பயனர்:Moorthy/சைவமும் தமிழும்

மகாதேவா சுவாமிகள்- காவலூர் கரம்பொன்  	 
	இறைவனோடு இணைக்கும் சைவமும், இன்பத் தமிழும் தமிழ் மக்களாகிய எமது இரு கண்களாகும். இந்தியாவிலே இந்து நதிப் பள்ளத்தாக்கில் பிறந்த இவையிரண்டும் இன்று வரையல்ல இனிவரும் காலங்களிலும் இறவா வரம்பெற்று இளமையோடு இலங்க விருக்கும் தொன்மை வாய்ந்த இணையிலாப் பொக்கி~ங்களாகும். தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக, நல்லறத்தோடு கூடிய இல்லற வாழ்வாக, பண்பாடாக, கலாச்சாரமாகப் பின்னிப் பிணைந்து விட்;ட சைவத்தை அழித்து தம்மை வளர்த்துக் கொள்ள முயன்ற சமணம், வை~;ணவம், ஜெயினிஸம், பௌத்தம், அந்நியநாட்டு கத்தோலிக்கம், கிறீஸ் த்தவம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக்கள், செல்வாக்குகள் அனைத்தும் அர்த்த மற்றுப் போயின. அவற்றினை எதிர்த்து சைவத்தின் தனித்துவத்தினையும், மகிமையினையும் புலப்படுத்தி நிலைநாட்ட அவதார புரு~ர்களும், ஆன்மீகவாதிகளும் அவ்வப்போது அவதரித்து அரும்பணி புரிந்தனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர்,மணிவாசகர் உட்பட மொத்தம் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரிசையில் தமிழகத்தைச் சார்ந்த ஊ.வே.சாமிநாத ஐயர், யாழ் நல்லை நகர் தந்த நாவலர் பெருமான், கரம்பொன் ஊர் ஈன்று பெரிதுவக்கும் சுவாமி மகாதேவா, முத்துக்குமாரு உபாத்தியாயர் ஆகியோர் மதம் காத்த மகான்க ளாகப் போற்றப்பட வேண்டியோராவர். 	 


போத்துக்கேயர் 1505ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து படிப்படியாக கரையோரப் பகுதிகளையும் பின்னர் கொழும்பையும் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 1623ம் ஆண்டு யாழ்ப்பாணத் திலும், திருகோணமலையிலும் இருந்த பாரிய சைவக் கோயில்களை இடித்து தரைமட்டம் ஆக்கி கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார்கள். 1658ம் ஆண்டு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய டச்சுக்காரர் தமது கிறீஸ்த்தவ மதத்தினைப் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மதமாற்றத்துக்கு பாடசாலைகளை முக்கியகளமாக இவர்கள் பயன்படுத்தினார்கள். பிரித்தானியர்கள் 1795ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இவர்களும் டச்சுக்காரர்களைப் போன்று மதமாற்றத்துக்கு பாட சாலைகளை களமாகப் பயன்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பிலும் ஆங்கிலக் கல்லூரிகளை நிறுவி ஆங்கில மொழியினையும் கிறீஸ்த்தவ மதத்தினையும் போதித்தார்கள். ஆங்கில கிறீஸ்த்தவ மி~னரிகளைச் சேர்ந்த பாதிரிமார்கள் இலங்கைக்குப் படையெடுத்து சைவர்களை கிறீஸ்த்தவர்களாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்கில அறிவற்ற தமிழ் மக்கள் மத்தியில் மதப் பிரச்சாரங்களைச் செய்து அவர்களை மதமாற்றம் செய்வதற்காக தாங்களே தமிழ் மொழியினைக் கற்றார்கள்.


சைவசமயத்துக்கு ஒரு சோதனைக் காலமாக இருந்த இக்கட்டான காலகட்டத்திலேயே வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூரிலே சைவாசாரக் குடும்பத் தி;னரான கந்தர், சிவகாமி தம்பதியினரின் தவக்குமாரனாக 1822ம்ஆண்டு அவதரித்தார் அறநெறிக் காவலர் ஆறுமுக நாவலர் அவர்கள். இளவயதில் சைவம், தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றினை இவரது தந்தையார் போதித்து சமயாசாரப் புதல்வராக வளர்த்தெடுத்தார். பின்னர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மி~ன் பாடசாலையில் இணைந்து கல்வி கற்ற நாவலர் ஆங்கிலத்திலும் ஏனைய பாடங்களிலும் திறமை சாலியாகத் திகழ்ந்தார். பேச் சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த இவரது திறமையினை ஆங்கிலேயர்களே பாராட்டினர். அதுமாத்திர மன்றி பீற்றர் பேர்சிவல் என்ற பாதிரியார் கிறீஸ்த்து மதத்தினைப் பரப்புவதற்கு வசதியாக தனக்கு தமிழ்மொழியினைப் போதிக்குமாறு நாவலரைக் கேட்டுக் கொண்டார். அத்துடன் ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளையும் தமிழில் மொழிபெயர்ப்பித்தனர். ஆனால் பின்னர் தமது சொந்த மதமான சைவ சமயத்தை தமிழ் மக்கள் புறக்க ணித்து வருவதைக் கண்டு வேதனையுற்ற ஆறுமுகநாவலர் சைவத்தினைக் காக்கும் பணியில் ஈடுபட்டார். ஏடுகளில் எழுதப்பட்டு அழிந்து போகும் நிலையிலிருந்த சைவசமய நூல்களைத் தேடியெடுத்து அவற்றினை நூலுருவில் வெளியிட்டார். பால பாடம், சைவ வினாவிடை, இலக்கணச் சுருக்கம் போன்ற பல்வேறு நூல்களையும் மிக எளிய நடையில் எழுதி வெளியி ட்டார். 1848ம் ஆண்டு வண்ணார்பண்ணையில் சைவப் பாடாலை ஒன்றினையும், இந்தியாவில் சிதம்பரத்தில் ஒரு சைவ மடத்தினையும் அமை த்து இருநாடுகளிலும் சைவத்தினையும் தமிழையும் வளர்த்து வந்தார். இதனால் இவரை இந்திய தமிழ் அறிஞர்களும் போற்றிக் கௌர வித்தனர். சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் அயராது ஈடுபட்டு வந்த நாவலர் 1871ம் ஆண்டு சைவ பரிபாலன சபையினையும் ஏற்படுத்தினார். அத்துடன் தனக்குப் பின்னரும் தன்பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஒரு குரு பரம் பரையையே தோற்றுவித்தார். இதன் மூலம் இவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு காலம் சைவத்தையும் தமிழையும் பொறுத்தவரை ஒரு பொற் காலமாகும். இவரிடம் கல்வி பயின்ற மாணாக்கர்களுள் கரம்பொன் மேற்கினைச் சேர்ந்த முத்துக்குமாரசாமியும் ஒருவராவார்.

