பயனர்:Ponjp/மணல்தொட்டி

சங்க இலக்கியத்தில் மன்னர்களின் வாழ்வியல் பொ.ஜெயப்பிரகாசம் உதவிப்பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை - 28

முன்னுரை மனிதனின் வாழ்வியல் குறித்த தேடல்கள் சங்க காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்து கொண்டே வருகின்றன.அத்தகைய வாழ்வியல் ஆதாரங்களை கல்வெட்டுகளிலும் ஏடுகளிலும் ஓலைகளிலுமே நம் முன்னோர்கள் பதிய வைத்துச் சென்றுள்ளனர்.இயற்கை அழிவுகள் போக மீதமுள்ள குறிப்புகளை வைத்தே மனிதனின் பாரம்பரியத்தை நாம் முடிவு செய்கிறோம்.கல்வெட்டுப் பதிவுகள் ஓலைப்பதிவுகள் அனைத்துமே இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஏடுகளாக மின்னுகின்றன.ஆனால் மனிதனின் வாழ்வியல் மட்டுமே வளர்ச்சியின் காரணமாக சிதைந்து போகின்றன.இயந்திர உலகத்தில் மனிதன் கருவிகளாக சுற்றி வருகிறான்.தன்னிலை மறந்து சுயத்தை இழந்து எது வாழ்க்கை முறை என்று தெரியாமல் ஓடும் சமூகமே நம் சமூகமாகத்தான் இருக்கும்.இதனைத் தேடும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது. சங்ககாலம் ஒரு பொற்காலம் தெரிவான வாழ்க்கை முறையைத் தேடும் முயற்;சியில் நாம் தோற்றுப்போனாலும் நமக்கான வாழ்க்கை முறையே தானே தேடி வந்து கொடுக்கும் ஓர் பெட்டகம்தான் சங்கஇலக்கியம்.ஆதி முதல் அந்தம் வரை ஒரு நெறிமுறையோடு வாழந்தவர்கள் நம் முன்னோர்கள்.அரசன் முதல் சாதாரண மக்கள் வரை நீதி நெறி தவறாது வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியம் நமக்கு பல்வகை சான்றுகளோடு தருகிறது.மனிதனுடைய வாழ்க்கையை அகம்ääபுறம் எனப் பிரித்து அதற்கென்று சில நெறிமுறைகளை வகுத்து அதிலிருந்து பிறழாமல் வாழ்ந்து காட்டியவர்கள் நம் முன்னோர்கள்.இரு வகையான இலக்கியங்களுமே அவற்றிற்கு பல சான்றுகளைத் தருகின்றன.சங்க நூல்களை எதை ஆராய்ந்து பார்த்தாலும் சிறந்த சிந்தனைகளையும் உயர்ந்த நாகரீகத்தையும் பார்க்க முடிகிறது.உலக இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் சமயம் சாரா இலக்கியங்கள் என்பது தெளிவாகத் தெரியும். சங்க காலத்தில்; நாட்டை ஆளும் மன்னர்கள் நீதிநெறியுடையவர்களாகத் திகழ்ந்தனர்.மக்களுக்கும் அறிவாளிகளுக்கும் உரிய கௌரவத்தையும் மரியாதையையும் கொடுத்தனர்.ஆகையால்தான் பெரும்பாலான அரசர்கள் இன்றளவும் வரலாற்றில் பேசப்படுகின்றனர்.இன்றைய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் தன்னிலை ஒன்றே தாம் வாழ்வு எனக் கருதி நாட்டையும் மக்களையும் சுரண்டி வாழ்வதைப் பார்க்க முடிகிறது.ஆனால் சங்க காலத்தில் “எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும் கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் மன் உயிர் அழிய யாண்டு பல மாறி தண் இயல் எழிலி தலையாது ஆயினும் வயிறு பசி கூர ஈயலன்

வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே!

