பயனர்:Rajanikhil/மணல்தொட்டி

மலர் அமுதன் (Malar Amuthan)

தொகு

மலர்அமுதன் (Malar Amuthan)[1] [2] – பிறப்பு 1961, தமிழகத்தில் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பணியாற்றும் பத்திரிகையாளர். தமிழ்நாட்டில் சமசீரற்ற வளர்ச்சி, இயற்கை மீதான வன்முறை, சார்பு நிறைந்த செயல்பாடு, ஏற்றத்தாழ்வான சமூகம், வளர்ச்சிகளில் தடை போன்றவற்றை விமர்சித்து களையும் வகையில், பல்லாயிரம் செய்திகளை எழுதியுள்ளார். தினமலர் நாளிதழ் நிர்வாகத்தின் மாணவர் இதழான ‘பட்டம்’ சிறுவர் இணைப்பு இதழான ‘சிறுவர்மலர்’ ஆகியவற்றில் முதன்மை பொறுப்புகளை வகித்தவர்.

பிரபல சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போராட்ட வாழ்க்கையை மையமாக்கி எழுதப்பட்ட, ‘நிலமடந்தைக்கு’ என்ற நூலுக்கும், பிரபல பத்திரிகை நிறுவன அதிபரும், நாணயவியல் அறிஞருமான முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை சுவடான, ‘சங்ககால நாணயவியலி்ன் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலுக்கும் தொகுப்பு மற்றும் செம்மையாக்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் வறுமையில் வசிக்கும் பெண்களின் நலக் குறைபாடு பற்றி எழுதிய கட்டுரைகளுக்காக, பானோஸ் சவுத்ஆசியா Panos South Asia என்ற நிறுவனம், பெல்லோஷிப் வழங்கியுள்ளது. பானோஸ் சவுத் ஆசியா என்பது பத்திரிகை செய்திகளை ஆய்வு செய்யும் பானோஸ் லண்டன் Panos London என்ற நிறுவனத்தின் ஆசிய கண்ட கிளை அமைப்பு ஆகும்.

குடும்பக் குறிப்பு

தொகு

மலர்அமுதன் பெற்றோர் ராஜாமணி – செல்லத்தாய். சுயசார்பான விவசாயக்குடும்பம். தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலடிவிளை என்ற பெருமாள்புரம் கிராமத்தில் பிறந்தார்.

  1. https://www.sbs.com.au/language/tamil/audio/karunanidhi-concerned-over-cji-s-remark
  2. https://www.dinamalar.com/news_detail.asp?id=1206024&Print=1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajanikhil/மணல்தொட்டி&oldid=3047589" இலிருந்து மீள்விக்கப்பட்டது