காவலூர் கரம்பொன் கிராமத்தின் குருபரம்பரை

காவலூர் பட்டினத்தை அடுத்துள்ள கிராமம் கரம்பொன் கிராமமாகும். மூன்று மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுமாக ஆறு சதுர மைல் பரப் பளவினையும் ஏறக்குறைய பதினொரு மைல் சுற்றளவினையும் கொண்ட சைவ சமயத்தினர் வாழ்ந்து வந்த அமைதியான கிராமம். அது கரம்பொன் கிழக்கு, கரம்பொன் மேற்கு, கரம்பொன் தெற்கு என முப்பிரிவாக பகுக்கப்பட்டிருந்தது. கரம்பனின் நுழை வாயிலில் கணபதீஸ் வரம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலும், கரம்பொன் கிழக்கிலும், மேற்கிலும் இரு முருகமூர்த்தி கோவில்களும், கரம்பொன் மேற்கின் வடமேற்குத் திசையில் பிள்ளையார் கோவிலும், மேற்கெல்லையில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி அம்மன் கோவிலும், கரம்பொன் மேற்குக் கும் தெற்குக்கும் இடையேயுள்ள தெங்கங் குளத்தினருகே சிறிய ஞானவைரவர் கோவிலும், கரம்பொன் கிழக்கில் காளி கோவிலும், சுருவில் வீதியில் வைரவ கோவிலும் உள்ளன. ஆரம்ப காலத்திலே தென்னிந்திய வேளாள குலத்தினை சேர்ந்த ஒன்பது பேர் அங்கிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறினார்கள். இவர்களுள் ஒருவரான இருமரபுந்துய்ய செய்யூர் வாசியான தனிநாயக முதலியின் வம்சத்தினரே முதன் முதலாக வந்து கரம்பொனில் குடியேறினார்கள் என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது பரம்பரையினரே கரம்பனூர் வாசிகளாவர். இவர்களுள் பெரும்பாலானோர் நெடிய தோற்ற மும் வெள்ளை நிறமேனியும் உடையோராவர். இதற்கு உதாரண புரு~ராகத் திகழ்ந்தவர் சுவாமி மகாதேவா ஆவார். செக்கச் செவேலென்ற திரு மேனியும் ஆறடி உயரமும் கொண்டு ஆஜானு பானுவாகத் திகழ்ந்தவர் இவர். முழங்கால் வரை நான்கு முழ காவி வஸ்த்திரம் அணிந்து காவிநிறத் துண்டினால் மேலுடம்பினை போர்த்தி மிக எளிமையாகக் காட்சி அளித்தவர்.


போர்த்துக்கேயர் காலத்திலும், டச்சுக்காரர் காலத்திலும் பலவந்தமான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மசிந்து கொடாது சைவ சமயத்தினையே தொடர் ந்து அனு~;டித்து வந்த பெருமைக்குரியவர்கள் கரம்பனூர் வாசிகள். காவலூர் பட்டினவாசிகளும், கரம்பொன் கிழக்கினைச் சேர்ந்த சிலருமே மேலை நாட்டினரின் மிரட்டல்களினாலும், சலுகைகளுக்காகவும் கத்தோலிக்கர்களாகவும், கிறீஸ்த்தவர்களாகவும் மாறினார்கள். சைவசமயப் பாடாலை ஒன்று கூட இல்லாத அக்கால கட்டத்தில் கரம்பொன் மேற்கில் ஆறுமுக நாவலரின் மாணாக்கரான முத்துக்குமாரு என்ற வயோதிபர் சிறுவர்களை அழைத்து தனது வீட்டுத் திண்ணையிலே வைத்து அவர்களுக்கு சைவத் திருமுறைகள், தமிழ் இலக்கண இலக்கியங்கள் ஆகியவற்றினை வாய்வழியாகப் போதித்து வந்தார். இந்த உபாத்தியாயர் இருந்த இடம் உபாத்திபுலம் என்றழைக் கப்பட்டு பின்னர் பாத்திபுலமாக மருவியது. பின்னர் இவ்விடம் சாத்திரியார் முத்து க்குமாருவுக்கு சொந்தமாக இருந்தது.


