பயனர்:Kesavankmd/மணல்தொட்டி

சு.ஈசுவரன் தோற்றம்:05.05.1938 மறைவு:20.10.2014 பிறப்பு:புதுக்கோட்டை மாவட்டம் திருப்பனவாசலில் சாதாரண எளிய குடும்பத்தில் சுப்பிரமணியன் அலமேலு அம்மாள் தம்பதியருக்கு மகனாக 05.05.1938 ல் பிறந்தார். கல்வி:திருப்பனவாசலில் தொடக்ககல்வி திருச்சி:தேசிய உயர்நிலைப்பள்ளியில் உயர்கல்வி(SSLC) முதல் ஆசிரியப்பணி:இராமேஸ்வரத்தில் உள்ள காரையூர் தொடக்கப்பள்ளியில் (ஆசிரியப்பயிற்சி பெறாமல் ) ஓராசிரியராக 1955முதல் 1959 வரை பணியாற்றினார்

ஆசிரியர் பயிற்சி படிப்பு:அப்போதைய இராமநாதபுரம் மாவட்டம் தற்போதைய விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜோகில்பட்டியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி படிப்பு 1959 முதல் 1961. தலைமைஆசிரியராக:1961ல் பழைய இராமநாதபுரம் மாவட்டம் தற்போதைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிலுக்குப்பட்டி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.இவர் வேதங்களை முறையாக கற்றுதெரிந்தவர். இயக்க உறுப்பினர்:22.06.1961 ல் மாஸ்டர் அவர்களால் இயக்க உறுப்பினராக சேர்ந்தார். திருமணம்:08.07.1962ல் சரஸ்வதி அம்மாளை திருப்பரங்குன்றத்தில் மணமுடித்தார்.இவர்கள் முத்து சரவணன் என்ற குமரனையும் விஜயலெட்சுமி,ஜெயந்தி என்ற இரு குமாரத்திகளையும் குழந்தைகளாகப்பெற்றனர். பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பணிஏற்பு:1961 பணிஓய்வு:1996

கற்பித்தல்பணியோடு ஆசிரியர் நலனுக்காகவும் போராடினார்.

இவர் வகித்த பொறுப்புகள்: 1961 முதல் 1996 வரை ஆசிரியர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1996 ல் பணி ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகளுக்கு மேல் உலக கல்வி அமைப்பின் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்துள்ளார் 2 முறை உலக கல்வி அமைப்பின் துணைத்தலைவராக இருந்துள்ளார் 6 நாடுகளைக்கொண்ட சார்க் நாடுகளின் ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளராக 6ஆண்டுகள் பணாயாற்றியுள்ளார் 188 நாடுகள் அங்கம் வகிக்கும் உலக கல்வி அமைப்பின்தலைவராக,ஒரு வேட்டி கட்டிய தமிழனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kesavankmd/மணல்தொட்டி&oldid=1946932" இலிருந்து மீள்விக்கப்பட்டது