பயனர்:Kiri Shakan/இலங்கையின் கண்டல் தாவரங்களின் முக்கியத்துவமும் அவை எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளும்

சுருக்கம்

      உலகலாவிய உயிர் ஆதரவு அமைப்பின் முக்கியமான அம்சமாக கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. இவை சமூக பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் காணப்படுகிற அதே சமயம் அண்மைக்காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் தொகுதியாகவும் காணப்படுவதால் இலங்கையின் கண்டல் தாவரங்களின் முக்கியத்துவமும் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது.

1.0 அறிமுகம்

      இலங்கையில் கரையோரங்கயில் சமுக பொருளாதார ரீதியாக முக்கிய அம்சமாக கண்டல் தாவரங்கள் (ஆயபெசழஎந) காணப்படுகின்றன. இவை சிறிய புதர்களில் இருந்து பெரிய மரங்கள் வரை வளர்கின்றன. கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரைகள், பொங்குமுகங்கள, வாவிகள் போன்றவற்றின் அலையடிப்பு பிரதேசங்களுக்கு இடையில் வளரும் வைரம் செறிந்ததும் வித்துக்களின் மிகவும் செறிந்த இசைவாக்கம் கொண்டதுமான தாவர இனங்களைக் குறிக்கிறது. சேற்றுப்பாங்கான பகுதிகளில் உவர், சேற்று சூழலுக்கு விசேட இசைவாக்கம் கொண்ட விலங்கு, தாவர குடித்தொகையையும் இதன் உயிரற்ற கூறுகளுமு; கண்டல் சூழல் தொகுத் எனப்படும். கண்டல் சுழல்தொகுதி பல கூறுகளைக் கொண்டதாகுமு;. இதன் சூழல்தொகுதியானது நன்னீர், கடல் சூழல்தொகுதியின் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த சூழல் தொகுதியின் உயர்ந்த உற்பத்தி திறனை உடையதும் மிகுந்த வழத்தைக் கொண்டதுமாகும். இதன் உற்பத்தி திறன் மழைக் காட்டின் உற்பத்தி திறனை விட அதியமாகும். அலையோட்டங்கள் பொசனைப்பொருட்கள் மற்றைய சூழல்தொகுதிக்கு வினையோகிப்பதால் கண்டல் சுழல்தொகுதி சக்தி உதவியளிக்கும் சூழல்தொகுதி எனவும் அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் இக்கட்டுரையில் இலங்கையின் கண்டல் தாவரங்களின் வகைகள், பரம்பல் பாங்கு, கண்டல் காடுகளின் முக்கியத்துவம், அவற்றின் அழிவு, கண்டல் காடுகளைப்பாதுகாத்தல் போன்ற அம்சங்கள் நோக்கப்படுகிறது.

2.0 இலங்கையின் கண்டல் தாவரங்களின் வகைகள்

         இலங்கையின் கண்டல்தாவரங்களை எடுத்து நோக்கினால் றைசோபோறாவின் இரு இனங்களும், சிறியொப்ஸ்(சிறு கண்டல்) இல் இரு இனங்களும் சொனறேசியாவில்(கின்ன மரம்) மூன்று இனங்களுமு; காணப்படுகின்றன. அவிசினியா(கண்ணா) வில் இரு இனங்கள். ஏஜிசியஸ் (வெற்றிலை கண்ணா) வில் ஒரு இனமும் அகனதஸ்(முள்ளி) யில் ஒரு இனமும் எக்ஸோகரியா(தில்லை) யில் ஒரு இனமும் புசைலோகாபஸ்(கடல் மாங்காய்) இல் ஓரு இனமும் கிளடேன்றோன்(பிச்சு வெளாத்தி) ஒரு இனமும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரே ஒரு பாமே குடும்பத்தாவரம் நிபா புறுட்டிகன்ஸ் ஆகும். ஒரே ஒரு பன்னம் அக்றொஸ்ரிகம் (மின்னி)ஆகும். ஹெரற்றீரா(சோமுந்திரி),டொலிகோடேன்றோன்(வில்பாதிரி),செபரா மங்கா(நச்சு மாங்காய்),டெரிஸ்(தேக்கில்)போன்றவையும் காணப்படுகின்றது. இலங்கையில் ஏறத்தாழ 40 இனங்கள் மரங்களாகவும், பற்றைகளாகவும் பண்டுகளாகவும் காணப்படுகின்றன. 