கரம்பன் கிழக்குவாசிகளான நாராயணர் இராமநாதன், கதிரவேற்பிள்ளையின் மகள் அன்னபூரணி தம்பதிகளின் தலைமகனாய் 1874ம்ஆண்டு ஆவணி மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் அரும்பெருஞ் செல்வர் வைத்திலிங்கம்(இவரே பிற்காலத்தில் சுவாமி மகாதேவா என்றழைக்கப்பட்டார்). தம்பிப்பிள்ளை, நல்லதம்பி, பொன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை ஆகியோர் இவரது சகோதர ககோதரிகளாவர். கரம்பொன் கிழக்கில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியினைப் பயின்ற இவர் பின்னர் முத்துக்குமாரு உபாத்தி யாயரிடம் திண்ணைப் பள்ளியில் அமர்ந்து கல்வி கற்றார். அத்திண்ணைப் பள்ளிக்கு விஜயம் செய்து சொற் பொழிவுகள், விவாதங்கள், கதாப்பிரசங் கங்கள் செய்யும் சைவப் பெரியார்களின் பேருரைகளை மிக்க ஆவலுடன் வைத்திலிங்கம் செவிமடுத்து வந்தார். அத்துடன் அவ்விடயங்கள் பற்றி பிறரு டன் கலந்து ஆலோசித்தும் விமர்சித்தும் வந்தார். எப்பெரியார்களைக் கண்டாலும் அவர்களிடம் அறிவு சார்ந்த கேள்விகளைக் கேட்டு தனது சந்தேக ங்களை நிவர்த்தி செய்வது இவரது வழக்கமாகியது.


பின்னர் ஆங்கிலக் கல்வி கற்பதற்காக வட்டுக்கோட்டையிலிருந்த யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்றார். சைவசமயத்தினரை கிறீஸ்த்தவர்களாக மாற்று வதையே குறிக்கோளாக் கொண்டிருந்த அக்கல்லூhயில் கிறீஸ்த்தவராக மாறவிரும்பாத சுவாமிகள் கல்லூரியை விட்டு விலகினார். மனித சமுதாய மெல்லாம் ஒரே குலம்--உலகமெலாம் ஒரே வீடு--அனைத்திற்கும் ஒரே கடவுள்--அன்பும் அருட்பணியுமே அவரை அடையும் வழி என்பது அவரது கொள் கையாயிற்று. பிறர் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு அதைப் பற்றிச் சிந்திப்பாரே தவிர தான் அதிகம் பேசமாட்டார். வீண் பொழுது போக்காது எப்போ தும் சுறுசுறுப்பாக தொண்டுகள் செய்து கொண்டே இருப்பார். அடக்கம், அன்பு, மோனம், தியானம், பண்பு ஆகிய இவரது அருங்குணங்கள் பிறரைப் பெரிதும் கவர்ந்தன.


இவரது காலத்தில் ஊறாத்துறை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்தியாவிலிருந்தும் பிறநாடு களில் இருந்தும் பாரிய பாய்மர வத்தைகள் வருவதும் போவதுமாக இருந்தன. ஊறாத்துறை துறைமுகத்தினை அண்டியிருந்த ஊருண்டி என்ற இடத்தில் சங்குமாலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீண்ட கொம்புகளை உடைய வடக்கன் மாடு என்றழைக்கப்பட்ட வெள்ளை நிற எருதுகளை பராமரிக்கும் மாட்டுக்காலையும், இந்திய வணிகர்கள் தங்கிச்செல்ல ஒரு தங்கு மடமும் அமைக்கப் பட்டிருந்தது. கடலில் மூழ்கி எடுக்கப்படும் சங்குகள் சங்குமாலில் குவித்து வைக்கப்பட்டு இந்திய, பாகிஸ்தானிய வணிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அக்காலத்தில் சங்கிலிருந்து காப்;பு, தோடுகள் போன்ற அணி கலன்கள் செய்யப்பட்டன. சங்குக் காப்புகள் தான் ஆரம்ப காலத்து காப்புகளாக இருந்ததினால் அவற்றுக்கு மிக்க மௌசு இருந்து வந்தது. சிதம்பரநாதன் செட்டியர் என்பவர் தங்கு மடத்தினைப் பராமரித்து வந்தார். இந்தியாவிலிருந்து வரும் வணிகர்களும், பிரயாணிகளும் இந்த மடத்திலே தங்கிச்செல்லவும், உணவு அருந்தவும் செட்டியார் ஏற் பாடு செய்திருந்தார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த வரும் மட்டக்களப்பில் பிரபல வர்த்தகராக இருந்தவருமான திரு.கே.வைத்திலிங்கம் தனது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் காரணமாக அடிக்கடி ஊறாத்துறை துறைமுகத்துக்கு வந்துபோவார். இதனால் இவருக்கும் சிதம்பரநாதன் செட்டியாருக்கும் மிகுந்த நட்புறவு ஏற்பட்டது. இவருக்கு நான்கு கப்பல்கள் சொந்தமாக இருந்தனவென்று கூறப்படுகிறது.


