பயனர்:Puduvaivenkat23/மணல்தொட்டி
எங்கள் ஊர் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள புதுச்சேரி கிராமம் ஆகும். இது நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். நிலத்தடி நீர் இல்லாத காரணத்தால் மழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர். நெல் சாகுபடியே முதன்மையான தொழில் ஆகும். எங்கள் ஊரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் சிக்கல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊரில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கந்தசஷ்டி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அதில் ஆறாவது நாள் திருவிழாவாக வேல் வாங்குதல் காட்சி நடைபெரும். அந்த நிகழ்வின்போது சுவாமியின் உடலில் வியர்வைத்துலிகள் காணப்படும். இதை ஒரு அற்புதமான நிகழ்வாக அனைவாக அனைவரும் கண்டுகளிப்பார்கள்.