பயனர்:Rajeshteacher2015/மணல்தொட்டி
தருக்க கணிதம் (Logical Mathematics)
தொகுதருக்கம் என்பது பல வகையான விவாதங்களை உள்ளடக்கியது. அவை சட்ட ரீதியானதாகவோ, கணித நிரூபணமாகவோ, அறிவியல் கொள்கைகளின் முடிவுகளாகவோ இருக்கலாம். தருக்க கணிதம் உருவாக்கத்தில் முக்கிய பங்கு ஆற்றிய கணிதவியலாளர்கள் சிலர் அரிஸ்டாட்டில் (Aristotle), லீபினிட்ஸ் (Liebnitz), ஜார்ஜ் பூல் (George Boole) மற்றும் டீ மார்கன் (De Morgan) போன்றோர்களால் செம்மைப் படுத்தப்பட்டது. இது அறிவியலின் பல்வேறு கிளைகளில் பயன்படுகிறது. முக்கியமாக கணினி அறிவியலில் தருக்க கணிதம் அளப்பறிய பங்காற்றுகிறது. தருக்க கூற்று (Logical Statement) தருக்க கூற்று என்பது ஒரு வாக்கியமாகும். இதன் பொருள் உண்மையாயிருக்கலாம் அல்லது தவறாயிருக்கலாம். ஆனால் இரண்டும் கலந்து இருத்தல் கூடாது. (உ.ம்) 1. ரோஜா ஒரு பூ என்பது ஒரு தருக்க கூற்று 2. ரோஜா எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது ஒரு தருக்க கூற்று அல்ல. அடிப்படை தருக்க இணைப்புகள் (Logical Connectives) 1. இணையல் (Conjunction) 2. பிாிப்பிணைவு (Disjunction) 3. மறுப்பு (Negation)