இந்தியாவிலிருந்து வரும் அறிஞர்கள், சைவசமயப் பிரமுகர்கள் ஆகியோரும் இம்மடத்தில் தங்கிச் வெல்வது வழக்கம். அதனால் மலரினை நாடிச் செல் லும் வண்டினைப் போன்று ஆன்மீகத் தாகம் கொண்ட தொண்டர் வைத்திலிங்கமும் (மகாதேவா சுவாமி) அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். இதனால் அவர்மீது செட்டியாருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. ஒருமுறை வைத்திலிங்கம் தனக்கு நம்பிக்கையான கணக்காளர் ஒருவர் தேவையெனக் கூறி னார். உடனே செட்டியார் வைத்திலிங்கத்தை அவருக்கு அறிமுகம் செய்துவைத்து சிபார்சு பண்ணினார் (இருவரினது பெயர்களும் ஒன்றே). அவரிடத்தில் வைத்திலிங்கம் மூன்றாண்டு காலம் கணக்காளராகப் பணிபுரிந்தார். அவரது அடக்கமான பண்பும் செயற்திறனும் முதலாளி வைத்திலிங்கத்தை வெகு வாகக் கவர்ந்தன. வர்த்தகத்தோடு சமூகப்பணி, சமுதாயத் தொண்டுகளிலும் முதலாளி வைத்திலிங்கம் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கீரிமலையில் சைவ அடியாhர்கள் தங்குவதற்கான மடமொன்றினை (வைத்திலிங்கம் மடம்) அமைக்க முதலாளி வைத்திலிங்கம் முன்வந்தார். அதற்கான பொறுப்பினை தனது கணக்காளரான வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தார். அப்பணியினைப் பொறுப்பேற்று செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்து செல்லும் சைவப் பெரியார்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோரைச் சந்தித்து தனது குறிக்கோளான ஆன்மீகத்துறை சம்பந்தமான ஞான அறிவினைப் பெருக்கிக் கொள்ளும் பெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அத்துடன் கந்தர்மடத்தினைச் சேர்ந்த கனகரெத்தின சுவாமிகளின் தொடர்பும் ஏற்பட்டது. இவரது ஆற்றலையும், ஞானத்தையும் நன்கு அறிந்து கொண்ட கனகரெத்தினம் சுவாமிகளே இவருக்கு மகாதேவா என்ற பெயரினைச் சூட்டி சந்நியாசமும் வழங்கினார். அன்று முதல் மகாதேவா சுவாமிகள் கனகரெத்தின சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு சமயத் தொண்டுகள் புரிந்து வந்தார்.


மகாதேவா சுவாமிககள் திருமணம் செய்து கொள்ளாது பிரம்மச்சாரியத்தினைக் கடைப்பிடித்து வந்தார். தனது இரு தங்கைகளில் பொன்னம்மாவை யாழ் ப்பாணம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாகநாதர் என்பவருக்கும், மீனாட்சிப்பிள்ளையை கரம்பொன் தெற்கைச் சார்ந்தவரும் இரத்தினபுரி பெல்மதுளையில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவருமான சின்னப்பாபிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்தார். கரம்பொன் தெற்கைச் சேர்ந்த விதானையார் சோமசுந்தரம் தியாகராசா, இலங்கை ஒலிரப்புகக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த சோமசுந்தரம் சிவபாதசுந்தரம் ஆகியோரது தாய் மாமனாரே சின்னப்பாபிள்ளை. மகா தேவாசுவாமியின் தம்பியார் தம்பிப்பிள்ளை சுருவிலூரில் வைத்திலிங்கம், தையல்முத்து தம்பதிகளின் புதல்வி தங்கம்மாவை திருமணம் செய்து விவசாயி யாகத் திகழ்ந்தார். தங்கம்மா சுருவிலூரைச் சேர்ந்தவரும் கொழும்பில் பிரபல வர்த்தகராகத் திகழ்ந்தவருமான அமரர் வி.மாணிக்கத்தின்(யோகம்மாவின் கணவர்)சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிரு ந்த அவரது வர்த்தக நிலையத்தில் பணியுரிந்து வந்த கரம்பனூரைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அண்ணாமலையின் புதல்வாரன தியாகராசா,தம்பிப்பிள்ளையின் மகளான அன்னலெட்சுமியை(அன்னம்) திருமணம் செய்தார். இங்கு கனடாவில் ஸ்காபு றோ நகரில் ‘டெயிலி நீட்ஸ்’ என்ற வர்த்தக நிலையத்தினை நடாத்தி வரும் தியாகராசா பிரபாகரன் என்பவர் இவர்களது மகன் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாமியின் மறுசகோதரர் நல்லதம்பி யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா புத்தகசாலையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். அதனால் புத்தகசாலை உரிமை யாளரின் உறவுப் பெண்ணை மணந்து கொழும்புத்துறையில் வாழ்ந்து வந்தார்.

	மகாதேவா சுவாமியின் தொண்டில் மலர்ந்த கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலை 	 
		 