3.0 பரம்பல பாங்கு

                   கண்டல் தாவரங்கள் உவர் நீரில் மட்டும் மன்றி நன்னீரீலும் வளரக்குடியதாக இருப்பதுடன் இலங்கையின் சிறிதளவு நிலப்பரப்பில் அதாவது 0.1-0.2மூ காணப்படுகிறது. கம்பஷா, யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், மட்டகளப்பு, போன்ற மாவட்டங்களில் அதிகமாக் கண்டல் தாவரங்கள் காணக்கிடைகின்றன. அமிலத் தன்மையிலுள்ள காற்றுக் குறைவான உவர் மண்ணில் வளரும் இவை வற்று மட்டத்திற்கும் இடையில் வளரக்கூடியன. இலங்கையின் மிகப்பெரிய கண்டல் சுழற்றொகுதி புத்தள டச்சுக்குடா- போத்துக்கல் குடாத் தொகுதி ஆகும். இரண்டாவது பெரிய தொகுதியாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. இலங்கையின் கண்டல் காடுகளின் பரப்புக்கள் அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் கண்டல் காடுகளின் பரப்புக்கள்

மாவட்டங்கள் கண்டல் காடுகளின்

                பரப்புக்கள் 

அம்பாறை 292 மட்டக்களப்பு 1421 காலி 187 கம்பஹா 122 அம்பாந்தோட்டை 539 யாழ்ப்பாணம் 260 களுத்துறை 70 கிளிநொச்சி 312 குருநாகல் 1261 மாத்தறை 6 முல்லைத்தீவு 463 புத்தளம் 2264 இரத்தினபுரி 1461 மொத்தம் 8687

4.0 கண்டல் காடுகளின் முக்கியத்துவம்

ஆதிகாலத்தில் இருந்து மனிதன் இந்த சூழட்தொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப்பெற்று வந்தான். ஆனால் நவீன கால மனிதன் பல்வேறுதீமைகளை இச்சுழல் தொகுதிக்கு செய்து வருகின்றமையும் அதன் மூலம் நன்மைகளைப்பெற்று வருகிறான் இதன் படி கண்டல் தாவரங்களின் பயன்களை கீழே நோக்குவோம். 4.1 உணவு மற்றும் உபகரண உற்பத்திகள் ஆக்ரோஸ்ரிக்கத்தின் இளந்தளிர்கள் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கண்டல் தாவரங்களின் தளிர்கள் பெருமளவில் கரையோரமக்களால் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன இத்துடன் கண்டல் மரங்கள் கட்டிட வேளைகளுக்கும் கம்பாகவும் றைசோபோறா, புறுகைறா, அபிசினியா போன்றவற்றில் இருந்து பெறப்படும். வெட்டுமரங்கள் படகு கட்டவும் மீன்பிடி உபகரணங்கள் செய்யவும் பயன்படுகின்றன. இங்கு காணப்படும் பொதுவான மீன்பிடி முறை ------ மீன்பிடி முறையாகும். மீன்கள் ,இரால்கள் மொலாஸ்காக்கள் என்பன உணவுக்காக பிடிக்கப்பட்டு விற்க்கப்படுக 4.2 வேட்டப்பட்ட மரங்களின் மீன்களின் பாதுகாப்பாகத் தொழிற்படல்

அதாவது கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு நீர் பகுதிகளில் பொடப்படுகின்ற போது மரத்தின் பகுதிகளில் மீன்களின் வாழ்விடமாகவும் இரைகொள்ளிகளில் இருந்து தம்மைத் தப்பித்துக் கொள்வதற்கும் ஏணைய பெரிய உயிரினங்களிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுக்கும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான இடமாகவும் இது காணப்படுகின்றது சில வாரங்களின் பின் பொடப்பட்ட மரங்களைச் சுற்றி வளைகள் பொடப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. 4.3 தளபாட உற்பத்தி வீட்டுப் பாவனைப் பொருட்கள்