என்ற பதிற்றுப்பத்து பாடலில் கூத்தர் பொருநர் பாணர் என யாராக இருந்தாலும் எவ்விதக் கலையிலும் வல்லவராக இல்லாமல் இருப்பினும் கொடுத்தலாகிய கடமையை மட்டும் நோக்கி செயல்படுவான்.அது மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர் வயிறு பசிக்கும்படி ஈயாமல் இருக்க மாட்டான்.அவற்றைப் பெற்ற அவன் தாய் உள்ளம் பாராட்ட என பொருள் விளங்கினாலும் சங்க காலத்தில் மக்களின் வாழ்க்கையை எந்த நிலையிலும் மாறுபாடு அடையாமல் பார்த்துக்கொள்ளும் அரசனின் உள்ளம் பாராட்டத்தக்கது ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் பலர் மில்லியின் டாலரில் சொத்துகளை சேகரித்து மக்களின் நலனைப் பார்க்காமல் இருப்பதைப் பார்க்கிறோம்.விரல் விட்டு கூட எண்ண முடியாதபடி நல் உள்ளம் படைத்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் எனபது வேதனைக்குரியது. இன்று பெரும்பாலான ஆட்சியாளர்கள் தன் சுய லாபத்திற்காக மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் நிலையைப் பார்க்க முடிகிறது.அதாவது அரசன் இறந்தாலோ அல்லது அரசனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதேனும் நடந்தாலோ அப்பாவி மக்களுக்கு காசு கொடுத்து மொட்டை அடிக்கச் செய்வதும் தற்கொலை செய்யத் தூண்டுவதம் போராட்டங்கள் நடத்தத் தூண்டுவதும் ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது.தான் ஆட்சி பீடத்தைப் பிடிப்பதும் அதனால் தன் வாழ்வாதாராத்தை மேம்படுத்துவதுமே இவர்களுடைய எண்ணமாக இருக்கிறது.ஆனால் சங்க காலத்தில் “உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நிழல் முமூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள! புலவுதி மாதோ நீயே பலரால் அத்தை நின் குறி இருந்தோரே என்ற புறநானூற்றுப் பாடலில் அரசன் மேல் உள்ள பக்தியின் காரணமாக மக்கள் அனைவரும் வடக்கிருந்து உயிர் நீத்தனர்.அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தான் காலம் கடந்த வந்து விட்டனே என ஒரு வீரன் ஏங்குவதாக அமைகிறது.இது போன்ற பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.இப்பாடலில் மக்கள் எந்த அளவு ஆட்சியாளன் மேல் அன்பு வைத்துள்ளார்கள் என்பதும் அரசன் எந்த அளவிற்கு உண்மையாக இருந்தான் இந்தச்செயலை மக்கள் செய்திருப்பார்கள் என்பதும் தெரியவருகிறது. சுரண்டல்கள் மிகுந்த இந்தச் சூழலில் ஒரு நாட்டையே தனக்குக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் அக்கால கட்டத்தில் இருந்தனர்.அதாவது அக்கால கட்ட அரசர்கள் மானத்துக்கும் வீரத்துக்கும் மட்டுமே தன்னை ஆட்படுத்துவார்களே ஒழிய இழிவாக வரக்கூடிய எந்தச் செல்வத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அதனைத்தான் “நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து வகுப்பவும் கொள்வன் கொல்லோ கோடு உயர் பிறங்கு மலை கெழ்இய நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனோ?

