பயனர்:Mbsenthil73/மணல்தொட்டி
பரளிக்காடு. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைவாழ் கிராமம் பரளிக்காடு. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நூற்றுக்கணக்கான மலை கிராமங்களில் இதுவும் ஒன்று. கோவையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. பரளிக்காட்டுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை தான் பேருந்து வசதி. கோவையில் இருந்து இந்த கிராமத்துக்கு செல்லும் மலைப்பாதை அவ்வளவு அற்புதமானது. இயற்கை ஆர்வலர்களுக்கு ஓர் சிறந்த அனுபவத்தை தரும் பாதை. அதிகமாக போக்குவரத்து இல்லாதது. பரளிக்காட்டை இயற்கை சுற்றுலா தலமாக பராமரித்து வருகிறது வனத்துறை. பில்லூர் டேம்க்கு செல்லும் நீர் பாதையில் பரளிக்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் படகுசவாரி, மலையேற்றம், அத்திக்கடவு அருவி குளியல் போன்றவற்றை வழங்குகிறது கோவை வனத்துறை. பரிசல் சவாரி: வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே பரிசல் சவாரி. அதுவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு. ஒரு நாளைக்கு 80 பேருக்கு ஏற்பாடு செய்கிறார்கள். காலையில் 40 பேர், மதியம் 40 பேர். வாரத்தின் மற்ற நாட்களில் 40 பேராக சென்றால் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். பரிசலுக்கு 4 பேர் வீதம் 10 பரிசல்களில் 40 பேரை படகில் ஏற்றி சுற்றிக்காட்டுகிறார்கள். படகில் ஏறும் ஒவ்வொருவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்குகிறார்கள். படகை செலுத்துபவர்கள் மலையிலேயே வாழும் மலைவாழ் ஆண்கள். அவ்வளவு அற்புதமாக பாதுகாப்பாக படகை செலுத்துகிறார்கள். 1 மணி நேரம் படகை ஆற்றில் செலுத்தும்போது வாய்ப்பிருந்தால் யானை, காட்டெருமை, மான்கள் கூட்டத்தை காணலாம். பில்லூர் டேமின் மதகுகளை காணலாம். படகை செலுத்தும் படகோட்டிகள் ஆற்றின் மற்றொரு கரையில் படகை நிறுத்துகிறார்கள். காட்டில் சிறிது நேரம் உலாவிவிட்டு வரலாம். நீண்ட தூரம் செல்ல அனுமதியில்லை. காரணம் புலி, காட்டெறும்மை, சிறுத்தைகள், யானைகள் கூட்டம் நடமாட்டமுண்டு. காட்டுக்குள் விதவிதமான நாம் நகரத்தில், கிராமங்களில் பார்க்காத, பார்க்க முடியாத பல பறவைகளை காண முடிகிறது. நீரோடு விளையாடலாம். படகு சவாரி முடிந்ததும் குறைந்த நேரம் குளிக்கவும் அனுமதிக்கிறார்கள். படகு சவாரி முடிந்ததும் மதிய உணவு. அங்குள்ள மலைவாழ் பெண்கள் சுய உதவிக்குழுவை வைத்து ஏற்பாடு செய்து தருகிறார்கள். வேண்டுமளவுக்கு சாப்பிடலாம். சக்கரை பொங்கல், தக்காளி சாதம், சப்பாத்தி, ராகிகளி, பச்சடி, மலை வாழைப்பழம் போன்றவை வழங்குகிறார்கள். அதன்பின் அப்படியே மலையேற்றத்துக்கு அழைத்து செல்கிறார்கள். உடம்பில் தெம்பும், டிரக்கிங் அனுபவத்துக்காக செல்லலாம். மலையேற்றம் : பரளிக்காட்டு பகுதியில் இருந்து மலையேற்றம் மலைவாழ் கிராம இளைஞர்கள் துணையுடன் வனத்துறை ஊழியர்கள் அழைத்து செல்கிறார்கள். விருப்பம் இருந்தால் செல்லலாம், இல்லையேல் விட்டுவிடலாம். மலையேறும் போது திடீரென யானை வந்தால் தப்பிப்பது எப்படியென்பதை சொல்லியபடி நடக்கிறார்கள். காட்டில் பாதுகாப்பான
பயண வழியில் நடத்தி செல்கிறார்கள். நடந்து செல்லும் போது யானை, மான், காட்டெரும்மை கால் தடங்களை காபார்க்கலாம்.
