பயனர்:Jayamurthi s/மணல்தொட்டி
“வள்ளிமலை” வள்ளிமலை இந்தியாவில் தமிழ்நாட்டில் காட்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது வேலுரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்னையிலிந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் தமிழ் கடவுள் முருக கடவுள் எனப்படும் ஸ்ரீ சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலுக்கு புகழ்பெற்றது. புரணங்களின்படி முருகர் வள்ளியை இந்த ஊரில் திருமணம் செய்துகொண்டதாக அறியப்படுகிறது. விஷ்ணு கடவுள் மற்றும் லக்ஷ்மி தேவிக்கும் மகளாக வள்ளி பிறந்தாக அறியப்படுகிறது. அதாவது லக்ஷ்மி தேவியின் வியர்வை துளி ஒன்று பசும்புல்லின் மீது விழுந்ததாகவும் அதனை புள்ளிமான் உண்டதால் மானின் வழியாக வள்ளி பிறந்ததாகவும் குழந்தையான வள்ளியை மலைவாழ்மக்களின் தலைவரால் வள்ளிக்கிழங்கு வயலில் கண்டெடுக்கப்பட்டதால் வள்ளி என பெயரிட்டு வளர்த்ததாகவும் அறியப்படுகிறது. வள்ளிமலையில் வள்ளி அழகாக வளர்ந்து வருவதை முருக கடவுளுக்கு நாரதமுனிவர் நினைவுக்கு கொண்டுவர முருகர் வள்ளிமலைக்கு வருகை தந்து வள்ளியிடம் பல முறை பல்வேறு சிரமங்களுக்கு பிறகு தனது அண்ணன் ஸ்ரீ விநாயகரின் துணையுடன் வள்ளியை திருமணம் செய்துகொண்டதாக அறியப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அருகில் உள்ள திருத்தணிகை எனும் திருத்தணியில் கோயில் கொண்டுள்ளார். வல்லிமலையின் மேல திருப்புகழ் ஆசிரமம் அமைத்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் மற்றும் குளித்த குளம் ஆகியன இன்றும் மலைமீது காணப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலை பறைகளை குடைந்து கட்டியுள்ளனர். இத்திருக்கோவில் தமிழகத்தின் தேசிய முக்கியதுவம் வாய்ந்த நினைவுச்சினங்களில் ஒன்றாகும்.