பயனர்:Mahalakshmi thayar/மணல்தொட்டி
உ ஸ்ரீ ராமஜெயம் ஓம் நமோ நாராயணாய நமஹ
அருள்மிகு மகாலெக்ஷ்மி தாயார் திருக்கோவில் 4 ரோடு சிக்னல்,மன்னார்புரம்,திருச்சி-20
தாயார் மகாலெக்ஷ்மிக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் அபூர்வம். திருச்சி மாநகரில் மன்னார்புரத்தில்தான் மகாலெக்ஷ்மி தாயாருக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இனி இத்திருக்கோவிலின் ஸ்தல வரலாற்றை காண்போம்.
“ஸ்தல வரலாறு”
அழகிய சிறிய ஆலயம். இங்கு ஆலயம் அமைவதர்க்கு முன் 6 1/2 அடி உயரத்தில் பெரிய புற்று இருந்தது. பக்தர்கள் சிலர் பால் ஊற்றியும், விளக்கேற்றியும் வழிப்பட்டனர். அந்தமானில் அரசு வேலை பார்த்த ஒருவரது (அருணாசலம் என்பவர் முன்னதாகவே பெருமாளின் பக்தர் ஆவார்) கனவில் மகாலெக்ஷ்மி தோன்றி தான் குடியிருக்கும் புற்றில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என பணிக்க பின்னர் அவர் தனது வேலையை விட்டுவிட்டு, அவர் கனவில் தோன்றிய இடம் திருச்சியில் உள்ள மன்னார்புரம் என தெரியவந்தது பின்னர் பக்தர்கள் உதவியோடு ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இங்கு வீற்றிக்கும் மகாலெக்ஷ்மி தாயார் வேரு எங்கும் காணமுடியாத சிறப்பு என்னவென்றால் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம் ஆகும். கோவிலில் உள்ளே நுழைந்ததும் விசாலமான மகா மண்டபம். அடுத்து துவார பாலகிகள் இருபுறமும் கொலுவிருக்க கருவறையில் மகாலெக்ஷ்மி தாயார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தாயாருக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்கள் தாமரை மலர்களை சுமந்திருக்க, கீழிரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் தாயார் அருள்பாலிக்கிறாள். இங்கு உற்சவர்களாக மகாலெக்ஷ்மி தாயார் ,வரதராஜப்பெருமாள் மற்றும் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் என திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு செல்வத்தையும், லட்சுமி கலாட்ஷத்தையும் வழங்கி அருள்புரிகிறார்கள்.
“சுயம்பு மகாலெக்ஷ்மி தாயாரின் சிறப்புகள்”
தாயார் சுயம்புவாக புற்றில் தோன்றியவள் என்பதால் இன்று சூட இந்த ஆலயத்தில் தளவாட அறைக்கு அருகே ஒரு பெரிய நாகம் வந்து செல்கின்றது. அதுவே இந்த ஆலயத்தின் பாதுகாவலன் என பக்தர்கள் கூறுகின்றனர். பக்தர்கள் சிலர் பார்த்து பரவசப்பட்டுள்ளன. இங்கு மற்றோன்று அதிசயம் இன்றும் நடப்பதை கண் கூடாக காணலாம் என்னவென்றால் நாம் இங்கு ஒரு பிரச்சனையை தீர்த்து தரும்படி தாயாரிடம் நோக்கி மனமுருக வேண்டும் போது, உடனே தாயாரிடமிருந்து பதில் கிடைத்துவிடும் என்று கூறுகிறார் ஆலய அர்ச்சகர்.
நாம் வேண்டும் தருணத்தில் வடக்கு திசையிலிருந்து பல்லியின் ஓசை வந்தால் நினைத்த காரியம் நடந்துவிடும். மேற்கு திசையிலிருந்து ஒலிவந்தால் எதிர் மறையாக நடந்தேறுவது உண்மையாம்.
“பிராத்தனைகள்”
இத்திருக்கோவில் ஒரு பரிகாரஸ்தலமாக விளங்குகிறது, விரைவில் தருமணமாக (விவாஹம்) வேண்டும் என எண்ணுகிற கன்னிப்பெண்களும் , குழந்தை பேறு வேண்டும் மங்கையரும் தாயாரின் சன்னிதானத்தை 108 முறை வலம் வந்து சுற்ற வேண்டும் . இப்படி 9 வாரங்கள் சுற்ற அவர்கள் பிராத்தனை நிச்சயம் பலிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
பின் தன் பிரார்தனை நிறைவேறியப் பின்னர் புடவை, வளையல்கள், தாலிகயிறு, மாலை வைத்து தாயாருக்கு தன் வேண்டுதளை நிறைவேற்றுகின்றனர். திருச்செல்வத்துக்கு அதிபதியானவள் என்பதால் வியாபாரம்,தொழில் அபிவிருத்திக்காகவும் சுதர்சன ஹோமம், மகாலெக்ஷ்மி ஹோமம், ஆயூள் ஹோமம், தன்வந்திரி ஹோமம்,அஸ்டலெக்ஷ்மி ஹோமம் போன்ற ஹோமங்களை நடத்தி செல்வத்தை பெருக்கிக்கொள்கின்றன.
