பயனர்:Helloudhaya/மணல்தொட்டி

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்

தொகு

சீனிவாசன் உதயா 2C2 CRESCENT GIRLS’ SCHOOL

மிக அழகிய பிரம்மாண்டமான குவிமாடத்துடனும் ரம்மியமான சூழலில், வியக்கத்த முகப்புடனும் சிங்கப்பூரின் முக்கிய மைக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது நமது தேசிய அரும்பொருளகம். இந்த அரும்பொருளகமானது சிங்கப்பூரின் அடையாளமாகவும் சுற்றுலாத்தளமாகவும் திகழ்கிறது. இந்த இடம் நம் சிங்கப்பூரின் வரலாற்றில் முக்கிய அங்கம் வகிப்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அரும்பொருளகத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வருவதற்குச் சிங்கப்பூர் பல தடைக்கற்களைத் தாண்ட வேண்டியிருந்தது.

1. வரலாறு மற்றும் சந்தித்த சவால்கள்

2. புதிதாக அமைக்கப்பட்டக் காட்சிப் பொருட்கள்


வரலாறு மற்றும் சந்தித்த சவால்கள்

சிங்கப்பூரில் மொத்தம் பதினைந்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் கலை, பாரம்பரியம், அறிவியல் மற்றும் வரலாறு. சிங்கப்பூரில் இருக்கும் பழமையான அருங்காட்சியகம் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகமாகும். ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. அரும்பொருளகம் என்பது நம் கடந்த காலத்தை நினைட்டும் அரியப் பொருட்கள் இருக்கும் இடமாகும். நம் சிங்கப்பூரில் அரும்பொருளகம் அமைப்பது அவசியம் என்ற எண்ணம் ஸ்டாம்போர்டு ராஃபிள்ஸ் 1823-ஆம் ஆண்டில் நடத்திய சந்திப்பின் போது தோன்றியது. இறுதியாக 1849-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நூலகம் மற்றும் அரும்பொருளகம் சிங்கப்பூர் நிறுவனத்தில் உருவம் பெற்றது. 1960-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நூலகமும் அரும்பொருளகமும் பிரிக்கப்பட்டன. பிறகு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு கடைசியாக ஸ்டாம்போர்டு சாலையில் புதிதாகக் கட்டப்பட்டது. ஆரம்பக் காலத்தில் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்குப் போதியப் பொருட்கள் இல்லை. மேலும் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் அரியப் பொக்கிஷங்கள் மாசுப்படுவதாலும் பூச்சிகளாலும் மற்றக் காரணங்களாலும் அழிந்துவிடுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிங்கப்பூர் அறிவியலைப் பயன்படுத்தி அரும்பொருளகத்தின் கட்டட அமைப்பை மேம்படுத்தியது.


புதிதாக அமைக்கப்பட்டக் காட்சிப் பொருட்கள்

மேற்கூறிய பிரச்சினைகளைச் சிங்கப்பூர் திறமையோடு சமாளித்தது. அரும்பொருளகத்தை இன்னும் சிறப்பாக்கியது. அரும்பொருளகத்தில் பல்வேறு காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேசிய அரும்பொருளகத்தின் புதுப்பிக்கப்பட்ட நிரந்தரக் காட்சிக் கூடங்கள் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டன. அவற்றில் இருக்கும் 1,700 கலைப்பொருட்களில் 40 விழுக்காட்டுப் பொருட்கள் முதல்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் கடந்த காலத்தைக் கண்களால் மட்டுமின்றி நுகர்ந்து பார்த்து அறியவும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தேசிய அரும்பொருளகத்தில், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் வகையில் தெம்புசு மலரின் வாசனை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று அழகாய்க் காட்சியளிக்கும் சிங்கப்பூர் ஆறு சுத்தம் செய்யப்படுவதற்கு முன் எப்படி இருந்தது? ஒரு கழிவுநீர்க் கால்வாய் போல் ஓடிக் கொண்டிருந்த அதன் துர்நாற்றத்தை உணர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய காட்சிக் கூடங்கள், சிங்கப்பூரின் படிப்படியான வரலாற்றைப் பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் முதல் 2 முதலமைச்சர்கள் திரு. டேவிட் மார்ஷல், திரு. லிம் யூ ஹொக் ஆகியோரின் மாதிரி உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் தொழில் மயமடையத் தொடங்கிய காலத்தைப் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டும் அங்கங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று 1960-களில் பிரபலமாக இருந்த உள்ளூர்த் தயாரிப்பான ‘ஷெரட்டன்’ (Setron TV) தொலைக்காட்சிப் பெட்டி. 1970-களில் இருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மாதிரியும் அங்கு உண்டு. புதுப்பிக்கப்பட்ட காட்சிக் கூடங்கள், நாட்டு வரலாற்றின் மீது மக்களுக்குப் புதிய ஆர்வத்தைத் தூண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இவை நாம் கண்டுள்ள வளர்ச்சியைக் காட்டுகிறது. எனவே சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் நாம் சந்தித்த இன்னல்களை நினைவூட்டி நம் வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும் பங்காற்றுகிறது.

[1] [2] [3]

  1. http://www.museums.com.sg/~/media/mrt/documents/nhb_lo_mr-layout-20160226%20-%20final.pdf
  2. http://www.museums.com.sg/
  3. http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_2015-08-31_132917.html?s=museum
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Helloudhaya/மணல்தொட்டி&oldid=2251156" இலிருந்து மீள்விக்கப்பட்டது