பயனர்:Rajinikumara/மணல்தொட்டி

கடவுள் சின்னக்கண்ணம்மன்

தொகு

கடவுள் சின்னக்கண்ணம்மன்

கலியுகத்தில் காட்சி தந்த கடவுள் அருள்மிகு சின்னக்கண்ணம்மன்!

இது ஓர் உண்மைச் சம்பவம்!

29.03.1953 நாளிட்ட, தெய்வத்திரு, ஆ. குப்புசாமி பிள்ளை அவர்களின் கைப்பட எழுதிய சுய சரித்திரத்தில், பக்கம் 460 முதல் 470 வரையுள்ள ஆதாரத்தின் படி, சென்னை, சூளை, தட்டான்குளம், குழந்தை (ஆச்சாரி) தெரு, எண்:15/19 - இல் கோவில் கொண்டு அருள்பாலிக்கும், சென்னை ஆதி பராசக்தி, அருள்மிகு சின்னக்கண்ணம்மன் அன்னாருக்கு நேரில் காட்சி தந்து, அவருடைய சங்கடத்தைத் தீர்த்த சம்பவத்தை தெரிந்து கொள்வோம். மேற்படி முகவரியில் உள்ள வீட்டிற்கு பட்டா கிடையாது. திரு. ஆ. குப்புசாமி பிள்ளை (மேற்படி தொகுதியில் காந்தி காங்கிரஸில் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதற்கான் ஆதாரம், 4.4.1950 ஆம் நாளன்று வந்த தமிழ் தினசரி பத்திரிக்கையில் செய்தி பிரசுரமானதும் குறிப்பிடலாம்) அவர்கள் தன் பெயருக்கு கிரையம் வாங்க பத்திரம் தயாரித்து, திரு. சாமிநாதய்யர், அவர்கள் முன்னிலையில் பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப் போகையில் ரூ. 5-க்கான முத்திரைத்தாள் குறைந்து பத்திரம் பதிவுறாமல் போனது. அதற்காக அக்கால கட்டத்தில் தேனாம்பேட்டையில், இருந்த ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் செகன்ட் லைன் பீச் அருகில் இருந்த (இருக்கும்) மாவட்ட ஆட்சியர் (முத்திரை) அலுவலகத்திற்கும் திரிந்தும் பத்திரம் கிடைக்காமல், குறைந்த முத்திரைத் தாளுக்கு கட்டணமாக் (ரொக்கப் பணம்) வசூலிக்காமலும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் பத்திரம் பதிவுறாமல், கிறையம் தருபவர்களும், சாட்சிகளும் வீணே திரும்ப வந்துவிட்டனர்.

அன்றிரவு, பிள்ளை அவர்கள் கவலையுடன் படுத்திருந்தார். அதிகாலை சுமார் 3 மணியளவில், அவர் முன் அம்மன் ஆதிபராசக்தி அருள்மிகு சின்னக்கண்ணம்மன் தோன்றினாள். இது அவருடைய சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அம்மன் மகுடாசூர வர்த்தின ரூபம் 10 கரங்களும், கரங்கள்தோறும் சகலவித ஆயுதங்களும் கழுத்திலிருந்து கால்வரை, புஷ்ப ஆரத்துடன், மற்றும் அநேக மனித சிரங்களை,மாலையாக அனிந்து, குளிர்ந்த முகத்துடன் ப்ரசன்னமானபோது, பிள்ளை அவர்கள் விழுந்து வணங்கினார். அப்போது அம்மன் சில கேள்விகள் கேட்டது? நீர் இந்த வீட்டை வாங்க வந்தது எனக்கு மன மகிழ்ச்சியானது. என் பொருள் உனக்கு சொந்தம், ஆனால், நீர் தான் அங்கு குடிகொண்டு இருந்தும் என்னை, அலட்சியம் செய்து, என்னை நீக்கி நீர், கிரையம் பெற போனால் உனக்கு எவ்வாறு நன்மை உண்டாகும் என்று தான் புராதானமாக, தான் மண்ணில் புதைப்பட்டதும், மறுபடி ஒருயிடத்தில் விளையாட்டுப்பிள்ளைகள் என்னை வைத்து வேடிக்கை விளையாட்டாக கொண்டாடினதும், நான் மனம் வாடினதும், இதைப்பற்றி மூன்றாவது வீட்டில் எதிரிலுள்ள இடத்தில் அந்த மனை சொந்தக்காரரிடம் போய் கேட்டதும், அந்தம்மாள் ஊரில் கிடக்கும் அனாதைகளுக்கு நான் தங்க இடம் குடுப்பதுதான் வழக்கமா என்று, தான் துடப்பத்தை எடுத்துக் காட்டினதும், அப்போதே அம்மையார் சர்ப்ப உரு கொண்டு தீண்டினதும், கோயில் குடி கொள்ள இடம் வேண்டி, என்னையும் சேர்த்து நீர் கிரையம் வாங்கினால், என் சங்கடமும் தீரும். உன் சங்டமும் நான் ஏற்றுக்கொண்டு நாளை காலை, பத்திரம் பதிவாகி விடும்.

