பயனர்:M.vidhyasri/மணல்தொட்டி

நிமாபென் ஆச்சார்யா
குசராத்தின் அஞ்சர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012
தொகுதிபூஜ்
பதவியில்
1995–2012
தொகுதிஅஞ்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகுஜராத்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மருத்துவர். பவேஷ்பாய் ஆச்சார்யா
கல்விமகப்பேறு மருத்துவர்
தொழில்மருத்துவர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர்.
இணையத்தளம்nimabenacharya.in

நிமாபென் பவேஷ்பாய் ஆச்சார்யா (Nimaben Acharya) ஓர் இந்திய அரசியல்வாதியும், குசராத்து மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தலில் குசராத்தின் அஞ்சர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1] இவர் முன்பு குசராத்து மாநில குடும்பக் கட்டுப்பாட்டுக் குழுவில் பணியாற்றினார்.

ஏப்ரல் 2017 இல், ஆச்சார்யா ஒரு இறுதி சடங்கிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவரது வாகனம் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி இவரது வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இத்தாக்குதலில் ஆச்சார்யாவும் இவரது ஓட்டுநரும் பாதிப்பில்லாமல் தப்பினர்.[2]

2009 மக்களாவைத் தேர்தலின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காந்தி அம்ருதியாவுடன் சேர்ந்து வாக்காளர்களை கவர பணம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு மோர்பி மாவட்ட நீதிமன்றத்தால் ஒரு வருடம் சிறைத்தண்டனை பெற்றார்.[3] 2002 , 2007 சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் 2007 ஆம் ஆண்டில், இவரது கணவரும் ஆறு பெரு நிறுவன அதிபர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினர். பின் சில வருடங்களில் இவரும் தனது கணவரின் பாதையை பின்பற்றினார்.[4]

2007ல் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் செகாவத்த்துக்கு வாக்களித்த காரணத்துக்காக காங்கிரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  2. "Stones hurled at Gujarat BJP MLA Neemaben Acharya's vehicle". The Indian Express. 17 April 2017. http://indianexpress.com/article/india/stones-hurled-at-gujarat-bjp-mla-neemaben-acharyas-vehicle-4615604/. 
  3. https://www.dnaindia.com/ahmedabad/report-one-yr-jail-term-for-mla-nima-acharya-ex-mla-kanti-amrutiya-2584134
  4. https://m.hindustantimes.com/india/sitting-cong-mla-s-husband-joins-bjp/story-sb0w4gW061OY0aF6PGNL9J.html
  5. http://archive.indianexpress.com/news/15-rebels-ignore-modi-vote-for-patil/205825/2
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:M.vidhyasri/மணல்தொட்டி&oldid=3206475" இலிருந்து மீள்விக்கப்பட்டது