அதாவது கண்டல் தாவரங்கள் ஆனவை பெருமளவில் தளபாட உற்பத்தி, வீட்டுப்பாவனைப் பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெரும்தோட்டவில் செபரா என்னும் தாவரமானது முகமூடி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் றைசோபோறா, சிரியோப்ஸ் போன்றவற்றில் இருந்து பெறப்படும் தளிர் வலையை சாயமிட உதவுகிறது. ஆத்துடன் இம்மரங்களின் பட்டைகள் அகற்கப்பட்டு கீராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான கிலோ பட்டைகள் அகற்றப்படவதாக கணக்கிடப்பட்டள்ளது அத்துடன் இம்மரங்கள் இயங்கையாகவே பூச்சி புழுக்களின் அரிப்பினால் தாக்கப்படுவது குறைவாக காணப்படுவதால் தளபாட உற்பத்திக்கு மிகச் சிறந்ததாக காணப்படுகிறது.

4.4 விறகு உற்பத்தி, பசளை உற்பத்தி

          அதாவது இக் கண்டல் தாவரங்கள் ஆனவை ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கரையோரப் பெரும்பகுதி மக்களின் பிரதன எரிபொருளாகக் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் முலம் அங்குள்ள மக்களின் எரிபொருளுக்கான வாழ்க்கை தரவுச்டிசலவு என்பது இத்தகைய தாவரங்களல் குறைக்கப்படுகின்றன. இதனை இவ்வாறு உறுதியாகக் கூறமுடியுமெனின பெரும் பாலான கண்டல் தாவரங்கள் உலகளாவிய ரீதியில் இதற்காகவே அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆவிசினியா போன்றவற்றின் இலைகள் விவசாயத்தில் பசுந்தாட் பசளையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

4.5 கால்நடைத்தீவனம், மருந்துப் பொருட்கள் உற்பத்தி

         இக் கண்டல் தாவரங்கள் கால் நடைத்தீவனமாகப் பெருமளவில் கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகின்ற உணவாகக் காணப்படுகின்றது. அத்துடன் றைசோபோறாவின் பட்டைகள் எலும்பு முறிவைக் குணப்படுத்தப் பயன்படுத்துவதோடு தில்லை மரத்தின் பாலானது தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மீனுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படும் ரதம் நிறைந்த பெரிய பொலிக்கீற்றாக்கள் இங்கிருந்து பெறப்படுகின்றன.

4.6 கரையோர மீன் பிடிக்கு உதவுதல்

          அதவாது கண்டல் சூழல் தொகுதியான கரையோர மீன் பிடியில் பிரதான பங்கை வகிக்கிறது. இது இளங்கடல் குஞ்சு மீன்கள் வளரும் இடமாகவும் அவற்றிற்கு உணவழிக்கும் இடமாகவும் காணப்படுகிறது. கண்டல் சூழல் தொகுதி இல்லாத இடங்களில் பிடிபடும் மீன்களின் அளவு குறைவாகக் காணப்படுகிறது. ஏனெனில் கண்டல் தாவரங்கள் மீன்களின் வாழிடமாகவும் எதிரிகளிடமிருந்து ஒழிப்பதற்குப் பயன்படுத்துவதோடு அதிலிருந்து விழுகின்ற இலைகள் குஞ்சுகள் என்பவற்றைக் கொண்டு கூடுகள் கட்டி அவைகளிலேயே முட்டை இட்டு ஒட்டி வைக்கின்றன மட்டக்களப்பு வாவியில் றியாஸ் அகமட், மீனாதாமரத்தினம்(2003) ஆகிய இரு அய்வுகளிலும் உள்நாட்டு இனத்துக்குரிய மீன்களில் பெரும்பாலுமானவை கண்டல் தாவரங்களை ஒட்டிய பகுதிகளிலேயே அதிகளவான கூடுகள் கட்டப்பட்டு இருந்தன என்பதை தெளிவுபடுத்தியது. இதே மாதிரியான முடிவகளை பின்ரோ, புஞ்சிஹேவ(1996) நீர் கொழும்பு வாவியினுடாகப் பெற்றுக்கொண்டனர்

