பயனர்:R.sathaprabadevi/மணல்தொட்டி

எங்கள் கிராமத்தின் பெயர் ஆறுமுகக்கவுண்டணூர் ஆகும்.இது கோவை மாவட்டம் பேரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.இது பேரூர் வழியாக கோவைப்புதூர் செல்லும் சாலையில் உள்ளது. ஏறக்குறைய 2000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஓர் அமைதியான கிராமம்.இங்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது.இங்கு ஓர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.அதில் சுமார் 280 குழந்தைகள் கல்வி கற்று பயன் பெறுகின்றனர்.இரண்டு அங்கன்வாடி இயங்கி வருகிறது.உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கு அருகில் உள்ள சுண்டக்காமுத்தூர் அல்லது பேரூர் சென்றுவருகின்றனர்.சமீபக்காலமாக கோவை நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த கிராமத்தில் பெண்கள் வீட்டில் இருந்தப்படியே பாசிகோர்த்தும் வருவாய் ஈட்டிவருகின்றனர்.தற்போது கல்வி கற்றவர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதால் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.இக்கிராமத்தின் அருகில் புராண சிறப்பு மிக்க பேரூர் பட்டீசுவரர் கோவில் உள்ளது.4கி.மீ.தொலைவில் கோவைக்கொண்டாட்டம் உள்ளது.இக்கிராமத்தில் ஜாதி மத பேதமின்றி அனைவரும் நட்புடன் பழகி வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:R.sathaprabadevi/மணல்தொட்டி&oldid=1948631" இலிருந்து மீள்விக்கப்பட்டது