பயனர்:NeelakandanNagarajan/மணல்தொட்டி
மைத்ர முகூர்த்தம் :
ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ரேய முகூர்த்தம் என கூறுவர். அதை பற்றி இன்று நம் சித்தர்களின் குரலில் விரிவாக பார்க்கலாம். அவசியம் அனைவரும் படித்துஅனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!
இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...
பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.
மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும்.
செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.
செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.
மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.
செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.
இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;
உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் நாட்கள் 2019 - 2020
இந்த விகாரி வருடத்தின் வரும் அடுத்த மைத்ர முகூர்த்த நாட்கள்:
13.7.2019 சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
25.7.2019 வியாழன் இரவு 12.30 முதல் நள்ளிரவு 2.30 வரை;
9.8.2019 வெள்ளி மதியம் 12.40 முதல் 2.40 வரை;
20.8.2019 செவ்வாய் இரவு 10.12 முதல் 12.12 வரை;
21.8.2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை;(வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே)
5.9.2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை;
17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;
3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை;
14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;
30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை;
9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை;
மாலை 4.36 முதல் 6.36 வரை;
காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை;
11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை;
27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை;
8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை;
24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;
4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;
1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;
16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;
28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;
8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;
14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;
21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;
26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;
27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;
11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை;
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;
பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.
குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.
ராசிப்படி கடன் தொல்லை தீரவைக்கும் மைத்ர முகூர்த்தம்
மேஷம்: வியாழன் காலை 9 – 10½ ;
ரிஷபம்: வெள்ளி காலை 8 – 10½;
மிதுனம்: புதன் காலை 7½ – 9;
கடகம்: திங்கள் மாலை 4½ – 6;
சிம்மம்: ஞாயிறு காலை 11 – 12½;
கன்னி: வெள்ளி மாலை 5 – 6½;
துலாம்: சனி காலை 10½ – 12½;
விருச்சிகம்: வியாழன் மாலை 3 – 5½;
தனுசு: செவ்வாய் 10½ – 12½;
மகரம்: சனி காலை 9 – 10½;
கும்பம்: திங்கள் மாலை 3 – 5½;
மீனம்: வியாழன் காலை 9 – 10½ வரை.
மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம்.