பயனர்:Prasath0406/மணல்தொட்டி
கவிஞர் பசுவூர்க்கோபி
தொகுஈழத்தின் இலக்கியப்பரப்பில் மாத்திரமல்ல பூகோள நிலப்பரப்பெங்கணும் இன்று பரந்து வாழும் இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் நெடுந்தீவு பெற்றெடுத்த தவப்புதல்வனாய் “ஐயாக்குட்டி கோவிந்தநாதன்” அவர்களையும் பார்க்கலாம்.பசுவூர்க்கோபி என்ற புனை பெயரில் அழகிய ஆழமான கருத்துகள் செறிந்த கவிதைகளை எழுதி ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் வெளியிட்டுவந்தார் இவரின் முதலாவது கவிதை ஈழநாடு பத்திரிகையிலும் தொடர்ந்து உதயன் சஞ்சீவி போன்றவற்றிலும் வெளிவந்தன
இடையில் ஏற்பட்ட இவரின் புலம் பெயர்வுக்குப்பின் 2013இல் இருந்து இவரின் கவிதைகள் ஐரோப்பிய மண்ணில் வெளிவரும் கவிதை தொகுப்புகளிலும் இனையத்தளங்கலான லங்கா சிறி,தமிழன்,பதிவு,
எதிரி,வார்ப்பு,யாழ்நியூஸ்,ஆதியுலகம்,முகநூல் போன்றவற்றிலும் கவிஞரின் ஒலி ஒளி வடிவமான
கவிதைகள் ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சிகள் GTV, TTN ஆகியவற்றிலும் YouTube தளத்திலும் தமிழ் புரட்சி வானொலியிலும் வெளியாகியுள்ளன,தற்போதும் வெளிவந்துகொண்டுள்ளன..
கவிஞரின் குரலில் வெளியான ஒலி ஒளி கவிதைகளுள்..
தொகு“மாயான் கலண்டர்”
“உயிரோடு கரை தின்ற கடல்”
“அப்பு என்றுசொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்”
“கொலைக்களமான குமுதினி”
“முதல் கண்ட வெண்பனித்தூறல்”
போன்ற கவிதைகள் பலபேரின் பாராட்டுப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மேடைக்கவிஞருமாவார்.
இவரின் “வெண்பனித்தூறல்” கவிதை தமிழ்நாட்டில் பேராசிரியர் மு.பா அவர்களால் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்ச்சிக் கலாசாலையில் ஓங்கி ஒலித்தது.
வாழ்வியல்
தொகுஇவர் ஆரம்பக்கல்வியை யா/நெடுந்தீவு மேற்க்கு மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை யா/நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் உயர்நிலைக்கல்வியை கிளி/மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். அதன்பின் கிளி/திருவயாறு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.
இவரது தந்தையார் அமரர் கந்தையா ஐயாக்குட்டி அவர்கள் சமூக சேவையாளராக வாழ்ந்தவர் நெடுந்தீவு
கிராமசபை உறுப்பினராகவும் கிராமமுன்னேற்றசங்க தலைவராகவும் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை முகாமையாளராகவும் இருந்தவர்.
தற்போது கவிஞர் 1993ல் இருந்து நெடுந்தீவுக்கு Delft என பெயர் சூட்டிய ஒல்லாந்து நாட்டில் (நெதர்லாந்து) குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
கனடாவில் 27,07,2019ல் இவரின் கவி வரிகளில் வெளியான “நெடுந்தீவு அழகான தீவல்லவோ” பாடல் எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டது.
ஐரோப்பிய மண்ணில் நீண்டகாலத்துக்கு பின் காலாண்டு சஞ்சிகயான “ஆதியுலகம்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடதக்கது.. விரைவில் இவரின் கவிதை தொகுப்பு வெளிவரவுள்ளது.