பயனர்:Irin paapu/மணல்தொட்டி

வார்ப்புரு:Wpcu

தமிழர்களின் பார்வையில் காதல்

தொகு

காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள்.

 
Bico. Santiago de Compostela

இது காதலின் ஓர் அம்சமே. இந்த மூன்றெழுத்து காதல் இளமைக்கு ஏனோ இனிமை. மேலை நாடுகளில் காதல் என்பது காலைக் கடன் போல. ஆனால் நம் தமிழர் எல்லாவற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். காதலென்றால் கசக்கும் இளையவரும் உண்டு, காதலையே காதலிக்கும் மூத்தவரும் உண்டு. அவ்வாறே காதலை கற்பழிக்கும் சிறியோரும் உண்டு, காதலென்றால் அறுத்தெறியும் பெரியோரும் உண்டு. இன்றைய தமிழர் சமுதாயத்தில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. என்ன தான் நாகரீகம் வளர்ந்திருந்தாலும், மேலை நாகரீகத்தின் பின் சென்றாலும், என்ன தான் நகரங்கள் பெருகி வளரச்சி பெற்றிருந்தாலும் காதல் என்பது தமிழர்களுக்கு வேண்டா வெறுப்பாகத் தான் உள்ளது. இதை சிறிது ஆழமாக அலசிப் பார்த்தால், இதன் பின்னணியில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களாக இருப்பன சாதி,சமயம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு போன்ற வரட்டு கவுரவங்களே."சாதி, மதம்,ஒரு சமூக சீர்கேடு இதை உணர மறுக்கின்ற மக்களுக்கென்றும் உயிர்கேடு, இதுபோன்ற துயரம் பல சாதியர்களின் வெறிகேடு. அடடே சாதி வெறியனே ! தெரிந்துகொள்!! நீ உண்ணும் உணவு,உடை,உன்கையில் இருக்கும் பணம்,இவை அனைத்தும் எங்கிருந்து வந்தது என தெரியுமா? நீ சுவாசிக்கும் காற்று மற்றவர்களின் மீது பட்டுத்தான் வரும். இவற்றை உணர முடியாத உனக்கு கவுரவம் தேவையா? தேவை என்றால் தற்கொலை செய்துகொள்ளவேண்டியது அவனல்ல நீதான்,.,. நீதான்...நீதான்".தமிழ்நாட்டில் எண்ணற்ற சாதிகள் உள்ளன. இவ்வாறு சாதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது மனிதம் புதைக்கப்படுகின்றது. அப்படி இந்த காதலில் அவர்கள் என்ன பகைமையை கண்டார்கள் என இளைய சமூகம் கொதித்தெழுகின்றது. இப்பிரச்சனையில் மறைமுகமான அரசியல் தாக்கமும் உண்டு.காதலர் தினத்தை போர்க்களமாக அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளன. ஆனால் காதலர் தினத்தை கவிஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக நீதிக் களமாக மாற்றியுள்ளனர். சாதியை பார்க்காமல் வருவது தான் காதல். காதலர் தினத்தில் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். மிருகங்கள் என்ன பாவம் செய்தன? காதலை கொச்சைப்படுத்துவதாக கூறி திருமணத்தையே கேலி செய்கின்றனர். ஆனால் இளைஞரோ காதல் திருமணத்தால் தான் ஜாதி ஒழிக்க முடியும் என குரல் கொடுக்கின்றனர்.

காதல் கலவரங்கள்

தொகு

சில அரசியல் கட்சிகள் காதலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர். காதலை எதிர்க்க துணிபவன் ஒன்று அரசியல்வாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அரசியல் பின்னணி உடையவனாக இருக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை தீட்ட வேண்டிய அரசு மாறாக கலவரங்களை தூண்டுகின்றது. அதை செயல்படுத்த விழைகின்றது. ஆனால் அதுவே மக்கள் நல்வாழ்வு என வரும்பொழுது பின் வாங்குவது ஏன்? தீவிரவாதிகள் கூட ஒரு கொள்கையின் அடிப்படையில் தான் கலவரம் செய்கிறான். தன் கொள்கை நிறைவேறும் வரை அதில் ஊன்றி நிற்கின்றான். ஆனால் நம் அரசியல்வாதிகளோ தங்களை விட கீழ்தரத்தினர் யாருமில்லை என்பதை உணர்த்துவதில் தாகம் கொண்டுள்ளனர்.

