பயனர்:Prakalya A S-2110386/மணல்தொட்டி
சிறுபஞ்சமூலம்:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து. இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது. காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21-ஆவதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட 37-ஆவது பாடல் பகுதி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஓலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37-ஆவது பாடல் மட்டும் இருக்கிறது.அந்த 37-ஆவது பாடலும், அதற்குப் பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.
நான்மணிக்கடிகை:
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
ஜி.யு.போப் இந்நூலின் 7, 100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”.நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை (தோள்வளை) போல இந்நூலின் ஒவ்வொரு பாடலும் நான்கு அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இதற்கு நான்மணிக்கடிகை எனத்தலைப்பிடப்பட்டது.
நான்கு செய்திகளைக் கூறும் அமைப்பு, சில பாடல்களில் மாறியுள்ளன. இந்நீதிநூலின் 7 மற்றும் 100ஆம் பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார்.நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார்.