எழுந்திரு! இந்த வீட்டில் ஒரு பத்திரம் இருப்பது, அந்த பத்திரம் இதற்கு முந்தின பத்திரம். இந்த கிரையப் பத்திரத்தின் கடைசி 5 ரூபாய் பத்திரத்தில் சொத்து ஜாபிதா எழுதியிருப்பதை எடுத்துவிடு. இப்போது வாங்கும் பத்திரம், 10 ரூபாய் மதிப்பானது. அதைப்போய் வாங்கிக்கொள். அந்தப் பத்திரம் இந்த இடத்தில் இருக்கும் என்பது வைத்திருப்பவருக்கும் தெரியாது. அதை வாங்கிச்சென்று, ஜாபிதா எழுதி இதில் இருக்கும் அருள்மிகு சின்னக்கண்ணம்மையார் என்றும் ஆதிபராசக்தியின் உருவ சிலை விக்கிரகத்தை நாங்கள் இதுவரை எங்கள் சொந்த செலவில் பூஜை செய்து வந்தோம். அதன் உரிமைகளையும், தாங்களுக்கு அந்த கல் விக்கிரக பராசக்தியின் உருவ சிலை விக்கிரக பராசக்தியின் உருவச் சிலையும் நீங்களே அடைந்து கொள்வது. இதில் எங்களுக்காவது எங்கள் வாரிசுதாரர்களுக்காவது எவ்வித பாத்தியதையும் கிடையாது. இந்த அம்மனை நாங்கள் ப்ரதிஷ்டை செய்து, இருக்கின்ற இடத்தில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்றவோ, அதே இடத்தில் ஸ்தாபிதம் செய்யவோ, உங்களுக்கு உரிமை என்று எழுதி பத்திரத்தை முடி. என் பாத்தியதையும் அவர்கள் கொண்டாடவொட்டமல் உன் சொந்தமாக்கிக் கொள். பயப்படாதே! என்று பகிரங்க ரூபத்துடன் தோன்றி அம்பாள் மறைந்தாள்.

அம்மன் அருளியபடி திரு. பிள்ளை அவர்களின் நண்பர் திரு. சுப்ரமணிய முதலியார் அவர்களும் சேர்ந்து சென்று ரூபாய் 10-க்கான் பத்திரத்தை பெற்றுக்கொண்டு (பத்திரம் வைத்திருப்பவருக்கே அம்மன் சொன்ன இடத்தை அவர் வீட்டில், அங்கு இருந்தது தெரிய வந்ததாம்) பிறகு, பொழுது விடிந்ததும் காலை எட்டு மணி அளவில், குப்புசாமி பிள்ளையும் சங்கடம் தீர்த்த சின்னக்கண்ணம்மன் அருளால், கிரையப் பத்திரம் நன்முறையில் பத்திரம் பதிவு செய்யப் பட்டது.

குப்புசாமி பிள்ளை அவர்கள் 21.11.1967 ஆம் நாளில் அம்மன் குடிகொண்டுள்ள சன்னதி இடத்திலே இயற்கை எய்தினார். முக்கிய குறிப்பு: சட்டப்படியும் 60 ஆண்டு பழமையான் ஆவணம் "முதல் நிலை ஆவணமாக் நிரூபிக்கலாம்". அவ்வகையில் திரு. ஆ குப்புச்சாமி பிள்ளை அவர்களின் சுயசரிதையும் உண்மை என்று ஊர்ஜிதம் செய்யலாம். மற்றொன்று, சுயசரிதை எழுதியவர் அமரத்துவத்திற்கு பிறகு அன்னாருடைய சுயசரிதை வெளியிடப்படுவதால் நம்பகத்தன்மையும், தெய்வீக காட்சி சொரூபமும், உண்மை என்பது மறுக்க முடியாதது ஆகும்.

உண்மையுடன், ஏ. கே. கமலக்கண்ணன், பி.ஏ., பி.எல்., வழக்கறிஞர், எண் 71/14, (பழைய எண் 269/14), உதயம் காலனி, 18-வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600040. தமிழ்நாடு, இந்தியா. மொபைல்: +91 9940477376

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajinikumara/மணல்தொட்டி&oldid=1563392" இலிருந்து மீள்விக்கப்பட்டது