மதமாற்றத்தினைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்ட கரம்பொன் கத்தோலிக்க கன்னியர் பாடசாலையும், போதிய வசதிகளின்றி இயங்கி வந்த ஒரேயொரு திண்ணைப் பள்ளிக் கூடமும் மகாதேவா சுவாமிகளின் மனதினை குடைந்து கொண்டே இருந்தன. கரம்பொன் வாழ் சிறுவர் சிறுமிகள் அனைவரும் தங்கு தடையின்றி சைவசமயத்தோடு கூடிய கல்வியினை மேற்கொள்ள ஒரு பாடசாலை அமைக்க வேண்டுமெனச் சித்தம் கொண்டார். பனை ஓலையில் உமல்களை இளைப்பித்து அவற்றினை ஒவ்வொரு வீடுவீடாக விநியோகித்தார். தினமும் உலையில் அரிசி போடும்போது இந்த உமலிலும் ஒருபிடி அரிசியைப் போடுங்கள். வாரத்தில் ஒருமுறை நான் அதனை எடுத்துச் சென்று விற்று உங் கள் குழந்தைகளுகக்கு ஓருபாடசாலை கட்டித் தருவேன் என்றார். அவரது அரிய முயற்சியினைக் கேட்டறிந்த கரம்பொன் வாசிகள் பேரானந் தம் அடைந்தனர். பாத்திபுலத்துக்கு மேற்குத் திசையாகவும், முருகமூர்த்தி கோவிலுக்கு வடக்குப் புறமாகவும், பிரபல சுந்தரம் பரியாரி சந்த ணம் தம்பதிகளின் வீட்டுக்கு கிழக்கேயும், மலேசியா பென்சனியரான செல்லத்துரை இரத்தினம்(எனது பெற்றோர்கள்) தம்பதிகளின் வீட்டுக்கு தென்புறமாகவும் வயோதிபப் பாட்டியான குஞ்சரி ஆச்சிக்கு பத்துப் பரப்புக் காணியொன்று இருந்தது. அதனை பாடசாலை கட்டுவதற்காக மகாதேவா சுவாமியிடம் அன்பளித்தார். அயலட்டத்தவர்கள் அனைவரும் தமது வளவிலுள்ள பனை மரங்களைத் தறித்து அவற்றினை கட்டு மான வேலைகளுக்குப் பயன்படுத்துமாறு சுவாமிகளிடம் கூறினார்கள். மற்றும் பல தொழிலாளர்கள் தாம் கூலி எதுவுமேயின்றி சிரமதானமாக கட்டுமான வேலைகளில் ஈடுபட முன்வந்தார்கள். அவர்களது ஆர்வத்தினைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் மகாதேவா சுவாமிகள். அவரது திட்டம் சிரமமின்றி 1917ம்ஆண்டு ஓலைக் குடிசையாக உருப்பெற்றது. முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையில் அமையப் பெற்றதனால் அப் பாடசாலைக்கு சண்முகநாத வித்தியாசாலை எனப்பெயர் சூட்டினார் சுவாமி மகாதேவா.ஆயிரத்தி தொளாயிரத்தி பத்தாம் ஆண்டில் பிறந்த வி.நவரெத்தினம்(அண்மையில்காலமான முன்னாள் காவலூர்எம்.பி.),சின்னத்தம்பி தங்கக்குட்டி தம்பதிகளின் புதல்வி இரெத்தினம்(எனதுதாயார்); ஆகியோர் இப்பாடசாலையில் முதன்முதலில் ஒன்றாக இணைந்து மகாதேவா சுவாமியிடம் கல்வி கற்ற மாணவ மாணவிகள் என்ற பெருமை க்குரியோரில் இருவராவர்.


மகாதேவா சுவாமிகளின் முதலாளியான வர்த்தகர் வைத்திலிங்கமும், கரம்பொனூர் பொதுமக்களும் தொடர்ந்து பண உதவிகளையும் கட்டு மானப் பொருட்களையும் வழங்கி வந்ததினால் ஓலைக் குடிசையாக இருந்த பாடசாலை நான்காண்டு காலத்திலேயே 1921ம் ஆண்டு சீமெந் துக் கட்டிடமாக மாறியது. இராமகிரு~;ண மி~னைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தா இதற்கான அடிக்கல்லினை நாட்டியதோடு மாத்திரமல்ல கட்டிடம் கட்டி முடிந்ததும் அதனை சம்பிரதாய பூர்வமாகத் திறந்தும் வைத்தார். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்ற மகுட வாசகத்தினையும், நிறை குடம், குத்து விளக்குகள், நூல், எழுத்தாணி ஆகியவற்றினையும் சின்னமாகக் கொண்டுள்ளது சண்முகநாத வித்தி யாசாலை. கரம்பொன் ஊரைச் சேர்ந்த ஆ.சோமசுந்தரம்பிள்ளை, வே.தம்பிப்பிள்ளை, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அ.இராசையா, கந்தர்மட த்தைச் சேர்ந்த சின்னையா ஆகியோர் சண்முகநாத வித்தியாசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களாவர். இவர்ககள் சம்பளம் எதனையும் எதிர்பாராது தொண்டர்களாகவே சேவையாற்றி வந்தனரெனக் கூறப்படுகின்றது. இவர்களுடன் இணைந்து மகாதேவா சுவாமிகளும் சிறிது காலம் திருமறைகள், நிகண்டு, தமிழ் இலக்கணம் போன்ற பாடங்களைப் போதித்து வந்தார். சுவாமிகள் விரிவுரை ஆற்றும் போது மிக எளிமையாக தெளிவாக யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் நிகழ்த்துவார். தேவார, திருவாசகப் பாசுரங்களுடன் தூயதமிழில் தொடர்ந்து உரையாற்றுவார். கந்தபுராhணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவூரடிகள் புராணம் ஆகியவற்றிலுள்ள உப கதைககள், கவிதை நயங்களுடன் யாவரும் விரும்பிக் கேட்கும் வண்ணம் உரையாற்றுவார்.


