பயனர்:Priyanka~tawiki/மணல்தொட்டி

        ஷிவனசமுத்ரா என்பது இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் மாவட்டமாகிய மன்த்யாவின் ஒரு சிறிய நகரமாகும். இந்நகரம் சாமராஜ்நகரின் எல்லையாக அமைந்திருக்கும் காவேரி நதியின் கரையில் அமைந்திருக்கிறது.மேலும் இந்நகரம் 1902ம் ஆண்டு ஆசியாவில் நிறுவப்பட்ட முதன்மையான நீர் மின் ஆற்றல் நிலையங்களின் ஒன்றின் இருப்பிடமாகும். 

அருவி:

       காவேரி நதி தக்காண பீட பூமியின் பாறையின் வழியாகவும் இடுக்கு வழியாகவும் பயணித்து ஷிவனசமுத்ரா அருவியாக உரு மாறுகிறது. தீவு நகரமாகிய ஷிவனசமுத்ரா நதியை இரட்டை அருவியாகப் பிரிக்கின்றது. இது நதியின் தொடர்கோவையில் நான்காவது பெரிய தீவை உருவாக்குகின்றது.இங்கு சில தொன்மையான கொவில்கலுள்ளன மற்றும் இவ்விடத்தில் ஒரு கிராமம் இருந்ததாகத் தெரிகின.                                 
        இது ஒரு பாகப்படுத்தப்பட்ட அருவியாம்.நீரோட்டமானது குன்றின் மேலிருந்து விழும் முன்னர் இரண்டு மூன்கால்வய்கலாகப் பிரிந்து அருகருகே பல்வேறு அருவிகளாய் விழுந்தால் அது பாகப்படுத்தப்பட்ட அருவி எனப்படும். இந்த அருவியின் சராசரி அகலம் 305 மீட்டரும், உயரம் 98 மீட்டரும் மற்றும் அதின் கொள்ளளவு 934 கன மீட்டரும் ஆகும்.இதனுடைய அதிகபட்சாமான பதிவு செய்யப்பட்ட  கொள்ளளவு வினாடிக்கு 18,887 கன மீட்டர் ஆகும்.இது ஒரு வற்றாத அருவியாகும்.ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையிலுள்ள பருவமழைக் காலத்தில் இந்த அருவியின் சிறந்த நீர்நிலை காணப்படும்.
        இந்த அருவியின் இடப்பகுதி ககனசுக்கி என்றும் வலப்பகுதி பாரசுக்கி என்றும் அழைக்கப்படுதல்  பொதுவான பிழையாகக் கருதப்படுகிறது. உண்மையில் பாரசுக்கி அருவி, ககனசுக்கி அருவியின் தென்மேற்குத் திசையில் சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவேரி நதியே தெற்குத் திசையில் கிழக்கு மேற்காக கிளை நதிகளாய்ப் பிரிவதே இதன் மூலக்காரணமாகும். காவேரி நதியின் மேற்குத்திசையின் கிளையானது இரட்டை அருவியான ககனசுக்கியாகவும் கிழக்குத் திசையின் கிளையானது பாரசுக்கி அருவியாகவும் உரு பெறுகின்றது.ஷிவனசமுத்ரா காவல் மேடையினின்று ககனசுக்கி அருவியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இது பெங்களுரு நகரத்தில் இருந்து 139 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Priyanka~tawiki/மணல்தொட்டி&oldid=1919669" இலிருந்து மீள்விக்கப்பட்டது