பயனர்:Muppalam/மணல்தொட்டி

வேதாந்த சூடாமணி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல் வேதாந்த சூடாமணி ஆகும். இவர் பேரூர் சாந்தலிங்கரின் குரு. சாந்தலிங்கரின் நூல்களை முன்னதாக வைத்து அவரின் குருவான சிவப்பிரகாசரின் நூல்கள் பின்னதாக வைக்கப்பெற்று குருவருள் அதிகரிக்கும் முறைமையில் கோவிலூர் வேதாந்தப் பாடம் அமைக்கப்பெற்றுள்ளது என்பதை இதன்வழி உணர இயலும். வடமொழியில் விவேக சிந்தாமணி என்ற நூல் எழுதப்பட்டது. அதன் ஒரு பகுதியாக விளங்கும் வேதாந்த பரிசேதம் என்பதை மட்டும் விரித்துக் கன்னடத்தில் ஸ்ரீநிஜ குண யோகீஸ்வரர் என்பவர் எழுதினார். இது வெதாந்த பரிபாஷைக்கு விளக்கம் தருவதாக அமைந்திருந்தது. பிரம்மம் ஒன்றே என்று இந்நூல் சாதித்தது. இந்நூற்களை அடிப்படையாக வைத்து வேதாந்த சூடாமணி என்ற நூலைச் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். இந்நூல் வேதாந்த நிகண்டு என்றும் போற்றப்பெறுகிறது. இந்நூல் பாயிரம் உட்பட 184 பாடல்களை உடையது. இந்நூலில் திருக்கு விவேகம், திரிசிய விவேகம் ஆகியன விளக்கம் பெறுகின்றன. மனத்தை பிரம்மத்தில் நிலைநிறுத்துவதே ஞானம் என்கிறது இந்நூல். ஐந்த கோசங்கள் உயிர்க்கு உண்டு. அதனை இந்நூல் அழகுற விளக்குகிறது. அன்னமய கோசம் சுக்கில சுரோணிதங்களால் உண்டாக்கப்படும் தூல சரீரம் பிராணமய கோசம்

சூக்கும சரீரத்தில் பொருந்தி இருக்கின்ற பிராணன் முதலான வாயுக்கள், வாக்காதி கன்மேந்திரியங்களும் கூடி நிற்பது பிராணமய கோசம்

மனோமய கோசம் மனமும் ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது மனோமய கோசமாகும். விஞ்ஞானமய கோசம் ஆன்மாவின் பிரதிபிம்மத்துடன் அகங்காரம், ஞானேந்திரியங்கள் ஆகியன

            கூடி நிற்பது விஞ்ஞானமய கோசம்.

ஆனந்தமய கோசம் அவித்தை, பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய கூடியது ஆனந்த மயகோசம். என்று அகராதி நிலையில் வேதாந்தச் சொற்களுக்குப் பொருள் சொல்லுவதாக வேதாந்த சூடாமணி எழுதப்பெற்றுள்ளது.

சீவன் முத்தரின் இலக்கணத்தைப் பின்வரும் பகுதி உரைக்கிறது. ‘‘சீவன் முத்தற்கு உரியனவாம் மைத்திரியே, கருணை திகழ்முதிதை உபேட்சை எனும் சற்குணங்கள் என்ற பாடலடி கொண்டு சீவன் முத்தர்க்கான குணங்களை அறிந்து கொள்ளமுடிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muppalam/மணல்தொட்டி&oldid=2411533" இலிருந்து மீள்விக்கப்பட்டது