பயனர்:Nshankarghsperumal/மணல்தொட்டி

கீழப்பசலை

            கீழப்பசலை என்னும் கிராமம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாம்துரை வட்டத்தில் உள்ளது. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மானாமதுரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இக்கிராமத்தில் 800-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றன்ர். கீழப்பசலை ஊராட்சி மன்றத்தில் வேதியரேந்தல், ஆதனூர், சங்கமங்கலம் போன்ற கிராமங்களும் அடக்கம். இங்கு பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில், முத்துமாரியம்மன் கோவில், சங்கையா கோவில் போன்ற கோவில்கள் உள்ளன. நாற்பதாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இங்கு உள்ளது. 
      மானாமதுரைக்கு அருகில் இருக்கும் இக்கிராமமானது பார்த்திபனூர், இராஜகம்பீரம் உள்ளிட்ட நகரங்களையும் அருகில் பெற்றுத் திக்ழ்கிறது. அருகிலுள்ள விமான நிலையமாக 48 கி.மீ தொலைவிலுள்ள மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nshankarghsperumal/மணல்தொட்டி&oldid=1942416" இலிருந்து மீள்விக்கப்பட்டது