பயனர்:Rajeevecpr/மணல்தொட்டி

தெ.கள்ளிப்பட்டி

இருப்பிடம்: தெ.கள்ளிப்பட்டி.

அமைவிடம்

நாடு: இந்தியா

மாநிலம்: தமிழ்நாடு

ஆளுநர்: கொனியேட்டி ரோசைய்யா

முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி

மாவட்டம்: தேனி

மாவட்டஆட்சியர்:எஸ்.நாகராஜன்

வட்டம்: பெரியகுளம்

பேரூராட்சி: தென்கரை

மக்கள் தொகை: சுமார்

நேர வலயம்:


தெ.கள்ளிப்பட்டி(ஆங்கிலம்:T.kallipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.

Map

பெயர்க்காரணம்

தொகு

இவ்வூர்ப் பகுதியில் பெரும்பான்மையாக வறண்ட நிலத் தாவரங்களான கள்ளிச்செடிகள் (சப்பாத்திக் கள்ளி மற்றும் பிரண்டைக் கள்ளி) அதிகமாக காணப்பட்டதால் கள்ளிப்பட்டி என்ற பெயர் பெற்றது.

அமைவிடம்

தொகு

இவ்வூர் மாவட்ட தலைநகரமான தேனி மாவட்டத்திலிருந்து கம்பம்-திண்டுக்கல் சாலையில் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சிமலைதொடர் அமைந்துள்ளது. தனிமலையாக மாவூத்து மலையும், கைலாசநாதர் கரடு என்ற குன்றும் அமைந்துள்ளது.

சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் தீட்டம் மற்றும் பாசனத் திட்டத்தின் மூலம் ஒரு காவாயும் செல்கிறது. கிழக்குப் பகுதியில் “செவக்காடு” என்று அழைக்கப்படும் செம்மண் நிறைந்த புன்செய் நிலக் காடுகள் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் கைலாசபட்டியும் வடக்கு மேற்குப்பகுதியில் நன்செய் நிலப்பகுதியும் வயல் நிலங்களும் அமைந்துள்ளது.

தொழில்கள்

தொகு

இங்கு விவசாயம் பொதுவான தொழிலாக உள்ளது. நெல்,கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. மேற்குப் பகுதியில் மாந்தோப்புகள் நிறந்து காணப்படுவதால் மாம்பழம் பறித்தல் மற்றும் அது சார்ந்த தொழில்களும் அந்தப் பருவத்தில் நடைபெறுகின்றன.

கலாச்சாரம்

தொகு

இவ்வூர் மேலமந்தை, கீழ மந்தை என இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் வெவ்வேறு பிரிவினர் உள்ளனர். கீழ மந்தைப் பகுதியில் முத்தையா-கருப்பையா கோவிலும், மேலமந்தைப் பகுதியில் முத்தாலம்மான் கோவிலும் பிரதானக் கோவில்களாக இவ்வூரில் விளங்குகின்றன. கீழ மந்தைப் பகுதியில் உள்ள முத்தையா-கருப்பையா கோவில் திருவிழாவில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு வருடம் அந்தக் கோவில் திருவிழாவாக கொண்டாடப்படும். அடுத்த வருடம் “வேட்டை திருவிழா” வாகக் கொண்டாடப்படுகிறது. இது இவ்வூர்மக்களின் வீரத்தை பறைசாற்றுவதாக இவ்வூர் மக்கள் கருதுகின்றனர். இதன் படி இவ்வூரில் உள்ள பெரியவர்கள் இளைஞர்களெல்லாம் கட்டுசோறு எனப்படும் கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு மேற்குப் பகுதி மலைக்குச் சென்று இரவு அங்கே தங்கி அதிகாலையில் மலைப்பகுதியில் உள்ள விலங்குகள் நீர் அருந்த்த வரும் வேளையில் அவற்றை வேட்டையாடி ஊர்வலமாக கொண்டு வந்து ஊர்மாக்கள் எல்லாருக்கும் அந்த விலங்குகளின் மாமிச உணவை பங்கிட்டு வழங்கி உண்டு வெற்றியின் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் தற்போது இந்த வேட்டைத் திருவிழா தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

கள்ளிப்பட்டியின் பிரபலங்கள்

தொகு

சு.குப்புசாமி எழுத்தாளர், இலக்கியவாதி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajeevecpr/மணல்தொட்டி&oldid=3064103" இலிருந்து மீள்விக்கப்பட்டது