பயனர்:RajiRajeswari1977/மணல்தொட்டி

ராம்கோ  பொறியியல்  கல்லூரி, ராஜபாளையம்  என்ற கல்வி நிறுவனம் ஸ்ரீ. பி. ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களால் 2013 ஆம் ஆண்டு ராம்கோ பொறியியல் கல்லூரி (ஆர் .ஐ . டி)நிறுவப்பட்டது . முதல்வர் பேராசிரியர்  எல் .கணேசன் கல்லுரியின்  நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார்.  ராம்கோ குழுமத்தின் தலைவரும் கல்லூரி ஆட்சிக்குழு தலைவருமான ஸ்ரீ பி .ஆர் .வெங்கட்ராம ராஜா கல்லூரியை நடத்துவதற்கு ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குகிறார் .  

ராஜா சேரிட்டி டிரஸ்ட்  மூலம் இந்தக்கல்லூரி  நிறுவப்பட்டது. வித்யா விந்ததே வீரியம் (அறிவு அதிகாரமளிக்கிறது ) என்ற அதன் பொன்மொழியின்படி இந்நிறுவனம் மாணவர்களை வாழ்நாள் முழுதும் கற்றல் மற்றும் தொழில் துறையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்பத் தயார்படுத்துகிறது.  வேலைவாய்ப்புக்கு தகுதியான பொறியாளர்களை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இந்தக்கல்லூரி சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு ஏ.ஐ .சி .டி. இ. ஆல்   அங்கீகரிக்கப்பட்ட நான்காண்டு இளங்கலை பொறியியல் பாடத்திட்டங்களை வழங்குகிறது. வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற பயிற்சி  பெறுகின்றனர்.


கல்லூரி வழங்கும் படிப்புகள் தொகு

  • பி .இ . சிவில்  இன்ஜினியரிங் (60  இடங்கள்  )
  • பி. இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (120  இடங்கள் )
  • பி.இ.  எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் (60  இடங்கள் )
  • பி .இ. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் (120  இடங்கள் )
  • பி.இ. மெக்கானிக்கல்    இன்ஜினியரிங் (60  இடங்கள் )
  • பி டெக் .ஆர்டிபிசியல்  இன்லிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (120 ) இடங்கள்
  • பி டெக் .கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம்ஸ் (60  இடங்கள்)
  • பி.டெக் . இன்பார்மேஷன் டெக்னாலஜி (60  இடங்கள் )

மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கல்லூரி வழங்குகிறது . மேலும் ராம்கோ சிமெண்ட்ஸ் , ராம்கோ சிஸ்டம்ஸ் , கார்  டெக்னாலஜிஸ் ,விப்ப்ரோ, சோகோ,உள்ளிட்ட பல நிறுவனகளுக்கு கல்லூரி வளாகத்திலிருந்து  மாணவர்களை பணியமர்த்துகின்றன .

சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்கள் தொகு

இந்தக்கல்லுரி NAAC -ஆல் அங்கீகாரம் பெற்றது ,மற்றும் ISO  9001 -2015 ஆல் சான்றளிக்கப்பட்டது. CSE , EEE ,ECE . துறைகள் மற்றும் மெக்கானிக்கல்  இன்ஜினீரிங் படிப்புகள்   NBA  ஆல் அங்கீகாரம் பெற்றவை .


புதிய ஆர்டிபிசியல் இன்லிஜின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆய்வகம் தொகு

இந்தத் திட்டம்  ராம்கோ நிறுவனம் ஆர்டிபிசியல்  இன்லிஜின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் துறைக்கான ஒரு ஆய்வகத்தை  நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. திட்டத்தின் முதன்மை நோக்கம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் டிஜிட்டல் திறன்  மேம்பாடு ஆகும்.

இந்த ஆய்வகம் உறுப்பினர்களின் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபடவும் அனுமதிக்கும் வசதி வடிவைமைப்பு பாடத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப இருந்தது.

ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

இது  இப்போது RIT  மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சியை வழங்குகிறது. மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி திட்டங்களை நடத்துகிறது.

இறுதியாக,இது  இணைய அடிப்படையிலான அரசு தேர்வுகள் மற்றும் பல போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யவும் பயன்படுகிறது.


எதிர்கால திட்டங்கள் தொகு

வரும் கல்வி ஆண்டுகளில் இந்த ஆய்வகத்தை ஆர்டிபிசியால் இன்டலின்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் -இல் சிறந்து  விளங்கும் மையமாக உருவாக்குவதே  இதன் இலக்காகும் .  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RajiRajeswari1977/மணல்தொட்டி&oldid=3911930" இலிருந்து மீள்விக்கப்பட்டது