பயனர்:Nandhadhivya/மணல்தொட்டி
தற்போதைய திருப்பூர் மாவட்டம் முன்னொரு காலத்தில் அழகிய ஆறுகள் நிறைந்த ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது காலமாற்றத்தினாலும், மனித நாகரிக வளர்ச்சியாலும், தொழிற்துறை வளர்ச்சியாலும் சீர்கேடடைந்து மாசடைந்த நகரமாக மாறியுள்ளது.
பழங்காலத்தில் திருப்பூரைச் சுற்றிலும் ஆற்றுச் சமவெளிகளில் பழங்கால நாகரிகம் நிலவியது. அதற்கான அடையாளங்கள் பல உள்ளன. உதாரணமாக சில ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். அவையாவன,
- ஆத்துப்பாளையம்,
- நல்லாத்துப்பாளையம்,
- அணைப்புதூர்,
- அங்கேரி பாளையம்.
இவையெல்லாம் நல்லாற்றின் கரைகளில் அமைந்த ஊர்களாகும். ஊர்கள் இன்றளவும் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நல்லாறு என்ற ஆறு மட்டும் சாக்கடையாக மாறியுள்ளது.
இதைக் காலமாற்றம் என்றோ பரிணாம வளர்ச்சி என்றோ கூறி நாம் செய்யும் தவறுகளை மறைக்க நினைப்பது தவறாகும். அழகிய இயற்கைச் சூழல்கள் அனைத்தும் மனித வளர்ச்சிக்குப் பலியாவதையே இது உணர்த்துகிறது.
இயற்கையைப் பாதுகாப்போம் இயற்கைக்கு மதிப்பளிப்போம்.
- ↑ "திருப்பூரும் அதன் இயற்கைச்சூழலும்". பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2015.