என்ற புறநானூற்றுப் பாடலில் உயர்ந்த சிகரங்களை உடைய பெரிய மலை பொருந்திய நாட்டையே கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளாதவன் அதியமான் என்றும் அவனின் நடுகல்லில் மாலையும்ääதோகையும் சூட்டினாலும் ஏற்றுக்கொள்வானா எனவும் அவனில்லா வாழும் நாட்கள் வெறுமையாக உள்ளது என்று கூறுகிறார் புலவர்.அத்தகைய மானத்தோடும் வீரத்தோடும் வாழ்ந்தவன் அதியமான் தனக்கு கொஞ்சம் காசு வந்தாலே அதற்குரிய வகையில் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வர்.அதாவது இன்றைய சூழலில் நட்சத்திர விடுதிகள் என்பது உயர்ந்த சமூகத்தாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் உரியதாக அமைந்து விட்டது.பல வகைப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டு அதில் கொஞ்சம் மட்டும் உண்ணப்பட்டு கழிவுகளாகப் போகின்றன.அதுமட்டுமல்ல வறுமை நிலையில் சேரியில் ஒரு வேலை சோறு கிடைத்தாலே புண்ணியம் என்று அருதி வாழ்பவரும் உளர்.இத்தகையோர் நிலையையே உணராத ஆட்சியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது சாத்தியமே இல்லை.வெறும் அரசியல் லாபத்திற்காக அத்தகைய செயலை செய்வது போல் பாவனை காட்டுபவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள்.ஆனால் சங்ககாலத்தில் தேரினை ஓட்டி வந்த தேர்ப்பாகனை விருந்தோம்பல் செய்து வழியனுப்புவதும்.இரவலர் எப்பொழுது வந்தாலும் உணவு சாப்பிடும் வாயில் திறந்திருப்பதும் மக்கள் பசித்திருப்பின் தானும் பசியோடு இறந்து உயிர்விட்ட ஆட்சியாளர்களை சங்க காலத்தில் மட்டுமே பார்க்க முடியும்.இதனைத் தான் “சிறிய கட் பெறினேääஎமக்கு ஈயும் மன்னே பெரிய கட் பெறினே யுhம் பாடääதான் மகிழ்ந்த உண்ணும் மன்னே சிறு சோற்றாலும் நனிபல கலத்தன் மன்னே பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன் என்ற ஒளவையார் பாடலில் அதியமானின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.அதாவது எத்தகைய உணவாக இருந்தாலும் அதை தனித்து உண்ணாமல் விருந்தினரோடு உண்ணும் நல் வழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.அது மட்டுமல்லாமல் அத்தகைய நிலையை உடைய மன்னர்களை இழந்து விட்டாமல் உணவு அருந்தாமல் தானும் உயிர் விட்டதை இலக்கியங்கள் கூறுகின்றனஏனெனில் விருந்தோம்பலில் தனிச்சிறப்பு பெற்றவர்கள் நம் மக்கள்.இது மட்டுமல்ல சமுதாயத்திற்கு பயன்பட்ட வாழ்க்கையே சங்க இலக்கிய மக்கள் விரும்பினர்.சான்றாக “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே” என்று அனைவரின் கடமையும் சமூக நலனே என்று பாடியது இலக்கியம்.இதைத்தான் குடும்பத் தலைவன்ääதலைவிääசமூகம் விரும்பியது.இதன் வழி வந்த நாம் தான் தன் கடமை எது என அறியாது வாழ்ந்து வருகிறோம். முடிவுரை “முறைசெய்து காப்பாற்றும் மன்னன் மக்கட்கு இறை யென்று வைக்கப்படும்” என்று வள்ளுவர் கூறுவார்.ஆகையால்தான் அவர்களை வேந்தன் என்று அழைக்கிறோம்.இந்த உலகத்தின் இயக்கமே வேந்தனின் நீதியிலும் ஆட்சி சிறப்பிலும் தான் இருக்கிறது. மன்னராட்சியோääமக்களாட்சியோ எதுவாக இருந்தாலும் ஆட்சியாளன் ஒருவன்தான்.அவன் கையில்தான் முழுஆதிக்கமும் இருக்கும்.தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் உன்னத நிலையை மன்னவன் பெறவேண்டும் என்பது எல்லோருடைய கூற்றாகும்.இதைத்தான் அனைத்து இலக்கியங்களும் வலியுறுத்துகிறது.இது போன்ற கருத்தரங்குகள்ääகட்டுரைகள் போன்றவை மக்களுக்கு சேரும் போது சமூகம் மாறுகிறதோ இல்லையோ தன் மனநிலையாவது கொஞ்சம் மாறும் .மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ponjp/மணல்தொட்டி&oldid=1816992" இலிருந்து மீள்விக்கப்பட்டது