பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி
துப்புரவு செய்ய வேண்டியவை
தொகுவார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்
மன்ஹ்வா என்பது கொரிய மொழியில் வரைகதை மற்றும் கேலிச்சித்திரங்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயர் ஆகும். மற்ற நாடுகளில் இவ்வார்த்தை பெரும்பாலும் தென் கொரிய வரைகதைகளையே குறிப்பிட பயன்படுகிறது [1]. வட கொரியாவில் வரைகதை துறை தற்போது தான் வளர்ந்து வருகிறது.
மன்ஹ்வாவின் வரலாறு
தொகுமங்கா (manga), மன்ஹுவா (manhua), மன்ஹ்வா (manhwa) ஆகிய வார்த்தைகள் முறையே ஜப்பானிய, சீன, கொரிய மொழியில் வரைகதையினை குறிப்பிடுகின்றன. ஜப்பானிய மங்காவின் சர்வதேச வெற்றிக்குப் பின்னரே மன்ஹ்வா அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. மன்ஹ்வா உருவாக்கும் கலைஞர்கள் மன்ஹ்வாகா என்று அழைக்கப்படுகிறார்கள்.
கொரிய கலாச்சாரத்தை பற்றி மேற்கத்திய நாடுகள் அதிகம் அறிந்திருக்க படாததால் மன்ஹ்வா ஆங்கிலம் பேசும் மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. ஆகவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன்ஹ்வா அந்நாடுகளில் ஜப்பானிய மங்கா என்று விற்பனை செய்யப்பட்டது. மங்காவை பற்றி அறிந்த மக்களிடையே மன்ஹ்வாவும் வெற்றி பெற்றது.
இணையவழி வரைகதை
தொகுஇணையவழி மன்ஹ்வா வரைகதைகள் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தைப் பயன்படுத்தி இலவசமாக படிக்க முடியும் என்பதால் கொரிய மக்களிடையே இவ்வரைகதைகள் வரவேற்ப்பை பெற்றன. மேலும் இது மற்ற நாட்டு மக்களிடமும் பிரபலமடைந்து வழக்கமான அச்சு வரைகதைகளுக்கு மாற்றாக வெளிவர தொடங்கின [2].
அமெரிக்காவில் மன்ஹ்வா
தொகுசான்ஹொ கிம் என்பவர் தான் அமெரிக்காவில் பணியாற்றிய முதல் மன்ஹ்வா கலைஞர். 1960 மற்றும் 70களில் இவர் சார்ல்டன் காமிக்ஸ், வார்ரென் வெளியீடு, அயர்ன் ஹார்ஸ் வெளியீடு, மார்வெல் காமிக்ஸ் [3] போன்ற வெளியீட்டாளர்களுக்காக மன்ஹ்வா வரைகதைகளை உருவாக்கினார்.
கொரிய எழுத்துக்களான 'ஹன்குல்' பொதுவாக மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம் இரு பாணியில் எழுதப்பட்டாலும், அமெரிக்க வாசகர்களுக்காக ஆங்கில புத்தகங்களைப் போல் மன்ஹ்வா இடமிருந்து வலம் பாணியிலே எழுதப்பட்டது.
மன்ஹ்வா வரைகதைகளின் தழுவல்கள்
தொகுகொரிய வரைகதைகளை தழுவி அதிகமாக உயிரூட்டுதல் திரைப்படங்கள் வெளிவரவில்லை (1897ல் வந்த 'டூலி த லிட்டில் டைனேசர்' ஒரு வெற்றிப் படம் ஆகும்). உயிரூட்டுதல் அல்லாத நேரடி திரைப்படங்கள் சில மன்ஹ்வா வரைகதைகளை தழுவி எடுக்கப்பட்டு வெற்றிப்படங்கள் ஆயின. 2004ல் வந்த 'ஃபுல் ஹவுஸ்', 2006ல் வந்த 'ப்ரின்சஸ் ஹவர்ஸ்' ஆகியவை அந்த ஆண்டுகளின் சிறந்த திரைப்படங்களாக கருதப்படுகின்றன. 'ப்ரீஸ்ட்' என்ற மன்ஹ்வா வரைகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. பின்னர் 2011ம் ஆண்டு 'ப்ரீஸ்ட்' என்ற அதே தலைப்பில் அமெரிக்க திகில் படமாக எடுக்கப்பட்டது [4]. மன்ஹ்வாவை தழுவி 2013ல் வெளிவந்த 'சீக்ரட்லி, க்ரேட்லி' என்ற படம் அதிக வசூலைப் பெற்றது.
மன்ஹ்வா வகைகள்
தொகு- மயோங்னாங் மன்ஹ்வா - இது கொரிய மொழியில் 'பிரகாசமான மன்ஹ்வா' என்று பொருள் படும். இவ்வகை மன்ஹ்வா குழந்தைகளுக்காக எழுதப்படுவது ஆகும். 1960ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகைச்சுவை பாணியில் எழுதப்படும் இதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கிடைக்கப்பெறுகிறது.
- சன்ஜுங் மன்ஹ்வா - இளம் பெண்களுக்காக எழுதப்படும் இந்த மன்ஹ்வா 1950ம் ஆண்டு முதல் வழக்கில் உள்ளது. இது ஜப்பானிய ஷோஜோ மங்காவிற்கு இணையானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mangaka". www.mangaka.co.uk.
- ↑ "Webtoon, Why So Popular?". பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
- ↑ Kim entry, Lambiek's Comiclopedia. Accessed June 9, 2011.
- ↑ "Corrosion: Cold Winter Waiting Available for Digital Download - Dread Central". www.dreadcentral.com.