பாடசாலை ஆரம்பிக்கு முன்னர் மாணவர்கள் தினமும் காலையில் அருகிலுள்ள முருகமூர்த்தி கோவிலுக்கு பஜனை பாடிக் கொண்டு அணிவ குத்துச் சென்று இறை வழிபாடு செய்து வருவதையும் சுவாமிகள் வழக்கமாகிக் கொண்டார். அத்துடன் நவராத்திரி காலத்தில் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று கோலாட்டம் அடித்து பட்சணங்கள் வாங்கி அருந்தி மகிழ்வதும் வழக்கமாகியது. 1949ம் ஆண்டில் அங்கு ஆரம்பக் கல்வியினை மேற்கொண்ட நானும் ஏனைய மாணவர்களுடன் பஜனை பாடிக்கொண்டு கோவிலுக்குச் சென்றதும், “தெய்யா ஒற்றை தெய்யா ரெட்டை….” எனப் பாடி கோலாட்டத்தில் பங்கு பற்றியமையும் நினைவில் நிற்கிறது. நாங்கள் கல்விகற்ற காலத்தில் வேலணையைச் சேர்ந்த பொட்டுக்கார பொன்னுத்துரையரும் (கரிய நிறமுடைய இவரது நெற்றியில் தினமும் சந்தணப் பொட்டு துலங்கும்) அவருக்குப் பின்னர் வேல ணையைச் சேர்ந்த பொன்னையா, பருத்தியடைப்பினைச் சேர்ந்த க.சிவலிங்கம் ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றினார்கள். நான் சிறுவ னாக இருந்த காலத்தில் 1955ம் ஆண்டளவில் சங்குமால் பக்கம் போனதும் இறந்து போன சங்குகளுக்குள்ளே இருக்கும் தசைகளின் துர்நா ற்றம் வயிற்றைக் குமட்டியதும், மாட்டுக்காலையில் கம்பீரமான தோற்றமும் நீண்ட கூரான கொம்புகளையுமுடைய காளை மாடுகள் நின்ற தும் இன்றும் என் நினைவில் நிற்கின்றன. ஆனால் அப்போது தங்குமடம் அங்கு செயற்பட்டதாக நானறியவில்லை. அதற்கு முன்னரே ஊறா த்துறை துறைமுகத்தினூடாக நடைபெற்று வந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நின்று போய் விட்டது.


சுவாமியின் முயற்சியினால் கரம்பனூர் வாசிகளிடையே சைவசமயப் பற்று அதிகரித்து எங்கும் தேவார, திருவாசகப் பாராயணம் ஒலித்தது. அவ்வப் போது சமயப் பெரியார்களை பாடசாலைக்கு வரவழைத்து சமயச் சொற்பொழிவுகளையும் சுவாமி அவர்கள் ஏற்பாடு செய்து வந்தார். இந்து சாதன ஆசிரியர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை, தேசபக்தன் ஆசிரியர் மாசிலாமணிப்பிள்ளை, சேர் பொன் இராமநாதன், கல்கத்தா இராமகிரு~;ண மடத்தி னைச் சார்ந்த சுவாமி சர்வானந்தா, சுவாமி விபுலானந்தர், இந்துசாதன ஆங்கில இதழின் ஆசிரியர் எம்.எஸ். இளை யதம்பி ஆகியோர் சுவாமியின் வேண்டுகோளினை ஏற்று அடிக்கடி சண்முகநாத வித்தியாசாலைக்கு வந்து விரிவுரைகள் நடாத்தினார்கள். இங்கு கல்விகற்று பிரபல்யம் அடைந்த மாணவர்களுள் உயர் நீதிமன்ற நீதியரசர் சு.சர்வானந்தா, காவலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரெத்தினம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு த்தாபனத்தில் பணியாற்றியவரும், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவருமான புகழ்பெற்ற சோ.சிவபாதசுந்தரம், ஒலிபரப்பாளர் எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்.


மகாதவா சுவாமியின் குருவான சுவாமி கனகரெத்தினம் 1920ம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றபோது இவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்தியாவிலுள்ள பல திருத்தலங்களையும் தரிசித்து பெரியார்களையும் சந்தித்துக் கொண்டு சிதம்பரம், வேதாரணியம் ஆகிய இடங்களுக்குச் சென்று பின்னர் திருப்பெருந்துறையினைச் சென்றடைந்தனர். இப்புனித ஸ்தல யாத்திரைகளின் போது சுவாமி மகாதேவா தனது குருநாதரிடம் தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். மணிவாசகப் பெருமான் சற்குருவிடம் தன்னையே அர்ப்பணித்த திருத்தலமாகிய திருப்பெருந்துறையில் வைத்து கனகரெத்தினம் சுவாமிகள் மகாதேவா சுவாமிக்கு தீட்சை வைத்து துறவிக்கான பூரணத்து வத்தை வழங்கினார். ஒரு வருட காலம் இந்தியாவிலேயே இருந்து விட்டு 1921ம் ஆண்டு மகாதேவா சுவாமிகள் இலங்கை திரும்பினார்.


தன்னூரிலே ஒரு பாடசாலையினை நிறுவியதோடு தன்கடன் முடிந்ததென்று மகாதேவா சுவாமி அவர்கள் ஓய்ந்து விடவில்லை. அடிக்கடி யாழ்ப்பா ணத்திற்குச் சென்று சமயப் பெரியர்களையும், குருமார்களையும் சந்தித்து அவர்களுடன் தொடர்பு கொண்டு பரந்த நோக்கோடு தொண்டாற்றி வந்தார். கந்தர்மடத்தைச் சேர்ந்த தனது குருவான கனகரெத்தினம் சுவாமியையும் அடிக்கடி சந்தித்து வந்தார். கந்தர்மடம் கந்தபுராண ஒழுங்கையிலிருந்த இடமொன்றில் சைவப்பெரியர்கள் கூடி வேதாந்த விடயங்கள் குறித்து விவாதிப்பதுண்டு. இவ்விவாதத்தில் ஈடு படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததினால் கந்தர்மடம் பழம் வீதியில் உடைச்சி வளவில் ஓலைக் கொட்டிலை அமைத்து வேதாந்த விசாரணைக்குழு அங்கு இடம் மாறியது. மீண்டும் விசாலமான இடத்துக்கு இடமாற வேண்டிய அத்தியாவசியம் ஏற்ப ட்டபோது பிரபல சுருட்டு வியாபாரியாக இருந்த வைரவநாதர் சின்னத்தம்பியார் பரம்பரையைச் சேர்ந்த சிவகுருநாதர் குமாரசாமி (வை.சி.சி.கு) என்பவர் கந்தர்மடப்பகுதியில் இன்று குமாரசாமி வீதியென அழைக் கப்பட்டு வரும் செம்மண் கிடங்கடி என்ற காணியை தேர்ந்தெடுத்தார். இந்த இடத்திலேயே 1922ம் ஆண்டு ஸ்ரீ சிவகுருநாத குருபீட மடத்தினை மகாதேவா சுவாமிகள் கட்டுவித்தார். இவரது குருவான கனகரெத்தினம் சுவாமிகளே குருபீடத்தின் முதலாவது பரமாசிரியராக இருந்து சைவசமய, சனாதன, வேத சாஸ்த்திரங்;களைப் போதித்து வந்தார். சன்மார்க்க சீலர்களை உருவாக்கும் புனித மடமாக இது திகழ்ந்தது.


