பயனர்:Kumarcharu/மணல்தொட்டி

                                                      நமது நாடு இந்தியா

நமது நாடு இந்தியா பழமையான நாகரீகத்தையும் உயர்ந்த கலாச்சாரத்தையும்,மிகச்சிறந்த பண்புகளையும் கொண்டது. சுதந்திரத்திற்குப் பின்பு நமது நாடு சமூக பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. உணவுப் பொருள் உற்பத்தியால் தன்னிறைவையும் தொழில்துறையில் உலக நாடுகளின் வரிசையில் விண்வெளி ஆய்வில் இந்தியா ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவை ஒரு சிறிய உலகம் என்று அழைப்பதுண்டு. மாறுபட்ட புவியியல் அமைப்பு,தட்பவெப்ப நிலை,தாவரங்கள்,விலங்குகள்,பலவகைப்பட்ட கலாச்சாரம்,பழக்கவழக்கங்கள் மொழிகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் கொண்டது நமது இந்தியா நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் நாட்டில் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்கிறோம். நில அளவு அடிப்படையில் உலக அளவில் 7வது பெரிய நாடாகவும்,மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kumarcharu/மணல்தொட்டி&oldid=1971221" இலிருந்து மீள்விக்கப்பட்டது