பயனர்:Magudesbama/மணல்தொட்டி

வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிபீடியா பயிற்சி 2015

# மலை கிராம பள்ளியில் விழிப்புணர்வு தொகு

எங்கள் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாளக்கரை, அந்தியூர் ஒன்றியம், ஈரோடு மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த கிழக்கு மலைத்தொடர்ச்சி மலைச்சாரலில் சுற்றிலும் அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைக் கிராமத்தில் அமைந்துள்ளது. பள்ளியின் சூழல் மாணவர்களிடம் அன்றாடம் தொடர்ச்சியான கற்றலை ஏற்படுத்தினாலும், மாணவரின் குடும்ப பொருளாதாரம் அவர்களின் கற்றலுக்கு தடையாக உள்ளது. பருவமழை விவசாயத்தை நம்பி வாழும் அவர்கள் ஆறு மாத விவசாய அறுவடை முடிந்து பின் கரும்புத்தோட்டம், செங்கள் சூலைகளில் கூலி வேலைக்காக வெளியூர் செல்லும் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் அழைத்துச்செல்கின்றனர். மீண்டும் ஆறுமாதம் தங்கள் கிராமத்திற்கு வருகின்றனர். எனவே பெற்றோரிடம் அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றியும் அரசின் நலத் திட்டங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் வேலைக்குச் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கற்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Magudesbama/மணல்தொட்டி&oldid=1945857" இலிருந்து மீள்விக்கப்பட்டது