4.7 உணவுச்சங்கிலிச் செயற்பாட்டுக்கு உதவுதல்

          நீரில் விழுந்து அழுகும் போசனை மிகுந்த தாவரப்பாகங்கள் அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு இந்தப் போசனைப் பதார்த்தங்கள் அழுகளுக்கு உட்பட்டு அழுகள் வளரி உணவுச்சங்கிலியின் முதல் கொழுவியாகச் செயற்பட்டு பொருளாதார முக்கியத்துவம் வாங்ந்த பெரிய மீன்களை போசிக்க உதவுகின்றது. றைசோபோறாவின் மரத்தின் 6.1 சதவீதமும், இலையில் 3.1 சதவீதமும் புரதம் காணப்படுகின்றது. இவை நீரில் விழுந்து 12 மாதத்துக்குப் பின் இந்தப் புரத உள்ளடக்கம் 22 சதவீதமாக அதிகரிக்கின்றது. 

4.8 கடற்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டல் காடுகள் ஆற்றுமுகங்கள் கழிமுகங்கள் வாவிகளின் கரைகளைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேரில் பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும் முருகற்கல் பாறைகளையும் கடலின் புற்படுக்கை என்பவற்றையும் அடையல்கள் சேராமல் பாதுகாக்கின்றது. இயற்கையாக நிலம் வளக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இரண்டு சூழல் தொகுதிகளில் கண்டலும் ஒன்றாகும். மற்றையது முருகைக்கல் பாறையாகும். சுpல இடங்களில் கண்டல் 100 அஅஅ நிலத்தைக் கூட வளர்ந்திருக்கும். அத்துடன் மண்ணரிப்பு சூறாவழியின் பாதிப்பு சுனாமி பாரிய அலைகளினால் ஏற்படும் பாதிப்பினையும் ஓரளவு கட்டுப்படுத்துகின்றது கடந்த சுனாமி அனர்த்தத்தின் போத உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை இக்கண்டல் தாவரங்கள் பெருமளவில் குறைத்திருக்கின்றன உதாரணம்:அந்தமான்தீவுகள் 4.9 அழகியல் அம்சம் புகளிடமாகத் தொழிற்படல்

        கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உரிஞ்சும் தன்மை உடையதாக காணப்படுகிறது. இதனால் வாவிகளின் மாசுபடலைக் குறைக்கின்றது. கண்டல் காடுகடுகள் மீன்களைப் பிடித்து படகுகளை விட்டு பறவை, விலங்குகளை இரசித்து பொழுது போக்குமு; இடமாகவும் காணப்படுகிறது அத்துடன் பெருமளவான ஒள்ளாசப் பயனிகளை கவரும் இடமாகவும் இது காணப்படுவதால் பெருமளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் காணப்படுகிறது அத்துடன் உள்நாட்டுப் பறவைகள் விலங்குகள் வெளிநாட்டுப்பறவைகள் விலங்குகளின் புகழிடமாகவும் தொழிற்படுகிறது. இத்துடன் ஆர்வமள்ள பாடசலைகள் பல்கலைக்கழக் மாணவர்களின் சிறந்த ஒரு பரிசோதனை இடமாகவும் பயன்படுகிறது இவை உயிரினப் பல்வகமையைப் பேனுவதில் முக்கியத்துவம் பெறுகிறது இலங்கையை பொறுத்தவகையில் அண்ணளவாக 8800 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன மேலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசத்திலும் அதிகளவில் கண்டல் காடுகள் காணப்படுகின்றன. 2004இல் இடம் பெற்ற பாரிய சுனாமிப் பாதிப்பின் போத இந்தக் கண்டல் காடுகள் அதிகளவாக செதத்தைக் குறைத்து பல உயிர்களை காக்க உதவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