இந்த மலையேற்றத்தின் போது அடர்ந்து பசுமையான காட்டை ரசித்து பார்க்கலாம். இரவு தங்க வசதிகள் கிடையாது. இரண்டே இரண்டு குடில் உள்ளது. முன்கூட்டியே அவர்களிடம் சொல்லிவிட்டால் அங்கு தங்க ஏற்பாடு செய்து தருகிறார்கள். அதில் 5 பேர் தங்கலாம். உணவுக்கும் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். இல்லையேல் பட்டினி தான். பாதுகாப்பு கேள்விகுறிதான். அதனால் பெரும்பாலும் யாரும் தங்குவதில்லையாம்.
அத்திக்கடவு அருவிக்குளியல்:
அங்கிருந்து அத்திக்கடவு ஆற்றுக்கு செல்ல 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இது பவானியாற்றுக்கு நீர் செல்லும் வழிப்பாதை. இந்த ஆற்றில் குளிக்க குளிக்க இதமாக உள்ளது. பாதுகாப்பாக குளிக்க வேண்டும் இல்லையேல் நீர் அடித்துக்கொண்டு போய்விடும். மாலை 5 மணிக்கு மேல்எக்காரணத்தை கொண்டும் ஆற்றில் இறங்கவோ, அந்தப்பக்கம் இருக்கவோ வனத்துறையினர் விடுவதில்லை. காரணம், யானை உட்பட விலங்குகள் நீர் அருந்த வரும் நேரமாம். அவைகளுக்கு எந்த காரணத்தை கொண்டும் தொந்தரவு தரக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்.
அதேபோல் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பேப்பர்களை கீழே கூட போட வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. பலயிடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள். பரளிக்காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் அனுமதியுடன் தான் சுற்றுலா செல்ல முடியும். முன்கூட்டியே பெயர், எத்தனை நபர்கள் என்பதை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பரளிக்காடு வரை பயணிகள் தான் வாகன ஏற்பாடு, பரளிக்காடு படகு சவாரி செல்லும் இடம்,
மலையேற்றம் செல்லும் இடம், அத்திக்கடவு அருவி போன்ற இடங்களுக்கு நம் வகனங்களில் தான் செல்ல முடியும்.பெரியவர்களுக்கு 300 ரூபாய், 15 வயது சிறியவர்களுக்க 200 ரூபாய், 10 வயதுக்குட்பட்ட குழைந்தைகளுக்கு இலவசம். இதில் படகு சவாரி, மலையேற்றம், உணவு போன்றவை அடங்கும்.
வழித்தடம் :
கோவையில் இருந்து பரளிக்காடு செல்ல அதிக பேருந்து வசதிகள் கிடையாது. அதேபோல் அருவிக்குளியல், படகுசவாரி போன்ற இடங்களுக்கு செல்ல வனத்துறை வாகன வசதிகள் செய்வதில்லை. பேருந்து, ஆட்டோ போன்ற எந்த வசதியும் அங்கு கிடையாது. அதனால் சுற்றுலாப்பயணிகள் கார்களில் சென்றால் வசதி. இரண்டு வனத்துறை செக்போஸ்ட்டுகள் உள்ளன. வழி காட்டுகிறார்கள். இரவில் மலையில் பயணிக்க அனுமதியில்லை. பரளிக்காட்டில் இருந்து கேரளா எல்லை தொடங்குகிறது.
கோவையில் இருந்து காலை 6:30க்கு ஒரு பேருந்து செல்கிறது. அதேபோல் காரமடை, வெள்ளியாங்காடு சென்றால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பேருந்து என இரண்டு பேருந்துகள் செல்கின்றன.
சுற்றுலா தொடர்புக்கு.
மாவட்ட வன அலுவலர்,
மேட்டுப்பாளையம் சாலை.
கோயம்பத்தூர்.
தொலைபேசி : 0422 – 2456911.