்வெல் சிறு வயதில் மகிழ்ச்சியுடன் இருந்ததாக கூறிவந்தார் .

படைப்புகள்

தொகு

இவர் சிறு வயது முதலே கவிதையில் ஆர்வம் பெற்றிருந்தார் . பல கவிதைகளை எழுதி பள்ளி அளவில் பரிசுகளும் பெற்றுள்ளார் . இவர் தன் வாழ்வின் நிகள்வுகளை தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் . இவர் கேட் போயம்ஸ் எனும் தலைப்பில் கவிதை மற்றும் எரிக் அன்ட் அஸ் எனும் எனும் தலைப்பில் கதைகளை எழுதி உள்ளார் . இவர் எழுதிய கேட் போயம்ஸ் 1972 ஆம் ஆண்டு வெளிவந்தது . இவரின் படைப்பான எரிக் அன்ட் அஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . டயன் வெனபல்ஸ் என்பவர் இவரது படைப்பான எரிக் அன்ட் அஸ் - இன் மேம்படுத்திய வடிவை வெளியிட்டார் . அவர் ஒரு ஜோதிடராகவும் இருந்ததோடு , தி பீட்டில் உட்பட பல புகழ்பெற்ற பிரபலங்களுக்கு ஜாதகங்களையும் கணித்துத்தந்துள்ளார் . இவர் 1971 ஆம் ஆண்டு , - தி யங் எரிக் எனும் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார் . எனினும் இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

எரிக் அன்ட் அஸ்

தொகு

எரிக் அன்ட் அஸ் - இந்த புத்தகத்தில் இவர் தன் சிறு வயது நினைவுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் . அவர் 11 வயதில் பிளயரைச் சந்தித்தார், அவர் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். பிளேர் பர்மாவில் ஒரு காவலாளர் ஆனவுடன் இருவருடயே ஆன தொடர்பு இழந்து போனது . பிளேயர் மற்றும் பட்ஜிம் மீண்டும் ஒருவரை ஒருபோதும் 1949 ஆம் ஆண்டு வரை தொடர்புகொள்ள இயலவிலல்லை . இந்த புத்தகத்தின் வாயிலாக தான் பிளேயரின் மேல் பெற்றிருந்த காதலை வெளிப்படுத்துகிறார் . இந்த புத்தகம் அவர் தன் வாழ்நாளில் செய்த பெரும் சாதனையாக கருதப்படுகிறது . இந்த புத்தகம் தி யங் எரிக் எனும் புத்தகத்தின் பின்பு வெளியிடப்பட்டது .

மறைவு

தொகு

பட்டிகாம் நவம்பர் - 4 1993 அன்று உயிர் இழந்தார் . இவர் மரணத்தின் பின்பு , டயன் வெனபல்ஸ் என்பவர் இவரது படைப்புகள் சில வ்ற்றை வெளியிட்டார் . ஓர்வல் மரணத்தின் பின்பு சுமார் 43 ஆண்டுகள் இவர் வாழ்ந்தார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Harilemurian/மணல்தொட்டி&oldid=2321135" இலிருந்து மீள்விக்கப்பட்டது