பயனர்:LaaliR/மணல்தொட்டி

                                              அகனாநூறு

பாடியவர்: கபிலர் திணை: குறிஞ்சி துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

(களவு ஒழுக்கத்தினாலே மக்களின் தோற்றத்தில் புது மாற்றஙளைக் கண்ட தாய் ஐயுற்றாள், அவளை சிறை காவலுக்கும் உட்படுத்தினாள். அதன்மேல், தன் மகளுடைய தோழியை அழைத்து வினவுவதிலும் ஈடுபடிகிறாள். இரவாகிய அவ்வேளையிலே இரவுக்குறி நேரிட்டு வந்து காத்திருக்கும் தலைவன் காதுகளிலேயும் அவர்களுடைய உரையாடல் விழ, அவன் விரைந்து வரும் வேட்கையனாகச் செல்லுகிறான்.)

   உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
   பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
   மின்னு நிமிர்ந்தனன் கனங்குழை இமைப்ப.
   பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
   வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
   மிடைஊர்ப்பு இழியக் கண்டனென், இவள் என
   அலையல் - வாழி வேண்டு அன்னை! - நம் படப்பைச்
   சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து 
   தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே:
   நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
   கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான் 
   சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர
   மன்ற மரா அத்த கூகை குழறினும் 
   நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
   புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு,
   முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
   எந்தையும் இல்லன் ஆக,
   அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:LaaliR/மணல்தொட்டி&oldid=1715694" இலிருந்து மீள்விக்கப்பட்டது