பயனர்:Nakkeeran veeradurai/மணல்தொட்டி
மறைமலை அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:
15.07.1876 : மறைமலையடிகளார் தோற்றம் தந்தை, தாய் : சொக்கநாதர், சின்னம்மை 1893 : சவுந்தரவல்லியை மணம் முடித்தல் 1895 நவம்பர் : பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம் 1897 : சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்“ நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல். 9/3/1898 : சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல். 19/4/1900 : அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை. 1903 : ‘அறிவுக்கடல்‘ முதல் மலர் வெளியிடுதல். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உருவாதல். 18/05/1905 : திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல். 7/7/1905 : வ.உ.சி. சந்திப்பு திசம்பர் 1906 : சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. 10/4/1911 : கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல். 1/5/1911 : பல்லாவரம் மாளிகையில் குடியேறல். 27/8/1911 : துறவியாதல் 7/1/1913 : “தமிழர் நாகரிகம“ உரை நிகழ்த்துதல். 10/1/1914 : கொழும்பு நகரில் முதல் பொழிவு 1916 : தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல் 23/5/1917 : கொழும்பில் வரவேற்பு 14/1/1922 : யாழ்ப்பாணத்தில் “பழந்தமிழர் நாகரிகம்“ பற்றிய பொழிவு 31/12/1925 : சைவ சித்தாந்த மகா சமாசத்தின் 20-ஆம் ஆண்டு விழா. 1925 : பலி விலக்கு இயக்கம் “சிறு தேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா?“ 1930 : மறைமலையடிகள் கல்விக்கழகம் நிறுவியது. ஆலந்தூர் – இளவழகனார். 4/10/1937 : சென்னை கோகலே மண்டபம் “இந்தி எதிர்ப்பு மாநாடு“ தலைமை. 19/10/1940 : சென்னை பச்சையப்பன் மண்டபம் அனைத்து இந்தியத்தமிழர் மத மாநாடு ‘தமிழர் மதம்‘. 15/9/1950 : வெள்ளி. பிற்பகல் 3.30 அடிகளார் மறைவு 24/8/1958 : மறைமலையடிகளார் நூலகம் அமைதல். 1976 : அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்.