பெண்கள் லெக்ஷ்மி கலாட்க்ஷம் பெருகவும், திருமாங்கல்ய பாக்கியம் பெருகவும்,வலக்குகளில் வெற்றி பெறவும், பிள்ளைகள் கல்வி மற்றும் வேளைவாய்ப்பு கிடைக்கவும் தாயாரிடம் மணமுருக வேண்டிச்செல்கின்றன.
“திருவிழாக்கள்”
வருஷாபிஷேகம் திருவிழா:
ஆனி மாதம் திருவோணம் நட்சத்திரம்யன்று தாயார் பிரதிஸ்டை செய்ததினம் என்பதால் வருடா வருடம் வருஷாபிஷேகம் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெறுகிறது இன்றைய தினத்தில்தான் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலிலும் திருவிழா என்பது சிறப்பாகும். அன்றைய தினத்தில் நமது கோவிலில் மகாலெக்ஷ்மி தாயாருக்கு காலை கணபதி ஹோமம்,கும்ப பூஜை, சுதர்சன ஹோமம், மகாலெக்ஷ்மி ஹோமம்,நாராயண ஹோமம்,அஸ்டலெக்ஷ்மி ஹோமம் ,ஆயூள் ஹோமம், தன்வந்திரி ஹோமம்,அஸ்டலெக்ஷ்மி ஹோமம்,நவகிரக ஹோமம்,பூர்ணாவதி போன்ற ஹோமங்கள் நடைபெற்ற பின்னர் தாயாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்று தீபாராதனை நடைபெறும், மாலை 6.00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.
திருக்கல்யாண வைபவம்:
புரட்டாசி 3வது சனிக்கிழமை காலை மகாலெக்ஷ்மி தாயாருக்கு திருமஞ்சன நடைப்பெற்ற பின்னர் “மகாலெட்சுமி தாயார் சமேத வரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சியாக நடைபெறும், மாலை சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் “மகாலெட்சுமி தாயார் சமேத வரதராஜப்பெருமாளுக்கு திருவீதியூலா வானவேடிக்கையுடன் நடைபெறும்.
வளையல் அலங்காரம்:
ஆடி மாதம் தாயாருக்கு விஷேசம் என்பதால்,ஆடி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வளையல்களால் அலங்காரம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.
ஆடிப்பூரம் திருவிழா:
ஆடிப்பூரத்தில்தான் ஆண்டாள் அவதரித்தநாள் ஆகும் என்பதால் அன்றைய தினத்தில் மகாலெக்ஷ்மி தாயாருக்கு மகா திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.
வரலெக்ஷ்மி விரதப்பூஜை:
மகாலெக்ஷ்மிக்கு இங்குதான் திருக்கோவில் அமைந்துள்ளது என்பதால், இங்கு வரலெக்ஷ்மி விரதப்பூஜை சிறப்பாக கொண்டாடப்படிகிறது. தாயாருக்கு காலை திருமஞ்சனம் நடைபெற்று, கலச ஆவாகனம் கும்பப்பூஜை நடைபெறும் மற்றும் தாயாரின் பூஜையில் வைத்த மஞ்சள் கயிறு கட்டுதல் மிகவும் விஷேசம் ஆகும் மாலை சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். பக்தர்களுக்கு தாலிகயிறு, வளையல் பிரசாதமாக வழங்கப்படும்.
மகாலெக்ஷ்மி தாயாருக்கு பெளர்ணமி, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் லெட்க்ஷ்மி கலாட்ஷம் உண்டாகவும்,திருமாங்கல்ய பாக்கியம் பெருகவும், செல்வம் பெருகவும் இந்நாளில் அதிகயளவில் பக்தர்கள் கல்கண்டு,குங்குமம் வைத்து அர்ச்சனை செய்கின்றன.
திருவோணமும்,சனிக்கிழமையும்:
திருவோணம் நச்சத்திரம் பெருமாள் அவதரித்த நாளாகும் அன்றை நன்நாளில் மகா அபிஷேகம் நடைபெறும்,சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சாற்றி வழிபடுகின்றன.
பூஜை நேரம்
இத்திருத்தலத்தின் தல விருட்சம் வில்வம் ஆகும். காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் ஆகும். வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00—9.00 மணி வரை ஆகும். விஷேச காலங்களில் நேரம் மாறுப்படும
இடம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் மன்னார்புரத்தில் உள்ளது இந்த அருள்மிகு மகாலெக்ஷ்மி தாயார் திருக்கோவில்.
கோவில் நிர்வாகி: பாஸ்கர்
தொர்புக்கு: 9865059972
.