“ஆண்டவன் எல்லாரிடமும் குடிகொண்டுள்ளார் ஆனால் எல்லாரும் ஆண்டவனிடத்தில் இல்லை.பக்தியெனும் இரசத்தை எடுத்து இருதய கமலக் கண்ணா டியில் பூசினால் அங்கு ஈசுவரனின் உருவம் பதியும்” எனக்கூறி பிரச்சாரம் செய்து வந்த கனகரெத்தினம் சுவாமிகள் மகாதேவா சுவாமியை தனது பிரதம சீடராக ஏற்று அவரிடத்தில் தனது பொறுப்புக்கள், பணிகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு 1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி வியாழக்கிழமை மிருகசீரிட நட்சத்திரத்தில் பரிபூரணத்துவம் அடைந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை அவரது உடல் சிவகுருநாத மடத்தி லேயே சமாதி வைக்கப்பட்டது.


சிவகுருநாத மடத்தினைப் பெறுப்பேற்று நடாத்தி வந்த மகாதேவா சுவாமிகள் தனக்குப் பின்னரும் இக்குரு பீடம் தங்குதடையின்றி இயங்க வேண்டு மென்ற நோக்குடன் விளைவேலி என்ற இடத்தில் வருமானம் தரக்கூடிய வகையில் நெல்வயல்களைக் கொண்ட குருபீடம் ஒன்றினை 1927ம் ஆண்டு அமைத்தார்.அங்கு தென்னங் கன்றுகளை நாட்டி தண்ணீர் ஊற்றுவதற்காக இரண்டு நாட்களுக்கொருமுறை சுவாமிகள் கந்தர் மடத்திலிருந்து காலையில் புறப்பட்டு நுணாவில் சந்தியிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள விளைவேலிக்கு கால்நடையாகவே சென்று வருவாராம். ஆறுமுக நாவலரைப் போன்று இவரும் பழைய சைவசமய ஏடுகளைத் தேடி எடுத்து அவற்றினை நூலாக வெளியிட்டு வந்தார். இவரால் அச்சிடப்பட்ட நூல்களில் ‘ஆன்மசாரம்’ என்பதும் ஒன்றாகும். மகாதேவா சுவாமியிடம் கல்வி பயின்ற பல மாணாக்கர்கள் அவரைப் போலவே ஆங்காங்கே பாடசாலைகளை அமைக்கும் ஆவலுடையோராய் திகழ்ந்தனர். 1930ம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த அறிஞர் பொன்னையாவின் வேண்டுகோளுக்கிணங்க இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து பின்னர் சுவாமி களே அதனை திறந்தும் வைத்தார். 1933ம் ஆண்டு கோண்டாவிலைச் சேர்ந்த கந்தையா சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்நுங்கை சைவ வித்தியாசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி பின்னர் வித்தியாசாலையினை ஆரம்பித்தும் வைத்தார். கட்டைவேலி என்ற இடத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் சிலர் ஆங்கே பாடசாலை ஒன்றினை அமைப்பதற்காக சுவாமிகளை அழைத்து அத்திவாரம் இடச்செய்தனர். 1935ம் ஆண்டு பங்குனி ஏழாம் திகதி அத்திவாரமிடப்பட்ட இப்பாடசாலை ஞானாசிரியர் கல்லூரி என்ற பெயருடன் கல்வியறிவினை ஊட்டி வந்தது. அக்காலகட்டத்தில் சுவாமி மகாதேவாவுடன் இணைந்து சேர் பொன் இராமநாதன், எஸ்.இராஜரெத்தினம் ஆகியோர் சைவப் பாடசாகைளை முறையாகப் பராமரிக்கும் பொருட்டு சைவவித்தியா விருத்திச் சங்கத்தினை (Hindu Board of Education) ஆரம்பித்தனர். இச்சங்கம் வடமாகா ணத்திலிருந்த நூற்றி அறுபத்தொரு சைவப் பாடசாலைகளையும், ஆசிரிய பயிற்சிக் கல்லூரியையும் பராமரித்து வந்ததது. இராசரெத்தினம் பிற்காலத்தில் ர்iனெர டீழயசன இராசரெத்தினம் என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

