பயனர்:P.Roshini/மணல்தொட்டி

சிங்கப்பூரர்களின் அடையாளங்கள்

சிங்கப்பூரருக்கு என்று ஒரு தனி அடையாளம் உண்டு. அந்த அடையாளம் எதை உள்ளடக்குகிறது? சிங்கப்பூரரின் அடையாளத்தின் பின்னணி என்ன? சிங்கப்பூரருக்கெனத் தனித்தன்மையான குணங்கள் இருப்பது அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அவற்றுள் சில மாற்றங்கள் அகம் சம்பந்தப்பட்டவை, சில புறம் சம்பந்தப்பட்டவை. பேசும் மொழி, உணவு, உடை, சிந்தனை, பழக்க வழக்கங்கள் எனச் சிங்கப்பூரர்கள் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர்த் தமிழர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் சிங்கப்பூருக்கே உரியவை. உதாரணத்துக்கு, ‘கூட்டாளி’ ‘இறைச்சி’ ‘பசியாறீட்டீங்களா’ போன்ற சொற்கள் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கே உரியவை என்று கூறலாம். சிங்கப்பூர்த் தமிழர்கள் ஆங்கிலம் கலக்காது தனித்தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். சிங்கப்பூர்த் தமிழர்கள் ஒருவித உடையைச் சிலுவார் என்றும், செருப்பு என்பதைச் ‘சப்பாத்து’, மகிழ்வுந்துவைக் ‘காடி’ என்றும், வாடகைக்கு என்பதைச் ‘சேவைக்கு’ என்றும் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுகிற விதமே வேறு மாதிரியாக இருக்கும். ‘காப்பி’ என்று சொல்ல மாட்டார்கள். ‘கோப்பி’, ‘கோப்பிக்கடை’ என்பார்கள். பலர் ‘லா’ போட்டும் பேசுவார்கள்.

சிங்கப்பூரர்கள் எங்கும் எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருப்பர். உதாரணத்திற்கு, வரிசையில் நிற்பது, பொது இடங்களில்,வங்கிகளில்,கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தங்கள் சேவைக்காக வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பதைப் பார்க்கலாம்.இதனைப் பார்த்துவிட்டு அயல் நாட்டினரே வியந்ததுண்டு.

சிங்கப்பூரர்கள் எதையும் மிகைப்படுத்திப் பேசுவதையோ, புகழ்வதையோ விரும்ப மாட்டார்கள் என்பது அவர்களின் இன்னொரு குணம்.உள்ளத்தை உள்ளட்டி பேச வேண்டும் என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள் சிங்கப்பூரர்கள்.அவர்கள் மாற்றிப் பேச மாட்டார்கள்.சொன்னபடி செய்வார்கள்.பெரும்பாலும் ‘இல்லை’ ‘முடியாது’ என்று சொல்லத் தயங்குகிறார்கள் மக்கள்.எல்லாவற்றுக்கும், ‘ஆம்’ ‘முடியும்’ என்று சொல்லிவிட்டு பின்னர் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.இன்னொரு சரியான தகவல் பரிமாற்றம்.ஆங்கிலத்தில் ‘கம்யூனிகேசன்’ என்று சொல்லப்படுகிற இந்தத் தகவல் பரிமாற்றம் சரியாய் இருக்க வேண்டும்.அதனைச் சிங்கப்பூரர்கள் சரியாய்ச் செய்ய ஓரளவேனும் முயல்கிறார்கள்.

சுற்றுலா இடங்கள், பல வகையான உணவு வகைகள், சிங்கப்பூரரைக் கட்டிக்காக்க வேண்டிய அம்சங்கள் எல்லாம் சிங்கையின் அடையாளத்திற்குப் பங்களிக்கின்றன.

சிங்கப்பூரில் நிறையப் பிரபலமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று கடற்சிங்கம் எனப்படும் மெர்லயன்.மெர்லயன் என்பது, மெர் =கடல், லயன் = சிங்கம் என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. சிங்கப்பூரிலுள்ள பெயர்ப்பலகைகளில் எல்லா மொழிகளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால், சிங்கப்பூரின் அடையாளமான கடற்சிங்கத்தைக் குறிக்க மெர்லயன் என்று கூறப்படுகிறது. இதன் உடற்பகுதியாகிய மீன், இக்குடியிருப்பு ஒரு மீனவக் குடியிருப்பாகத் தொடங்கியதைக் குறிக்கப் பயன்படுகிறது. அக்காலத்தில் இக்குடியிருப்புக்கு தெமாசேக் என்னும் ஜாவா மொழிப் பெயர் வழங்கியது. அதுமட்டுமல்லாமல்,சிங்கத்தலை அதன் முதற் பெயரான சிங்கபுரம் என்பதைக் குறிக்கிறது. சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் பயன்பாட்டுக்காக, நினைவுக் குழுவின் உறுப்பினரும், வான் கிளீஃப் கடல்வாழிகள் காட்சியகத்தின் பொறுப்பாளருமான அலெக் பிரேசர்-புரூணர் என்பார் இச்சின்னத்தை வடிவமைத்தார். இது 26 மார்ச் 1964 யிலிருந்து 1997 வரை பயன்பாட்டில் இருந்தது. 1997 -இல் சிங்கப்பூர் சுற்றுலாச் சபை அதன் சின்னத்தை மாற்றிவிட்ட போதும், சுற்றுலாச் சபையின் சட்டம் அச்சின்னத்தைப் பாதுகாத்து வருகிறது. இதனால், அச் சின்னத்தைப் பயன்படுத்துவதற்குச் சுற்றுலாச் சபையின் அனுமதி பெறப்படவேண்டும். சுற்றுலாச் சபையின் அனுமதி பெற்ற நினைவுப் பொருட்களாக மெர்லயன் இடம்பெற்றது.

