பயனர்:Jayanthitamil tam pu/மணல்தொட்டி
திருக்குறளில் மேற்பார்வை
தலைப்பு : திருக்குறள்
மூலத்தை எழுதியவர் : திருவள்ளுவர்
உரை ஆசிரியர் : சாகித்ய அகாடமி விருது
பெற்ற கவிஞர் புவியரசு
பதிப்பு : 2015
வெளியீடு : டீலக்ஸ் வெளியீடு
நூல் பெருமை :
"வள்ளுவர்செய் திருக்குறளை மறவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி" -மனோன்மணியம்
நூல் குறிப்பு :
திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலுக்கு முதலில் முப்பால் எனப் பெயர் பெற்றிருந்தன. 1584-ல் முதலில் மலையாளத்தில் தான் மொழி பெயர்கப்பட்டது. இந்நூலை உலகப்பொதுமறை என வழங்கப் படுகின்றன. சமயம் சாரா நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளில், மூன்று பால்கள் உள்ளன.
அறத்துப்பால்
பொருட்பால்
இன்பத்துப்பால்(அ)காமத்துப்பால் ஒவ்வொரு, அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் 133 அதிகாரத்திற்கு 1330 குறட்பாக்கள் உள்ளன. இக்குறள்கள் யாவையும் குறள் வெண்பாக்களால் ஆனது. அக்காலத்தில், இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும், ஒரே நூலும் திருக்குறள் தான்.
அறத்துப்பால் 1. பாயிரவியல் 2. இல்லறவியல் 3. துறவியல் 4. ஊழியல்
பொருட்பால் 1. அரசியல் 2. அமைச்சியல் 3. அரணியல் 4. கூழியல் 5. படையியல் 6. நட்பியல் 7. குடியியல்
இன்பத்துப்பால் 1. களவியல் 2. கற்பியல் கவிஞர் புவியரசு அவர்களின் உரை நூல் 318 பக்கங்களுடன் திருக்குறள் பற்றிய பிற அறிஞர்களின் பாராட்டுக்களும் இடம் பெற்று உள்ளன. ஆகையால், இந்நூல் இன்றும் இவ்விஞ்ஞானக் காலக் கட்டத்திலும் அனைவராலும் ஏற்கும் விதமாக இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.