4.10 கண்டல் தாவரங்கள் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது

     கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறை;பதிலும் மற்றும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும்; பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவர இனமாகும். 	கண்டல் காடுகள் பல்வேறு வழிகளிலும் மக்களிற்கும் இயற்கைக்கும் உதவுகின்றது. கண்டல் காடுகளை அண்டிய பகுதிகளில் அதிகளாவன மீனனங்;;கள்நண்டு மற்றும் இறால் போன்றவையும் வாழ்கின்றன. இவை அப்பிரதேச மக்களின்; வாழ்வாதாரமாக விளங்குவதுடன்;; இந்தக் கண்டல் தாவரங்களை அண்டி வாழும்;; மீனினங்கள் பவளப்பாறைகளை உருவாக்கும் செயற்பாட்டிலும்; ஈடுபடுவதால் இந்தக் கண்டல் காடுகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய நன்மையாக விளங்குகின்றது. 

4.11 இயற்கைச் சமனிலையைப் பேண உதவுகிறது

     கண்டல் தாவரமானது இயற்கைச் சமனிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றி வருகின்றது. மேலும் இந்தத் தாவரங்களின் நிழல்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து வாழ்வதற்கு உகந்ததாக அமைகின்றது. இதனால் மீனினங்கள் பெருகி கடற்சமனிலையைப் பாதுகாக்க உதவுகிறது. 

அத்துடன் கண்டல் தாவரங்கள் கடல்நீர், நன்னீருடன் கலக்காமலிருப்பதற்கு பெரும்; பங்காற்றி வருகிறது. அத்துடன்;; இது கடல்;; நீரானது மண்வளத்தைப் பாதிக்காமல் பயிர்ச்செய்கை நிலங்களைப் பாதுகாக்கவுமு; நன்னீர் உவர் நீராக மாறாமல் தடுப்பதோடு மறைமுகமாக விவசாயிகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றது.

4.12 கடல் வளங்களைப் பாதுகாத்தல்

          கண்டல் தாவரங்களின் வேர்கள் மண்ணைப் பிடித்து வைத்திருப்பதனால் வாவிகள், ஆறுகளின் கரைகளை மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் முருகை கற்பாறைகள், கடற்படுக்கைகள் என்பன சேதமடையாமல் பாதுகாக்க இது பேருதவி புரிகின்றது. இது மட்டுமல்லாமல்; நீர்வாழ்;;;;;;;;;;;;; உயிரினங்களின் இன விருத்திக்கும் அதன் தொடர்ச்சியான நிலைபேற்றுக்கும்; அவசியமான சூழலை இந்தக் கண்டல்; தாவரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. உலக நிலப்பரப்பில் ஒரு வீதத்தைக் கண்டல் தாவரங்கள் கொண்டிருப்பதாகவும்; இயற்கைச் சமனிலையைப் பாதுகாக்க பெரிதும் உதவுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

4.13 வாழ்க்கைத்தரம் முன்னேற்றத்திற்கு உதவுதல்

      அதாவது கண்டல் தாவரங்கள் மீன உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுதல். இயற்கைச் சூழலைப் பேணுதல், சாயங்கள் உற்பத்தி, விறகு உற்பத்தி, தளபாட உற்பத்தி, கப்பல் கட்டல்;;;;;;;;;;; தொழில் போன்ற பல்வேறு தொழில்களுக்கு உதவுவதன் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குப் பெரிதும் உதவி வருகின்றது. 