அடுத்தது, சிங்கையிலுள்ள உணவு வகைகள்.சிங்கப்பூர் உணவுகளின் சொர்க்கம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. சில உணவுகள் சீன, மலாய் மற்றும் இந்தியச் சமையல் குறிப்புகள் கலந்தும் சில உணவு வகைகள் சிறப்பாகச் சமைக்கப்படுகின்றன.

கோழிச் சோறு

Hainanese Chicken Rice’ என்கிற சீன வகைக் கோழிச்சோறு, முதல் முதலில் வந்த சீனர்களின் தாக்கத்தினால் இங்கே அது தோன்றியது. தெற்குச் சீனாவில் ஹைனன் மாகாணத்தில் வாழ்ந்த சீனக் குடியேறிர்கள் இதை சிங்கப்பூரில் அறிமுகம் செய்தனர். பரவலாக சிங்கப்பூரர்களால் விரும்பி உண்ணப்படும் இவ்வுணவு வகையை மிகவும் சுலபமாகவே செய்ய இயலும். இதில், வேகவைத்த கோழி, மணம் நிறைந்த சாதம், சோயா சாஸ், மிளகாய் இஞ்சி பேஸ்ட் ஆகியவை உள்ளன. ருசியான இந்தக் கோழிச் சோற்றை எளிமையாகச் சிங்கப்பூரில் இருக்கும் பல உணவகங்களில் வாங்கிச் சாப்பிடலாம்.

ரோஜாக்

ரோஜாக், பலவகைப் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய சாலட் உணவாகும். வழக்கமாக, ரோஜாக் கூடுதலான இறால் விழுதுடன் பரிமாறப்படும், ஆதலால் கடுமையான வாசனையைத் தாங்கிக் கொள்ளமுடியாதவர்களுக்கு இது தகுந்த உணவல்ல. நான்கு வகையான ரோஜாக் இருக்கின்றன : பழ ரோஜாக், பினாங்கு ரோஜாக், சோதோங் கங்கோங் மற்றும் இந்தியர் ரோஜாக்.

பழ ரோஜாக் பொதுவாக வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், தண்ணிக்கிழங்கு (அல்லது மெக்சிகன் தெர்னிப்), பாசிமுளை (தவுகே) மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட டோஃபு (டோஃபு பொக் மற்றும் யூ தியாயூ) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ரோஜாக் மேல் ஊற்றப்படும் சாறு பெரும்பாலும் பெலாச்சான் (இறால் விழுது), நீர், சீனி, எலுமிச்சைச்சாறு, மிளகாய் ஆகியவற்றால் செய்யப்படும். அதன் மேல் நொறுக்கப்பட்ட வேர்க்கடலைத் தூள் தூவப்படும்.

பினாங்கு ரோஜாக் ஏறக்குறைய பழ ரோஜாக் போன்றது. ஆனால், இதில் கூடுதல் பொருட்களாகக் கொய்யாப்பழம், ரோஜா ஆப்பிள், மாங்காய் மற்றும் கணவாய்ப் பொறிகள் போன்றவை சேர்க்கப்படும். ரோஜாக்கான சாறு கெட்டியான குழம்புத் தன்மை உதாரணத்திற்கு கேரமல் கெட்டித்தன்மை போல் இருக்கும். சோதோங் கங்கோங் மலேசியா முழுதும் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இது பெரும்பாலான ஒட்டுக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும். இந்த ரோஜாக், கணவாய் (கணவாய் மீன்) மற்றும் நீர் கீரை (கங்கோங்), வெள்ளரிக்காய், டோஃபு, வேர்க்கடலை, மிளகாய் மற்றும் சோஸ் ஆகியவற்றால் செய்யப்படும்.

