பயனர்:Nivetha Manivannan/மணல்தொட்டி

செலுகனேந்தல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் பூலாங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் ஆகும். இங்கு சுமார் 50 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர்.இவ்வூரின் மக்கள் தொகை 170.

அமைவிடம்:

சிவகங்கையில் இருந்து கிழக்கு நோக்கி 56 கிலோமீட்டர் தொலைவிலும், இளையான்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்:

இவ்வூர் ஊர்மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை தழுவி வாழ்வதால் ஆரம்பத்தில் சிலுவையேந்தல் என அழைக்கப்பட்டது.நாளடைவில் மருவி செலுகனேந்தல் என்றானது. மேலும் ஊரைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்க கண்மாய் உள்ளதால் ஏந்தல் என்ற பெயரையும் தாங்கி நிற்கிறது.

பள்ளிகள்:

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இவ் ஊரில் உள்ளது. இது 1990களில் தொடங்கப்பட்டது ஆகும். இடைநிலை, உயர்நிலை வகுப்புகள் பயில ஊரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும்,வடக்கு நோக்கி 7 கிலோமீட்டர் தொலைவில் புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியும் உள்ளது. சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகள் அனைவரும் இப்பள்ளிகளில் தான் பயில்வர்.

பிற செய்திகள்:

இவ் ஊரின் முக்கியத் தொழில் விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பாகும். பயிர், பருத்தி,மிளகாய்,எள்,கடலை, கேழ்வரகு போன்றவற்றை இங்கு பயிரிடுகின்றனர்.இவ் ஊரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

இவ் ஊரில் புனித அருளானந்தர் ஆலயம் ஒன்று உள்ளது. மேலும் ஊரின் எல்லையில் முனீஸ்வரர் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் பக்கத்துக் கிராமமான மேலேந்தல் மக்கள் வந்து வழிபாடு செய்வர்.

ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இராஜசிங்கமங்களம் என்ற பேரூராட்சி உள்ளது. இங்கு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு தான் வந்து காய்கறிகள் வாங்கி செல்வர். இவ் ஊரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான இராஜசிங்கமங்களம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாம் ராஜசிம்ம பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டதாகும்.இந்த கண்மாயில் 48 மடைகள் உள்ளன. இதனால் சுற்றியுள்ள ஊர்கள் பாசன வசதி பெறுகின்றன.இராஜசிங்கமங்களம் சேதுபதி மன்னர் .காலத்தில் “ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம்" என அழைக்கப்பட்டது என்பதை ராமநாதபுரம் வரலாற்று நூலில் எஸ்.எம் கமால் பதிவு செய்திருக்கின்றார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nivetha_Manivannan/மணல்தொட்டி&oldid=3900924" இலிருந்து மீள்விக்கப்பட்டது