4.14 கடல்வாழ் அங்கிகளுக்கான திறவுகோல்; ஆகத்தொழிற்படல்

                ஆரோக்கியமான சதுப்பு நில மரங்களின் வளர்ச்சியே ஆரோக்கியமான கடல்வாழ் உயிரிகளுக்கான திறவுகோல்;; ஆகும். இந்த மரத்தில் இருந்து விழும் இலைகள், கிளைகள் மற்றும் கழிவுகள் கடலுக்கு ஊட்டச்சத்து என்று கூறலாம். கடலில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான உணவினை வழங்குகின்றது, இந்த மரங்களில் கடற்பசுக்கள் (ஆயயெவநநள) நண்டு உண்ணும் குரங்குகள்;; (ஊநயடி – நுயவiபெ அழமெநலள) மீன்பிடி பூனைகள் (குiளாiபெ உயவள) பாம்புகள்  (ளுயெமநள) பல்லிகள் (ஆழnவைழச டுணையசனள) கடல் ஆமைகள்;;;; (ளுநய வரசவடநள) ராயல் பெங்கால் புலிகள் (சுழலயட டீநபெயட வபைநசள) மண் கேப்டன்;; மீன் (ஆரன ளமippநச கiளா) போன்ற விலங்குகள் நேரடிப் பயனைப் பெறுகின்றன. 

4.15 கடல் நீரைத் தூய்மையாக்கும் செயற்பாடுகள்

       இந்தக் கண்டல் மரங்களால் கடல் நீரோட்டத்தில் நைதரசன் மற்றும் பொஸ்பரஸ் போன்ற பதார்த்தத்தைத் தெளிக்கிறது, அதன் மூலம் கடலில் இருக்கும் உயிரினங்களுக்கு சுவாசம் தேவையான அளவு கிடைக்கின்றது. அது மட்டுமன்றி மனிதர்கள் புயல் காற்றுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவுகின்றது. மேலும் காபனீரொக்சைட் இத் தாவரங்களில் படிவதால் உலக வெப்பமயமாதல் விளைவுகளைக் குறைக்கும்; சக்தியும் இக்கண்டல் தாவரங்களுக்கு உண்டு. கரையோரங்களை அண்டிய பகுதியில் உள்ள வளங்கள் வனப்பு மிக்கதாகவும் தேசத்திற்கு எழில் சேர்க்கவும் இந்தக் கண்டல் தாவரங்கள் பெரும்பாங்காற்றுகிறது. 

அத்துடன் மேலே பல்வேறுபட்ட முக்கியத்துவங்களைக் குறிப்பிட்டதுடன் மேலும் கண்டல் சூழற்றொகுதியில் உள்ள மொலாஸ்காக்களின்; ஓடுகள் சுண்ணாம்பு உற்பத்திக்கு அத்துடன்; கண்ட மேடைகளின் கண்ட அடித்தள மேடைகளில் காணப்படும் கண்டல் தாவர பிளாந்தன்கள் மீன் உணவாகவும் கண்டல் சூழல் பகுதிகளில் நன்னீர் கடல் நீருடன்; கலக்கும் பகுதியாக அதிகம் காணப்படுவதால் மீன் செறிவுகள் பகுதியாகவும் மற்றும் தேன் மெழுகு போன்றவற்றைக் கூடட இத்தாவரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே மேற்கூறப்பட்ட முக்கியத்துவங்கள் அடிப்படையில் கண்டல் தாவரங்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு தேவைகள் அடிப்படையில் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

5.0 கண்டல் காடுகளின் அழிவு

         மனிதன் என்பவன் சுயநலம் கொண்ட ஒரு சமூகப் பிராணி. எப்போதும் சூழலை தனக்கு ஏற்றாற் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவு நன்மைகளைப் பெற்று அதன் தொடர்ச்சியான நிலவுகைக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாமல் இருந்து விடுகின்றான். இலங்கையின் கண்டல் காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இது தான் மூல காரணமாக இருக்கின்றது. 