மாமாக் ரோஜாக் அல்லது பசும்போர் என்றும் அழைக்கப்படும் இந்தியர் ரோஜாக்கில், கெட்டியான இனிப்பும் காரமும் சேர்ந்த வேர்க்கடலை சாஸ் கலக்கப்படும். இதில் அவித்த கிழங்குகள், அவித்த முட்டைகள், பாசிமுளை (தவுகே) போன்ற பொருட்கள் சேர்க்கப்படும். சில இந்தியர் ரோஜாக்களில் டோஃபு, நன்கு பொறிக்கப்பட்ட பலகாரப் பொறிகள், இறால் பொறியல்கள் அல்லது கணவாய் பொறியல்கள் போன்ற பொருட்களும் சேர்க்கப்படும். உணவகங்களில், மாமா கடைகளில், நகரும் உணவு தள்ளுவண்டிகளில் மற்றும் ஒட்டுக் கடைகளில் விற்கப்படும் ஒரு பொதுவான உணவு வகை ரோஜாக் ஆகும்.

மீன் தலைக்கறி

இது ஒரு இந்திய உணவு வகை. தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் தான் இந்த உணவு தோற்றம் பெற்றது. காரமான குழம்பைத் தயாரித்து, அதில் காய்கறிகளோடு, சிவப்பு ஸ்நாப்பர் மீனின் (Red snapper fish) தலையை, சாதத்துடன் சாப்பிடப் பலர் விரும்புவர். லிட்டில் இந்தியாவில் உள்ள Banana Leaf Apollo, ரேஸ் கோர்ஸ் ரோடில் இருக்கும் Muthu’s Curry, ஆகிய உணவகங்களின் இந்த மீன் தலைக் கறி சிங்கப்பூரர்களால் மிகவும் விரும்பப்பட்டு, ருசிக்கப் படுகின்றது.

நாசி லமாக்

மலாய் உணவு வகையான நாசி லமாக்கில், வருத்த நெத்திலி, கொட்டைகள், வருத்த மீன், முட்டை, வெள்ளரிக்காய் ஆகியவை சாதத்தோடு கலந்திருக்கும். பலர், நாசி லமாக்கை மிளகாய் தொட்டு சாப்பிட விரும்புவார்கள். உணவகங்களில் வரி மட்டி (cockles) சம்பாலுடன் பொறித்த முட்டை, கணவாய் சம்பால், பொறித்த கோழி, ரெண்டாங், மீன் சம்பால் இன்னும் பலவற்றுடன் நாசி லெமாக் பரிமாறப்படுகின்றது. பெரும்பாலாண உணவு நிலையங்களில் இதை வாங்க இயலும். ஆடம் சாலை உணவு நிலையத்தில் தான் சிங்கப்பூரிலேயே மிகவும் புகழ்பெற்ற நாசி லமாக் கடை உள்ளது. நாசி லெமாக் மலாய் சமூகத்தினரின் உணவு வகைகளில் ஒன்றாகும். அது தேங்காய்ப் பாலிலும் பாண்டான் இலையைக் கொண்டும் சமைக்கப்படும் சோறு ஆகும்.

இறுதியாக, சிங்கப்பூரின் அடையாளங்களில் கட்டிக்காக்க வேண்டிய அம்சங்களுள் உள்ளடங்குவது சுத்தம் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு நம் நாடு பராமரிக்கப்படுகிறது. எங்கேயும் விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள் கிடையாது. எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள். ஆட்டோக்கள் இல்லாத நகரமாக இருக்கிறது சிங்கப்பூர். முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் எச்சரிக்கை செய்யும். இங்கே விதிக்கப்பட்டிருக்கும் அரசு விதிகளும் அதை மக்கள் மீற முடியாத அளவுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளும் ஆச்சரியத்தைத் தருகின்றன. மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூடப் பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. சாலைகள் அத்தனை சுத்தம்.

பொருளியலைப் பெருக்கி அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைக் கட்டிக் காத்தல், இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுச் சமூக ஒற்றுமையுடன் இருத்தல் முதலியவையும் சிங்கப்பூரின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.


இத்தகைய சிறப்புடைய சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்துப் பாடுபடுவோம்.


நன்றி : இராம.வயிரவன், துணைச் செயலாளர்,சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

          http://tour.nakkheeran.in/frmTourinner.aspx?Tid=35&Type=5 (Nakeeran)
          http://serangoontimes.com/2017/03/04/சிங்கப்பூரில்-சிங்கம்-இர/ (Seraadmin)
          http://singapore-traditions-and-culture.blogspot.sg/p/blog-page_31.html (Varsha Muthayah)
          http://eraniyanamrithainternetconference.blogspot.sg/2015/03/blog-post_98.html   (Amritha)    
          http://www.tsemrinpoche.com/tsem-tulku-rinpoche/travel/25-mouthwatering-dishes-of-malaysia-tamil.html 
          http://news.nus.edu.sg/sites/default/files/resources/news/2015/2015-01/2015-01-27/SAFEGUARD-tm-27jan-p4.pdf(Tamizhavel)
          https://www.know.cf/enciclopedia/tab/ta/மெர்லயன்/0df61d92c81be30d4250e11d6ef8156663e02719
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:P.Roshini/மணல்தொட்டி&oldid=2742957" இலிருந்து மீள்விக்கப்பட்டது