பயனர்:NIKITHA MANOHARAN/மணல்தொட்டி

நான் ம.நிகித்தா,பணியாற்றும் பெற்றோர்களின் பொறுப்புள்ள மகள். நான் பெங்களூரில் உள்ள கிறித்துவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொருளாதாரம்,கணிதம்,புள்ளிவிவரம் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறேன்.நான் இக்கட்டுரையில் என் பின்புலம்,என் இலக்கு,என் விருப்பங்கள் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ளப்போகிறேன்.

பின்புலம்

   என் சொந்த ஊர் பவானி அருகில் உள்ள குறிச்சி என்னும் கிராமம். நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூரில்.பெற்றோர்கள் அரசு பணியில் நல்ல ஊதியத்தில் உள்ளனர்.நான் அவிலா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன்.நான் அனைத்து முழு ஆண்டு தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றேன்.என் பள்ளி பருவத்தில் ஒரு சிறந்த மாணவியாக திகழ்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த பாடம் வேதியல்.இப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். 
   நானும் என் சகோதரியும் இரட்டையர்கள்.எங்களிடம் போட்டி உண்டு அனால் பொறாமை இல்லை. இருவரும் நல்ல ஒழுக்கங்களுடன் வளர்ந்தோம். அவளும் தற்போது என்னுடன் கிறித்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாள். எங்களுக்கு ஒரு தம்பியும் உண்டு.அவன் நாலாம் வகுப்பு படித்து வருகிறான்.

விருப்பங்கள்

   எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு பனைக்கதை புத்தகம் படிப்பது.நான் டான் பிரவுன் [DAN BROWN] புத்தகங்களை விரும்பி படிப்பேன். எனக்கு துப்பறிவு பற்றிய கதைகளில் ஆர்வம் அதிகம்.இசை கேட்பதில் அளவில்லா ஆனந்தம். இன்னிசை பாடல்களை விரும்பி கேட்பேன். படம் பார்ப்பதிலும் ஆர்வம் உண்டு.எல்லா வகை படங்களையும் கண்டு களிப்பேன்.எனக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி. பாட்டி செய்யும் பிரியாணியை ரசித்து உண்பேன்.எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பூப்பந்தாட்டம்.விளையாட்டு வீராங்கனை சாய்னாவை மிகவும் பிடிக்கும்.தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம்.நான் ஒரு இயற்கை விரும்பி.மழைக்காலத்தில் பனிக்குழைவை விரும்பி உண்பேன்.நடனம் ஆடுவதில் ஏதோ ஆர்வம் இல்லை.ஆனால் என் தம்பியும் சகோதரியும் மிக அழகாக நடனம் ஆடுவர்.அவர்கள் ஆடுவதை கண்டு ரசிப்பேன்.

சாதனைகள்

   நான் தேசிய சாரண சாரணியர் இயக்கத்தில் உறுப்பினராக திகழ்ந்து வந்தேன்.அதில் மிக உயரிய விருதான ஆளுனர் விருது வென்றுள்ளேன்.நான் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 92% எடுத்து என் பெற்றோர்களுக்குப் பெருமை தந்துள்ளேன்.கட்டுரைப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வென்றுள்ளேன்.பள்ளியில் நல்ல ஒழுக்கமுடைய மாணவி என்றும் பெயர் பெற்றுள்ளேன். 

இலக்கு

   என் இலட்சியம் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பது. நான் பொதுநலத்தில் ஆர்வம் கொண்டுள்ளேன். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது என் சிறுவயது இலட்சியம்.என்னால் இயன்ற உதவிகளை என் மக்களுக்குச் செய்வேன். நான் உண்மையாகவும் முழுமனதுடனும் என் பணியை மேற்கொள்வேன்.அப்துல் கலாம் ஐயா எனக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.அவரைப் போல் தன்நலம் கருதாமல் மக்களுக்கு பணிபுரியவேண்டும் என்பதே என் ஆசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:NIKITHA_MANOHARAN/மணல்தொட்டி&oldid=1983242" இலிருந்து மீள்விக்கப்பட்டது