பயனர்:Jai1975/மணல்தொட்டி
வெள்ளகோவில் காங்கேய நாட்டின் கீழ்ப்பாகம், கொங்கு 24 நாடுகளில் ஒன்று காங்கேய நாடு. நாகப்பட்டினம் கூடலூர் சாலையில் கரூருக்கு மேற்கே 29 மைல் கல் தொலைவிலும் கோயம்புத்தூருக்கு கிழக்கில் 57 கல் தொலைவிலும் அமராவதி நதிக்கு வடக்கில் 7மைல் கல் தொலைவிலும் முத்தூருக்கு தெற்கில் 7 கல் தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. சேர நாட்டின் கிழக்கெல்லை வெள்ளகோவில், கரூர் சாலையில் 6 கல் தொலைவில் சென்றால் கார்வழி என்ற ஊருடன் சேரநாட்டு எல்லை முடிவடைகிறது.
முன்னர் கோவை மாவட்டத்தில் இருந்த இவ்வூர் பின்னர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 22.02.2009 முதல் திருப்பூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. பூலோக ரீதியாக பார்த்தால் வெள்ளகோவில் மூன்று பகுதிகள் உயர்ந்தும் மையத்தில் தாழ்ந்தும் உள்ளது. மேற்கிலும், கிழக்கிலும், வடக்கிலும் பாய்ந்து வரும் மழை வெள்ளம் ஊரின் மையப்பகுதியில் உள்ள வீரக்குமாரசுவாமி கோவிலை சுற்றி தேங்கியது. வெள்ளம் கோவிலை சூழ்ந்ததால் இவ்வூர் வெள்ளகோவில் ஆனதாக சிலர் கூரி இடர்ப்பாடுகிறார்கள். இன்று நகரம் பெருகியதாலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்ததாலும் அமைப்பு மாறவில்லை. அந்நாளில் வெள்ளம் சூழ்வதும் அதை வெளியேற்றப் பட்டபாடும் நற்பது வயதை கடந்த இப்பகுதி மக்களால் இன்றும் நினைவு படுத்தப்படுகிறது.
இலக்கியங்கள் வெள்ளைக்கல் கோவில் என்பது தான் வெள்ளகோவில் ஆகி நிலைத்து விட்டது என கூறுகிறது. அந்ந கோவிலின் பிரதான மூர்த்தி வீரக்குமாரசுவாமி . முன்னர் இக்கோவில் அமைந்துள்ள பகுதி வனப்பகுதியாக இருந்தது. அவ்வனத்தில் அடர்ந்த முட்செடி கொடிகளுக்குள் வெள்ளைக்கல் ஒன்றை வைத்து வழிபட்டு வந்தனர். அது அப்பகுதி மக்களால் வெள்ளைக்கல் கோவில் என கூறப்பட்டு நாளடைவில் வெள்ளகோவில் என மாறியது என சிலர் இடர்ப்பாடுகிறார்கள். இப்பகுதியை நிர்வகித்து வந்த வெள்ளைக்காரத்துரை இக்கோவிலை பார்வையிட வந்து இக்கோயிலின் பெயரை இப்பகுதி மக்கள் மூலம் கேட்டறிந்து தன் குறிப்பில் ஒயிட்டோன் டெம்பிள் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகள்
வெள்ளகோவில் தெற்கிலும் வடக்கிலும் அமராவதி நதியும், நொய்யல் நதியும் எல்லைகளாக உள்ளன. இலக்கமநாயக்கன்பட்டி, புதுப்பை, வேலப்பநாயக்கன்வலசு இந்த ஊராட்சிகள் தெற்கில் உள்ளன. வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி கிழக்கு எல்லைக்கும் வருகிறது. குருக்கத்தி என்ற ஊர் கிழக்கு எல்லையாகும். மேற்கில் பச்சாபாளையம் ஊராட்சி பகவதிபாளையம் எல்லைவரை வருகிறது.