பயனர்:Poorva Sandhiya/மணல்தொட்டி
பீட்டி உயர்நிலைப்பள்ளி
பீட்டி உயர்நிலைப்பள்ளி, 1953 -ஆம் ஆண்டில் கல்வித்துறையின் இயக்குநரான திரு ர்.ம் யாங் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பள்ளி சார் டேவிட் பீட்டியின் பெயரைக்கொண்டு விளங்குகிறது. அவர் இளம் வயதிலே கடற்படைத் தலைவராக விளங்கியவர். அவர் உலகப் போர் ஒன்றில் பல முறை சண்டையிட்டு வெற்றிபெற்ற தைரியமுடைய ஒரு கடற்படைத் தலைவர்.
இப்பள்ளி இதற்குமுன் பழைய ருமா மிஸ்கின் காவல் நிலையத்தின் அருகில் அதாவது சிராங்குன் சாலையில் அமைந்திருந்தது. இப்பொழுது உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பழைய பீட்டி உயர்நிலைப்பள்ளி அமைந்திருந்தது.
ஆரம்பித்தபோது 8 வகுப்புகளில் 323 மாணவர்களை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளிதான் பீட்டி உயர்நிலைப்பள்ளி. பார்ட்லி உயர்நிலைப் பள்ளியிலிருந்தும் விக்டோரியா கன்டினியுவெஸன் பள்ளியிலிருந்தும் மாணவர்கள் இங்குச் சேர்க்கப்பட்டார்கள்.
பீட்டி உயர்நிலைப்பள்ளி காலை வேளையிலும் மதிய வேளையிலும் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நடத்தப்பட்டது. 1954 -ஆம் ஆண்டு விக்டோரியா கன்டினியுவெஸன் பள்ளியிலிருந்து மீதி மாணவர்களும் ஆசிரியர்களும் இங்குச் சேர்க்கப்பட்டார்கள். அதோடு கன் எங் செங் உயர்நிலைப் பள்ளியிலிருந்தும் சிராங்குன் கன்டினியுவெஸன் பள்ளியிலிருந்தும் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அதன்பிறகு பீட்டி உயர்நிலைப் பள்ளியில் 23 வகுப்புகளும் அதில் 928 மாணவர்களும் இருந்தார்கள்.
1954 ஆம் ஆண்டு மதியம் நடந்து வந்த பிரிவு அகற்றப்பட்டுக் காலைப் பிரிவு மட்டுமே இயங்கியது. மதியம் நடந்த பிரிவு மற்றப் பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களுக்காக மட்டும் இயங்கியது. 1956 -லிருந்த மதிய வகுப்புகள் குவாங் அவன்யு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டன.
பீட்டி உயர்நிலைப்பள்ளியில் படித்த பெண் மாணவர்கள் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். அப்பொழுதிலிருந்து பீட்டி உயர்நிலைப் பள்ளி ஆண் பிள்ளைகள் மட்டும் படிக்கும் பள்ளியாக்கப்பட்டது. மறுபடியும் 1960 -இல் மதியக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. பின்பு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்தப் பள்ளி தோப் பாயோ வட்டாரத்திற்கு மாற்றப்பட்டது.
1983 -இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது புதிதாகக் கட்டப்பட்ட இந்தப் பள்ளி. அதே வருடத்தில் மீண்டும் பீட்டி உயர்நிலைப்பள்ளியில் பெண்கள் உயர்நிலை ஒன்றில் படிக்கச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 1992 -லிருந்து இந்தப் பள்ளி இப்பொழுது இருக்கும் பள்ளியைப்போல் செயல்பட ஆரம்பித்தது.
1996 -லிருந்து காலையில் மட்டும் செயல்படும் பள்ளியாக பீட்டி உயர்நிலைப்பள்ளி மறுபடியும் செயல்பட்டது. அப்பொழுது 40 வகுப்புகளுடன் 1,500 மாணவர்களோடு பள்ளி இயங்க ஆரம்பித்தது.
இப்பொழுது 2016 -ஆம் ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் பீட்டி உயர்நிலைப்பள்ளி 2017 -இல் பெலஸ்டியர் ஹில் உயர்நிலைப்பள்ளியுடன் சேர்ந்து இப்பொழுது ஒரே பள்ளியாக இயங்கி வருகிறது.
பெலஸ்டியர் உயர்நிலைப்பள்ளி இணைந்ததால் இன்னொரு நன்மையும் ஏற்பட்டுள்ளது. வேறு உயர்நிலைப்பள்ளியிலிருந்து காது கேட்காததுடன் வாய் பேச முடியாத மாணவர்கள் இங்குச் சேர்க்கப்பட்டார்கள்.
இந்த மாணவர்கள் இப்பொழுது பீட்டியில் சைகை மொழியைப் பயன்படுத்திப் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் பீட்டி உயர்நிலைப்பள்ளியின் வரலாறு ஆகும்.
credits: http://beattysec.moe.edu.sg/