சில ஆதாரங்கள்

தொகு

தமிழக இளைஞன் இளவரசனின் துயர மரணம் தமிழக சாதி மற்றும் அரசியலின் மிக எரியக்கூடிய கலவை விளைவாக இருந்தது. இவனது கதையில் கூட காதல் ஏற்றத்தாழ்வை வெல்ல முடியவில்லை.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரு ஆண்களாக பெரும்பாலும் அவளது தந்தை மற்றும் அவளது கணவர் இருக்கின்றனர். இது கடந்த நவம்பர் மாதம் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் மகளும், கடந்த ஜீலை மாதம் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் கணவனின் மனைவியுமான திவ்யா என்ற பெண்ணின் உள்ளம் உருகும் கதை.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் - திவ்யா காதல் விவகாரம் சாதி மோதலில் தொடங்கி பிறகு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இறுதியில் சோகத்தில் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சுமார் 8 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். கடந்த மாத தொடக்கத்தில் தன் தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் திவ்யா, இளவரசனிடம் இருந்து பிரிந்து வந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் இளவரசனிடம் செல்ல வில்லை. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வந்தபோது, தாயுடன் இருக்கவே விரும்புவதாக திவ்யா கூறியதால், அந்த காதல் ஜோடி இனி நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விடும் என்ற மனநிலைதான் எல்லோரிடமும் ஏற்பட்டது. ஆனால் இளவரசன் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், இந்த காதல் விவகாரம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இளவரசனின் தற்கொலை எல்லை கடந்த பரிதாபத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 
Bad Muskau - Berliner Straße - Jakobuskirche - Friedhof - Machbuba 03 ies

இளவரசனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் இது தாங்க முடியாத இழப்பாக மாறியது. அதே நிலைதான் திவ்யாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இளவரசனுடன் செல்ல மாட்டேன் என்று கூறிய திவ்யா இளவரசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் துடி துடித்துப் போனார். அவர் கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகள் உருக, உருக காதலித்து, பிறகு திருமணம் செய்து கொண்டு 8 மாதங்கள் குடும்பமும் நடத்தியவர் இனி இல்லை என்பதை நினைத்து திவ்யா குமுறி, குமுறி அழுதார். அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் அவர் தவிப்புக்குள்ளாகி காணப்பட்டாள். இளவரசன் தற்கொலை செய்த தகவல் பரவியதும் திவ்யாவிடம் கருத்து கேட்க எல்லா பத்திரிகை நிருபர்களும் முயற்சி செய்தனர். ஆனால் திவ்யா மிகவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதால், அவரால் பேச இயலாது என்று கூறி அவரது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று திவ்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதனால் இளவரசன் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வருகிறார்கள். இப்பொழுது ஆறுதல் கூறும் உறவினர்கள் முன்பே சிறிது கருணை உள்ளத்தோடு, சம்மதத்தோடு திருமணம் செய்து வைத்திருந்தால் அவ்விள உள்ளங்கள் அமைதியில் தம் வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்திருக்கும். அப்பொழுது அவர் பெற்றோரும் குறைந்தது தம் மக்கள் உயிரோடு உள்ளதை எண்ணியாவது மகிழ்ந்திருப்பர். இளவரசன், திவ்யா என்ற இரு சின்னஞ்சிறு காதல் உள்ளங்களின் மனித ஜாதிக்கே உரித்தான மெல்லிய உணர்வுகளும் ஆசைகளும் சில சுயநலமிக்க சாதி அரசியலில் கருகிப்போயிருக்கிறது. பெண்களும் "தீ" தான் அதனால் தான் , சா"தீ" எனும் காதல் "தீ"யால் அவனை கொன்று விட்டாள்;

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Irin_paapu/மணல்தொட்டி&oldid=1611409" இலிருந்து மீள்விக்கப்பட்டது