பயனர்:Maavel/மணல்தொட்டி
மாவேள் உணவு மற்றும் வேளாண்பொருட்கள் நிறுவனம்
தொகுவரலாறு
தொகுஇரசாயனமற்ற உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம் மாவேள். தமிழ்நாட்டில்
உள்ள வேளாண்மை நிலங்களும், நீர்நிலைகளும் மறுசீரமைப்பு செய்ய 2013 ம் ஆண்டுமுதல் மக்களை ஒருங்கிணைத்து 400 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை சீரமைத்து, பொதுமக்களை நாடளவில் பங்கேற்கச்செய்த சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் கிளை அமைப்பாக செயல்பட்டுவந்த இந்நிறுவனம், 2016 ம் ஆண்டு தனியார் நிறுவனமாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல்தலைமை நிர்வாகத்தில் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கிராம பொருளாதார முன்னேற்றத்தின் தேவையை உணர்ந்த இந்நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டம், ஏனாதி எனும் கிராமத்தில் நிறுவனத்தின் தலைமையகத்தை அமைத்துள்ளது.
மாவேள் பெயர்க்காரணம்
தொகுசெயற்கை உரங்களைப் பயன்படுத்தும் நவீன வேளாண்மை முறைக்கு எதிராக "மாற்று வேளாண்மை" எனும் திட்டத்தை சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் முன்மொழிந்து அதற்கான விழிப்புணர்வையும், களப்பணியையும் மேற்கொண்டது. மாற்று வேளாண்மையில் விளையக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயரும் திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு அமைக்க விரும்பி " (மா)ற்று (வே)ளாண்மை" என்ற சொல்லிலிருந்து 'மாவே" என்ற எழுத்துக்கள் இயக்கத்தினரால் முன்வைக்கப்பட்டது. மாவே என்ற சொல் முழுமையடையாத நிலையில் "வேள்" என்பது அரசை குறிப்பது என்றும் "மாவேள்" என்பது பேரரசைக் குறிப்பதாகவும் இலக்கியங்கள் வாயிலாக அறியப்பட்டது. மக்களுக்கு கேடற்ற வேளாண் நிலங்களையும், பாதுகாப்பான உணவையும், நோயற்ற வாழ்வையும் வழங்கவேண்டியது அரசின் கடமை. அந்த அரசக்கடமையை தனது கொள்கையாகக் கொண்டதால் இந்நிறுவனத்திற்கு மாவேள் என்ற சொல்லே மிகவும் பொருத்தமானதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சொல் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

" கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன்! மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், படுநர்,பரிசிலர், ஆங்கவர்,
தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதென" எனும் பாடலேயாகும்.
உற்பத்தி மற்றும் சந்தை
தொகுதமிழகமெங்கும் இயற்கை வேளாண்மை கூட்டுறவு வங்கி எனும் உழவர் சங்க உறுப்பினர்களின் மூலப்பொருட்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட உணவு மற்றும் அழகுசாதனப்பொருட்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தமிழக மக்களுக்கு முதலில் சென்றடையவேண்டும் என்ற அடிப்படைக்கொள்கை இந்நிறுவனத்திற்கு உள்ளதால் உள்ளூர் சந்தையை மட்டும் குறிக்கோளாக செய்துவருகிறது. மாவட்டந்தோறும் விநியோகதாரர்களை நியமனம் செய்து சந்தைப்படுத்தி வருகிறது. சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்பதால் நிரந்தரமாக தமிழகமெங்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துள்ளது.
மகளிர் சுயதொழில் வாய்ப்பு
தொகுமாவேள் மூலம் விற்பனையாகும் தின்பண்டங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. மூலப்பொருட்களை மட்டுமே மாவேள் நிறுவனம் வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை ஒருங்கிணைத்து தமிழகமெங்கும் வேலைவாய்ப்பையும், சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்கிவருகிறது.