பயனர்:Mozhiyaal/மணல்தொட்டி

இளவேனில் வாலறிவன்

இளவேனில்  வாலறிவன்( 02/08/ 1999 -ல் கடலூரில் பிறந்தவர்) , இவர் இந்திய நாட்டு விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 10மீ ஏர்ரைபிள்  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்  தற்போது  உலகின் முதல் இடத்தை வகிக்கிறார். பல வெற்றி பதக்கங்களை பெற்ற இவர் , 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய நாட்டின் பிரதிநிதி ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி

வாலறிவன் ஆகஸ்ட் 2 வது நாள் 1999 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் பிறந்தார். இவரது குடும்பம் இவரது சிறுவயதிலேயே குஜராத்திற்கு இடம்பெயர்ந்தனர். இவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். இவரது தாய் தாவரவியலிலும் தந்தை வேதியியலிலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இவர் தடகள போட்டியின் டிராக் ஈவண்ட்டில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார், ஆனால் இவரது தந்தை துப்பாக்கி சுடுதலை அறிவுறுத்தினார்.இதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இவர் துப்பாக்கி சுடுதலில் ரசித்து மகிழ்வுடன் ஈடுபட்டார்.[1]

வாலறிவனின் திறமையை கண்ட முன்னாள் ஏஸ் ஷூட்டர் ககன் நரங் இவருக்கு பயிற்ச்சி அளிக்க தொடங்கினார். இவர் தனது 15 ஆம் வயதில் முறையான பயிற்ச்சியை ககன் நரங் விளையாட்டு அறகட்டளையுடன்  இணைந்த மாவட்ட விளையாட்டு பள்ளியில் தொடங்கினார். இவர் தனது துவக்க பயிற்ச்சியை நேகா சவுகனிடம் பெற்றார்.[1]

இவரது பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்தாமல் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இவரது பயிற்ச்சியின் ஆரம்ப காலத்தில் தினமும் மேனுவல் ஷூட்டிங் ரேஞ்ச் அமைக்கவும் கழட்டுவதுமாக இருந்தது. பின்பு இவருக்கு குஜராத் மற்றும் இந்திய விளையாட்டு அதிகாரிகளிடமிருந்து உதவி கிடைத்தது.[1]]

வாலறிவன் தன்னை அமைதியற்றவராகவும் தன்னிச்சையானவராகவும் கருதினார். அதனால் துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டியில் மிளிர தன்னை நிதானமானவராக மாற்றினார்.[2]

நரங் 2017 ஆம் ஆண்டு வரை இவரது பயிற்ச்சியாளராக தொடர்ந்தார். நரங் வாலறிவனின் திறனை மெருகேற்றுவதில் பெரும்பங்காற்றினார். வாலறிவன், உலகின் முதல் இடத்தை துப்பாக்கி சூட்டில் பெற்றதற்கு நரங் மற்றும் அவரது பெற்றோரை காரணம் காட்டினார்.[1]

ஆட்டக்கால சாதனைகள்

வாலறிவன்  அனைத்து பள்ளி அளவிலான போட்டியிலும் தனது திறமையால் சகபோட்டியாளர்களை ஈர்த்தார். 2017 ஆம் ஆண்டு இவர் இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம்பெற்றார்.[1] இது இவரது விளையாட்டு திறமையை வலுபடுத்த உதவியது. இவரது முதல் சர்வதேச வெற்றி 2018 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் பெற்றபோது கிட்டியது. இந்த சாதனையை இவர் மறக்க முடியாத நிகழ்வு என கூறுகிறார்.அந்த போட்டியில் கலந்து கொள்ள போட்டிக்கு முந்தைய நாள் தான் போட்டி நிகழ்வு இடத்திற்கு சென்றதாகவும் மிகவும் சோர்வடைந்திருந்ததாகவும் தனது கால் வீங்கியிருந்ததாகவும் ஆனாலும் அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் மட்டுமல்லாது ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியதாகவும்  நினைவுகூர்கிறார்.[1]

இவர் 2019 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார். அதே ஆண்டு சீனாவின் புட்டியனில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப் உலகச்சாம்பியன் போட்டியில் தங்கம் பெற்று தனது பிரிவில் உலகின் முதலிடத்தை பிடித்தார்.[3]

2020 ஆம் ஆண்டு பங்களாதேஷ் துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு இணைய வழியில் நடத்திய ஷேக்ரஸ்ஸல் ஏர் ரைபிள் சாதனையாளர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.[6]

அதே ஆண்டு இந்திய இன்டஸ்ட்ரி பாடி எப்.ஐ.சி.சி.ஐ ஆண்டின் விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை வாலறிவனுக்கு  வழங்கினர்.[4]

இவரை 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் வலுவான வீராங்கனை என எதிர்நோக்குகின்றனர்.[5]

வலது பக்கப்பெட்டி தகவல்

முழு பெயர் : இளவேனில் வாலறிவன்

பிறப்பு : 2 ஆகஸ்ட் 1999

பிறந்த இடம் : கடலூர், தமிழ்நாடு

நாடு : இந்தியா

விளையாட்டு : 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்

பிரநிதித்துவம் : இந்தியா

உலக தரவரிசை : 1

பதக்கங்கள் :

2018 - சிட்னியில் ஜூனியர் உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம்

2019 - உலகக்கோப்பையில் ரியோ டி ஜெனிரோவில் தங்கம்

2019 - புட்டியன் உலக சாதனையாளர் போட்டியில் தங்கம்

2020 - பங்களாதேஷ் துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு இணைய வழியில் நடத்திய ஷேக்ரஸ்ஸல் ஏர் ரைபிள் சாதனையாளர் போட்டியில் தங்கப்பதக்கம்

மேற்சான்றுகள்

1.பி.பி.சி  கட்டுரை ( வெளியிடப்பட வேண்டும்)

2.https://www.indiatoday.in/sports/other-sports/story/elavenil-valarivan-tokyo-olympics-2020-coronavirus-lockdown-shooting-news-1664643-2020-04-08

3.https://www.issf-sports.org/athletes/athlete.ashx?personissfid=SHINDW0208199901

4.https://www.firstpost.com/sports/wrestler-bajrang-punia-shooter-elavenil-valarivan-honoured-at-ficci-india-sports-awards-2020-9094771.html

5.https://www.femina.in/trending/achievers/elavenil-valarivan-awarded-ficci-sportsperson-of-the-year-180324.html

6.https://www.thehindu.com/sport/other-sports/elavenil-clinches-gold/article32887489.ece)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mozhiyaal/மணல்தொட்டி&oldid=3105261" இலிருந்து மீள்விக்கப்பட்டது