பயனர்:MJohnRupert/மணல்தொட்டி

க்ரெகோரியன் தொலைநோக்கி

17ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த ஸ்காட்லாந்து-நாட்டினரான கணிதவல்லுனரும் வானியல்நிபுணருமான 'ஜேம்ஸ் க்ரெகோரி(James Gregory)' என்பவரால் வடிவமைக்கப்பட்டது இந்த 'க்ரெகோரியன் தொலைநோக்கி'(Gregorian telescope). இது முதன்முதலில் 1673-ஆமாண்டு 'ராபெர்ட் ஹூக்'(Robert Hooke) என்பவரால் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. முதலில் செயலியல்வெற்றிகண்ட 1668 ஆண்டு 'ஸர் ஐஸக் ந்யூட்டனால்'(Sir Isaac Newton) உருவாக்கப்பட்ட ந்யூட்டானியன் தொலைநோக்கிக்கு முந்தையது இத்தொலைநோக்கியின்வடிவமைப்பு, ஆயினும் இத்தொலைநோக்கியை முதல்ந்யூட்டானியன் தொலைநோக்கிக்கு முன்னால் வெற்றிகரமாக உருவாக்க இயலவில்லை.

வரலாறு

தொகு

ஜேம்ஸ் க்ரெகோரி அவர்களின் ஆப்டிகா ப்ரொமோட்டா (Optica Promota - ஒளியியல் வளர்ச்சி) என்றநூலில்தரப்பட்டவடிவமைப்பாகவிருப்பதால் இத்தொலைநோக்கிக்கு க்ரெகோரியன் தொலைநோக்கி என்றபெயர்வழங்கப்பட்டது. இதையொத்த கருத்தியல்வடிவமைப்புகள் 'போனாவெஞ்சுரா கவேலியெரி (Bonaventura Cavalieri)' எழுத்திலும் (Lo Specchio Ustorio (On Burning Mirrors), 1632[2]) மரின் மெர்சென்னே (Marin Mersenne (L'harmonie universalle) 1636[3]). எவ்வித செயலாக்கத்திறமையில்லாததாலும் உருவாக்குந்திறமைபெற்ற ஒளியியல்வித்தகர்களில்லாமையாலும் க்ரெகோரியின் தொடக்கமுயற்சிகளனைத்தும் தோல்வியைத்தழுவின. பத்தாண்டுகளுக்குப்பிறகு 'ராபெர்ட் ஹூக்' என்ற சோதித்தறியும் அறிவியலறிஞரின் உதவியுடன் வெற்றிகரமாக செயல்வடிவம்பெற்றது.

வடிவமைப்பு

தொகு

க்ரெகோரியன் தொலைநோக்கி இரண்டு குழியாடிகளைக்கொண்டது. இதிலிருக்கும் முதல்நிலை-பரவளையக்குழியாடி ஒளியை இரண்டாம்நிலை-நீள்வட்டக்குழியாடிக்குமுன்னால் குவிக்கிறது. இங்ஙனம்குவிந்துவிரியுமொளியை இரண்டாம்நிலை-நீள்வட்டக்குழியாடி மீண்டும் எதிரொளித்து முதல்நிலைப்பரவளையக்குழியாடியின் நடுவிலிருக்குந்துளைவழியாக பார்வையாளரின் கண்ணருகுப்பொருளில் குவிக்கிறது.

ந்யூட்டானியன் தொலைநோக்கியில் பார்ப்பவர்நிழல்ஆடியிற்படும். ஆடியின்பின்னால்நின்றுகொள்வதால் இச்சிக்கல் 'க்ரெகோரியன் தொலைநோக்கி' வடிவமைப்பிலில்லை. நேரானக்காட்சியைவழங்குதல் இத்தொலைநோக்கியை தேடுதலுக்குப்பயன்படுத்த ஏற்றதொன்றாக்குகிறது. இவ்வடிவமைப்பானது பின்னாளில் வந்த கேஸெக்ரெய்ன் தொலைநோக்கியால் பின்னுக்குத்தள்ளப்பட்டது. இருப்பினும் முப்படகங்களின் உதவியின்றி துல்லியமான காட்சியைவழங்குவதால் தேடுதல்தொலநோக்கியாக பலவிடங்களில் இன்றும்பயன்படுத்தப்படுகிறது. 1985 வரையில் பெரும்க்ரெகோரியன் தொலைநோக்கிக்கான ஆடிகளை ஸ்ற்றிவார்ட் வானாய்வகம் 1985 வரை செய்துவந்தது.

க்ரகோரியன் தொலைநோக்கி வடிவமைப்பில் முதல்நிலைஆடி இரண்டாம்நிலைஆடியின் முன்பு உண்மையானக்காட்சியை(பிம்பம்) ஏற்படுத்துகிறது. இவ்விடத்தில் வெளிக்காட்சி காட்சிதடுப்பு திரைகளை அமைத்துக்கொள்ள முடியும்.

கற்றுக்குட்டிநிலையிலிருப்பவர்களுக்கு க்ரெகோரியன் தொலைநோக்கி உருவாக்குவதற்கு எளிமையானதொன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MJohnRupert/மணல்தொட்டி&oldid=1715617" இலிருந்து மீள்விக்கப்பட்டது