மகாதேவா சுவாமியை தனது குருவாகக் கொண்டு துறவு வாழ்க்கையினை மேற்கொண்ட இணுவிலைச்சேர்ந்த வடிவேல் சுவாமிகள் 1957ம்ஆண்டு உருத்திரபுரம் ஜெயந்தி நகரில் மகாதேவா ஆச்சிரமத்தை நிறுவி திறம்பட நடாத்தி வருகின்றார். காடாய்க் கிடந்த இப்பகுதி இன்று பழமுதிர்ச் சோலையாகி சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் புண்ணிய பூமியாக மிளிர்கின்றது. மகாதேவா சுவாமிகளின் பிரதம சீடர்களுள் ஒருவரான இவரும்;, சுவாமிகளின் பின்னர் சிவகுருநாத வேதாந்த மடத்தின் பொறுப்பாளியாக நியமிக்கப்பட்ட வட்டுக் கோட்டையைச் சேர்ந்த அப்புக்குட்டி இராமலிங்கம் சுவாமிகளும் குறிப்பிடத்தக்கோராவர். தனது அறுபத்தெட்டாவது வயது வரை நோய் நொடியின்றி துரிதமாக இறைபணியும் சைவத் தொண்டும் ஆற்றி வந்த மகாதேவா சுவாமிகள் 1942ம் ஆண்டு ஐப்பசி மாதம் நோய்வாயுற்றார். தனது காலம் கனிந்து விட்டதென்பதை உணர்ந்து மருந்து எதுவும் சாப்பிட மறுத்துவிட்டார். படுத்த படுக்கையாக இருந்த அவர் ஐப்பசி மாதம் முப்பதாம் திகதி மாலை திடீரென படுக்கையை விட்டெழுந்து கம்பீரமாக அமர்ந்தி ருந்தார். கீழே தொங்கிக் கொண்டிருந்த கீழ்வாய் உதட்டினை தனது கரத்தினால் அழுத்திப் பொருத்தி மூடினார். அதன் பின் பேச்சுமில்லை, மூச்சு மில்லை. சரியாக இரவு ஏழு மணிக்கு அவர் சமாதி நிலையினை எய்தினார். இவரது சமாதியும் சிவகுருநாத குருபீடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கோட்பாட்டுக்கமைய வாழ்ந்து வந்த மகாதேவா சுவாமிகளின் பணியினை அவரது சீடர்கள் தொடர்ந்து பேணி வரு வது பெருமைக் குரியதாகும்.


ஸ்ரீலங்கா அரசினால் 1960ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட சிங்கள அரசாங்க மொழிச் சட்டத்தின் கீழ் சகல பாடசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் வழங் கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டு பாடசாலைகள் யாவும் அரசாங்கத்தினால் சவீகரிக்கப்பட்டன. இதன் காரணமாக சைவ வித்தியா விருத்திச் சங்க மும் செயலிழந்தது. அக்காலத்தில் சைவப் பாடசாலைகளில்; மொத்தம் நாற்பதினாயிரம் சைவ மாணவர்கள் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 1981ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி மக்களின் மொத்த எண்ணிக்கை 14,846,750. இவர்களுள் பௌத்தர்கள் 10,288,328. இந்துக்கள் 2,297,806. முஸ்லீம்கள் 1,121,715. கத்தோலிக்கர் 1,023,713. கிறீஸ்த்தவர்கள் 106,854. ஏனை யோர் 8,334 ஆவர். யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த இந்துக்களின் எண்ணிக்கை 830,552 ஆகும்.


மகாதேவா சுவாமிகள் ஆற்றிய அரும்பெரும் தொண்டினை நினைவு கோரும் வகையில் கரம்பனூர் வாசிகளும் அவரது சி~;யப் பரம்பரையினரும் 1975ம் ஆண்டு மகாதேவா சுவாமிகளின் நூற்றாண்டு விழாவினை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அத்துடன் அவரது வாழ்க்கை வரலாற்றினையும், அவரது பொதுநல சேவைகள், சமயத் தொண்டுகள் பற்றிய விபரங்களைக் கொண்ட நூற்றாண்டு மலர் ஒன்றி னையும் வெளியிட்டனர். அக்கால கட்டத்தில் சண்முகநாத மகாவித்தியாசாலையின் அதிபராகப் பணியாற்றிய வேலணையைச் சேர்ந்த தில்லை நாதன் நடராஜாவும் அதில் முக்கிய பங்காற்றினார். தற்போது கனடாவில் வசித்து வரும் அவர் எமது பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகத் திகழ்கின்றார். சண்முகநாத மகா வித்தியா சாலையின் பழைய மாணவரும் தற்போது இலங்கை மத்திய வங்கியில் உதவி ஆளுஞரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி வருபவருமான என் சகோதரர் செல்லத்துரை சிவானந்தன் எனது வேண்டுகோளுக்கிணங்க பலசிரமங்களுக்கு மத்தியில் மகாதேவா சுவாமிகளைப் பற்றிய தகவல்களடங்கிய ஸ்ரீ சிவகுரு நாத குருபீடம் வெளியிட்ட மலர் ஒன்றினை தேடிப் பெற்று உரிய வேளையில் அனுப்பி வைத்தார். ஆன்மீகவாதிகளின் அர்ச்சனை மலர் போன்ற அம்மலரில் தேன் துளிகளாக இருந்த கரம்பனூர் குருநாதரைப்பற்றிய அரிய தகவல்கள்;‘மகாதேவ மலர்-2007” க்கான இக்கட்டுரையினை எழுதுவதற்கு பெரும் உறுதுணையாக இருந்தன.

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”

	செல்லத்துரை தெட்சணாமூர்த்தி 	 
	உபதலைவர், சண்முகநாத மாகாவித்தியாசாலை ப.மா.சங்கம் கனடா 	 
	“வீரகேசரி”யின் முன்னாள் உதவி ஆசிரியர், எழுத்தாளர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Moorthy/சைவமும்_தமிழும்&oldid=96167" இலிருந்து மீள்விக்கப்பட்டது