இலங்கையில் கலா ஓயா கண்டல் தொகுத தான் மிகவும் குறைந்த பாதிப்புக்குள்ளானதாகும். பெருந்தோட்டை கண்டல் தொகுதி உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. புத்தளம், கல்பிட்டி பகுதிகளில் உள்ள கண்டல் தொகுதிகள் இறால் வளர்ப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தசாப்தங்களாகத் திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இறால் பண்ணைகள் தற்போது பல்கிப் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு வாவியின் அண்டிய காடுகளும்; வாழைச்சேனை வாவியின் காவத்தை முணை கண்டல் காடுகளும் பெருமளவில் இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலேயே கண்டல் காடுகள் கண்மண் தெரியாமல் கடந்த ஒரு தசாப்த காலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக பாரியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு வாவியின் கரையோரத்திலும் வீதிகளின் கரையோரங்களில் உள்ள மரங்கள் வருடத்திற்கு பல தடவைகள் வருடம் அடியோடு வெட்டப்படும்;;;;;;;;;; (தில்லை) தீயிடப்பட்டும் (தைபா) வருவதைக் காணலாம். இதே பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொத்துவில்; (ஊறணி, திருக்கோவில், தம்பிலுவில்) பிரதான நெடுஞ்சாலையிலும் அவதானிக்கலாம். இதே மாவட்டத்தில் ஒலுவில் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு கண்டல்கள் காணப்படுகின்றது. துறைமுக நிர்மாணத் திட்டத்தால்; அவைகளும் கணிசமான அளவு பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றன.

இதே மாதிரியான பிரச்சினையை திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, இறக்கண்டி, நிலாவொளி, சாம்பல் தீவு, சல்லி, மட்டிக்களி, கொட்டியாரக் குடாவைச் சுற்றிய பகுதிகள், மூதூர் போன்ற பகுதிகளிலும் அவதானிக்கலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகக் காடுகளுக்குச் சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள கண்டல் வளங்களை (குறிப்பாக விறகு) பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள். இதன் காரணமாகவும் கண்டல் காடுகள் பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

மேலும் அனுமதி பெறாமல் கண்டல் நிலம் விவசாய நிலமாகவும் மாற்றப்படுகிறது. (உதாரணம் படுவான்கரைப் பகுதிகள் - பன்குடாவெளி) நகராக்கம், வீதி விஸ்தரிப்பு, உல்லாசப் பிரயாண ஹோட்டல் நிர்மாணம், தொழிற்சாலை நிர்மாணம்;; என்பனவும் கண்டல் காடுகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நீர்கொழும்பு பகுதியின் (டீசரளா pடைந) மீன்பிடி முறையினால் கண்டல் காடுகள் பாதிக்கப்படுகின்றது. இது மட்டக்களப்பு வாவியிலும் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது, இந்த முறையைத்; தமிழில் தூபமூட்டி மீன்பிடி முறையெனலாம். ஒரு சிலரின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்டளவில் இந்த மீன்பிடி முறைக்காக கண்டல் தாவரங்களின் கிளைகள் அகற்றப்படும் போது Pசரniபெ விளைவால் தாவரம் மீண்டும் செழித்து வளருகின்றது என்கின்றனர். இந்த முறைகளுக்காகப் பெரும்பாலும் முழு மரங்களும்;;; அடியோடு வெட்டப்படுவதில்லை. மேம்போக்காக சில சிறுசிறு கிளைகளே வெட்டப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையை சாதாரண குடியான மீனவன் செய்யும் போது அது சூழலியல் சார்ந்த (நுnஎசைழnஅநவெயட குசநைனெடல) ஆகிறது. அதுவே இலாபநோக்குக் கொண்ட முதலாளிகளின் கைக்கு போகும்; போது சூழலை நோக்கிய விடயமாகிறது. சாதாரண குடியான மீனவர்களின் சூழல் சார்ந்த அறிவும் அவர்கள் வாழிடத்தில் மீனவர்களின் சூழல் சார்ந்த அறிவும் அற்புதமானது.

