பயனர்:Jana isai/வல்வை மண்ணின் பட்டத்திருவிழா
வல்வைப் பட்டத்திருவிழா என்பது வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள உதயச்சூரியன் கடற்கரையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் வருடாந்த மாபெரும் பட்டத்திருவிழா ஆகும். இந்தp போட்டியில் பலவிதமான கண்ணைக்கவரும் பட்டங்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன. இப்பட்டத்திருவிழாவானது வல்வை விக்கினேஸ்வரா சனசமூக நிலைய உறுப்பினர்களால் ஒரு போட்டி போல நடாத்தப்படுகிறது. இங்கு பறக்க விடப்ப்படும் பட்டங்களில் சிறந்த ஐந்து பட்டங்களுக்கு முக்கிய பரிசுகளும் ஏனைய பத்துப் பட்டங்களுக்க்கு விசேட பரிசுகளும் என மொத்தம் 15 பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பட்டத்திருவிழா நடைபெறும் இடம்
தொகுஇலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ் தீபகப்பக்கத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரமே வல்வெட்டித்துறை ஆகும் .இவ் வல்வெட்டித்துறையானது பாக்கு நீரிணையை அருகாமையில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது . அத்துடன் இங்கு மாபெரும் பட்டப்போட்டி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது .வல்வெட்டித்துறையிலுள்ள உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆண்டுதோறும் வெகு விமர்சையா இடம்பெற்று வருகின்றன .இப் பட்டத்திருவிழாவானது இங்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
வல்வை மண்ணின் பட்டத்திருவிழா தொடர்பான வரலாறு
தொகுதமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக வல்வை வாழ்மக்களால் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டியானது ஆண்டுதோறும் நடார்த்தப்பட்ட்து வருகின்றன .இப் பட்ட போட்டியானது 1994 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சன சமூக நிலையத்தால் நடார்த்தப்பட்ட்து வந்தன .பின் நாட்டில் நிலவிய யுத்த நிலைமை காரணமாக இந் நிகழ்வு கைவிடப்பட்டது .தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் மிகவும் பிரமாண்டமாக இப் போட்டியானது நடார்த்தப்பட்ட்து வருகின்றன .
போட்டியில் கண்ணைக்கவரும் விதமாக வினோதமான பட்டங்கள் பறக்கவிட்டிருந்தமை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .சுமார் 67ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டடியில் பங்கேற்று வானில் பறக்கவிடப்பட்டன .இவற்றில் நடுவார்களால் தேர்ந்தெடுக்கப்படும் 20 படங்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
. இப் பட்டப்போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் பல வித விதமான உருவங்களையும் ,கண்ணைக்கவரும் நிறநிற வடிவங்களையும் கொண்டிருப்பதே காரணமெனலாம் .இதுவே இப் பட்டப்போட்டிக்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றது எனலாம் .எத் துறையாகிலும் ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்கு அதனுடன் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும் .அந்த வகையில் பட்டம் கட்டுவதற்கும் ஒரு வித கலைத்திறன் வேண்டும் அவ்வாறு இருந்தாலே வினோதமான பட்டங்களை உருவாக்கமுடியும் . மேலும் இப் பட்டப்போட்டிக்கு முழுக்க முழுக்க பொழுதுபோக்குத்தான் காரணம் என்று குறமுடியாது .அதையும்தாண்டி மக்களிடையே ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணமெனலாம். அத்துடன் இப் பட்டப்போட்டியின்போது மிகவும் பிரமாண்டமான பட்டங்களே பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இப் பட்டப்போட்டடியில் போடடியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச்செல்கின்றன .
போட்டியில் பங்குபற்றுவோர் தொடர்பான விடயம்
தொகுதைத்திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் இடம்பெறும் மாபெரும் பட்டப்போட்டியை கண்டுகளிப்பதற்கு வடமராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்ல வலிகாமம் ,தென்மராட்சி என தீவகப்பகுதி மக்களும் கூட பட்டப்போட்டியை பார்ப்பதற்காக வல்வை உதயசூரியன் கடற்கரையை நோக்கி திரள்வதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளார்கள் .இவ்வாறாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் திரள்வதால் உதயசூரியன் கடற்கரை நிரம்பிவழிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதொன்றாகும் .