எப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76மூ மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகில் வேகமாக அழிந்துவரும்; இனத்தில் இந்த கண்டல் தாவரங்களும் அடங்கும். புத்தளம் மாவட்டத்தில்; சிறுகடலை அண்டிய பிரதேசங்களில் காணப்படும்; சதுப்பு நில தாவரங்களான கண்டல் தாவரங்கள் பெருமளவில் அழிந்து வருவதாக சுற்றாடல் துறையினர்; தெரிவித்தனர். குறித்த சதுப்பு நில தாவரங்கள் அழிவடைவதால் சிறுகடலில் மீனினங்கள் சினைப்படுத்தல் செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் இத்தாவரங்கள் அழிவடைவதற்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான காரணம் சட்ட விரோத இறால் பண்ணைகள் அமைத்தல் மற்றும் மனித செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் குடியேற்றம் மற்றும் அறியாமையின் காரணமாக பல இடங்களில் அது அழிக்கப்பட்டது. இது அழிக்கப்பட்டதனால் கடலை நம்பி தொழில் செய்வோர் மற்றும் கடலை அண்டிவாழ்வோரின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடலில் மீனின் பெருகுதல்;; குறைந்து போக இது காரணம் எனக்கூறலாம் அத்தோடு இயற்கையை அழகுபடுத்தும் பல்வேறுபட்ட பறவைகள், விலங்குகள் போன்றவற்றை எமது பிரதேசத்தில் அழிந்து வருகின்றன இவ்வாறான இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளின் காரணமாக கண்டல் தாவரங்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பல சவால்;களை எதிர்கொள்ளப்படுகின்றது. 6.0 கண்டல் காடுகளைப் பாதுகாத்தல்

       உலகில் வேகமாக அழிந்து வரும் இனத்தில் இந்த கண்டல் தாவரங்களும் அடங்கும். ஆகவே அவற்றைப் பாதுகாப்பது இலங்கை அரசினதும்; மக்களினதும் மிக முக்கிய கடமையாகும். இதுவரை எந்த உலக நாடுகளுமே தனிப்பட்ட முறையில் கண்டல் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இலங்கை அதற்கு முன்னோடியாக விளங்கும். புதிய சட்டங்கள் மற்றும் புதிய கண்டல் காடுகள் உருவாக்கம் என்பன மூலம் புதிய முறையில் கண்டல் காடுகள் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டும். அண்மையில் கண்டல் தாவரங்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி அதிகரிக்கவும் வேண்டும் என சீகோலோஜி நிறுவனத் தலைவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கண்டல் காகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும்; மிகப்பெரியவொரு நன்மையாகவே விளங்குகிறது. இலங்கை அண்ணளவாக 3.4 அமெரிக்க டொலர் செலவிட்டு ஏற்கனவே உள்ள 8800 ஹெக்ரேயர் அளவுள்ள கண்டல் காடுகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை உருவாக்கி அதனை ஐந்து வருடங்களுக்கு செயன்முறைப்படுத்துதல் மற்றும் 3900 ஹெக்ரேயர்;;;;;;;; அழிந்துவிட்ட கண்டல் காடுகளையும் மீள உருவாக்கும் திட்டத்தினை மேற்கொள்ள இருக்கிறது. மேலும் புத்தளம் சதுப்பு நிலத்தாவரங்கள் அழிவடைவதற்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வாவிகளில் காணப்படும்; கண்டல் தாவரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வாவிகள்; மற்றும்; களப்புக்களில் கண்டல் கன்றுகளை நடும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப்பகுதி வாகரைப்பகுதி மற்றும் முகத்துவாரத்தில் இருந்து கிடங்;;கி வரை உள்ள பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது திருகோணமலை, மூதூர், கிண்ணியா ஆகிய பகுதிகளில் மிகவும் சிறப்பாக இந்தக் கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கிலும் கண்டல் தாவரங்கள் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையின் கண்டல் காடுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

7.0 முடிவுரை கண்டல் தாவரங்கள் சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம்; பெற்ற ஒன்றாகக் காணப்படுவதால்; அதனைப் பல்வேறுபட்ட அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மக்களினதும்; தலையாய பொறுப்பாகும். இது பற்றி மக்கள் தெளிவு பெறுவதன் மூலமாக இயற்கை பொக்கிஷங்களையும் அழகாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சதுப்பு நில மரங்களை சுத்தம் செய்து பாதுகாத்து பயன்பெற வேண்டும். கண்டல் சூழற்றொகுதி அரிய புத்தகங்;;கள் நிறைந்த நூலகம் போன்றது. அற்புதமானது. இதனையாவது நாம் பாதுகாத்து எமது சந்ததிகளுக்குக் கொடுப்பது எமது தலையாய பாரிய கடமைகளுள் ஒன்றாகும்.